Wednesday, 11 August 2021

மங்கு

மங்கு வருவதற்கான காரணங்கள் ஹார்மோன் பிரச்சனையாகவோ, ஒழுங்கற்ற மாதவிடாய் காரணத்தினாலோ அல்லது மெனோபாஸ் காலத்திலோ வரக்கூடும். அதிகப்படியான சூரிய ஒளி நேரடியாக முகத்தைதாக்கும் போதும் மங்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்கிறார்க சரும பராமரிப்பு நிபுணர்கள்.வெயில் அதிகமாக உள்ள இடங்களில் வசிப்பவர்களுக்கு மங்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உண்டு.


 



முதலில் முகத்தில் குறிப்பாக கன்னங்களில் படைபோல் வரக்கூடும். பிறகு சரும நிறம் மாறி கருத்துவிடக்கூடும். பிறகு முகத்திலும், கை கால்களிலும் பரவக்கூடும். இந்த மங்கு பெண்களுக்கு மட்டுமல்லாமல் ஆண்களுக்கும் வரக்கூடும். இந்த மங்குவை போக்க என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.


​மங்கு நீக்கும் வில்வக்காய்



வில்வக்காய் வாங்கி வந்து நறுக்கி பசும்பால் காய்ச்சாமல் நீர்விடாமல் அரைத்து முகம் முழுக்க பூசவும். குறிப்பாக மங்கு இருக்கும் இடங்களில் பூசி கொள்ளவும். ஒரு மணி நேரம் வரையாவது காய வேண்டும். அல்லது இரவு நேரங்களில் இதை பூசி கொள்வதன் மூலம் இதன் பயன்கள் வேகமாக கிடைக்கும். தொடர்ந்து மங்கு கறை மறையும் வரை தடவிவந்தால் மங்கு நீங்குவதை நிச்சயம் உணர்வீர்கள்.


​மங்கு நீக்கும் நித்தியமல்லி



நித்தியமல்லி பூக்களை எல்லோரும் அறிவோம். இந்த பூக்களின் இலைகள் 5 எடுத்து சுத்தமாக கழுவி மைய அரைக்கவும். இந்த விழுதுடன் சம அளவு வெண்ணெய் அல்லது பால் ஏடு கலந்து வைக்கவும். இரவு தூங்கும் போது மங்கு இருக்கும் இடத்தில் தேய்த்து விடவும்.



காலையில் மந்தமான நீரில் கழுவி எடுக்கவும். பிறகு ஆலிவ் எண்ணெய் கொண்டு அந்த இடத்தில் மசாஜ் செய்து பிறகு அரை மணி நேரம் கழித்து குளித்தால் நாளடைவில் மங்கு பிரச்சனை சரியாகும்.


​மங்கு நீக்க கசகசா



மாதவிடாய் நிற்கும் காலத்தில் வரக்கூடிய மங்கு பிரச்சனையை போக்க கசகசா உதவக்கூடும். ஒரு டீஸ்பூன் கசகசாவை எடுத்து அதில் வேப்பங்கொட்டை 2 இடித்து, துளசி இலை 5 எடுத்து அனைத்தையும் சேர்த்து அரைத்து பாசிப்பருப்பு மாவை கலந்து நன்றாக பேஸ்ட் போல் ஆக்கி முகத்தில் தடவி கொள்ளவும்.



இரண்டு மணீ நேரம் வரை அப்படியே உலரலாம். அல்லது இரவு நேரத்தில் இதை போட்டு கொண்டு மறுநாள் காலை மந்தமான நீரில் கழுவி எடுக்கலாம். தொடர்ந்து மங்கு நீங்கும் வரை இதை செய்துவரலாம்.


​மங்கு நீக்க கஞ்சி நீர்



மங்கு நீக்க சோறுவடித்த கஞ்சியை பயன்படுத்தலாம். புழுங்கல் அரிசியை வேகவைத்த கஞ்சி நீர் கெட்டியாக ஆகும் வரை வைத்திருந்து அதில் மஞ்சள் தூள், வெண்ணெய் இரண்டையும் சம அளவு கலந்து மசாஜ் போன்று மங்கு இருக்கும் இடத்தில் தேய்க்கவும். தினமும் இரண்டு வேளை இப்படி தொடர்ந்து செய்துவந்தால் மங்கு நீங்குவதை உணர்வீர்கள்.


​மங்கு நீக்க திப்பிலி



திப்பிலி உள்ளுக்கு சிறந்த பலன்களை கொடுப்பது போன்று அது மங்கு நீக்கவும் பயன்படும். திப்பிலி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். அதை வாங்கி இலேசாக வறுத்து பொடிக்கவும். பிறகு தேனை கலந்து நன்றாக குழைத்து மங்கு இருக்கும் இடத்தில் தடவி விடவும். இது இரண்டு மணி நேரம் வரை ஊறவேண்டும். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவி விடவும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இதுபோல் செய்து வந்தால் மங்கு நீங்கும்.



முகம் மென்மையா, மிருதுவா இருக்க நெய்யை இப்படி பயன்படுத்துங்க, ஆயுர்வேதம் தரும் அழகு குறிப்பு!



பொதுவாக சிலருக்கு மங்கு வந்தாலும் தானாக சரியாகிவிடவும் கூடும். கை வைத்தியம் மூலம் மங்கு தீவிரமாவதை தடுக்கலாம். அதே நேரம் மங்கு குறையாமல் அதிகரித்துகொண்டே சென்றால் மருத்துவரிடம் சென்று பீல்ஸ் சிகிச்சை செய்து வெளியேற்றலாம



No comments:

Post a Comment