Thursday 19 August 2021
கம்மவார் குலதெய்வ வரலாற
கம்மவார் குலதெய்வ வரலாறு.
கிருதயவீர்யன் காலத்திற்கு பின் மகிஷ்மதி நகரை தலைநகராக்கி தவத்தின் வலிமையால் தத்தாத்ரேயரின் வரத்தால் ஆயிரம் கரங்களுடன் ஆட்சி செய்து வந்த கார்த்தவீர்ய மகாராஜா(கம்மவார்களின் முன்னோர்) 85ஆயிரம் ஆண்டுகள் உலகின் 56 தேசங்களுக்கும் அதிபதியாக இருந்து நீதி அரசராக திகழ்ந்தார்.
ஒருநாள் கார்த்தவீர்ய மஹாராஜா ரத கஜ துரக படை பரிவாரங்களுடன் காட்டிற்கு சென்று வேட்டையாடி முடித்து அரண்மனைக்கு திரும்பிக்கொண்டு இருந்தார். வருகின்ற வழியில் தனது ஆஸ்தான குரு ஜமதக்னி முனிவரின் ஆசரமம் கண்டார். குருவிடம் ஆசிபெற்று செல்லலாமே என்று எண்ணி பரிவாரங்களுடன் குருவின் ஆசிரமம் செல்கின்றார்.
களைப்புடன் இருக்கும் மகாராஜாவையும் படை பரிவாரங்களையும் கண்ட ஜமதக்னி(கம்மவார்) ரிஷி அனைவரையும் ஒருவேளை விருந்துண்டு செல்லவேண்டும் என்று கேட்டுக் கொண்டார் ( இது கம்மவார் மக்களுக்கு மட்டுமே உள்ள குறிப்பால் அறிந்து பசியாற்றும் குணம்). ரிஷியின் கோரிக்கையை கேட்ட மஹாராஜா நகைப்புடன் இந்த துரவியால் அனைவரையும் பசியாற்ற இயலாது என்று மனதில் எண்ணிகொண்டார் பிறகு ரிஷியிடம் ராஜபோஜனம் தவிர்த்து நாங்கள் வேறு உண்ணலாகாது என்றார்.
மகாராஜாவின் விருப்பபடியே விருந்து செய்கிறேன் என்று சொன்னது மட்டுமன்றி காமதேனுவின் உதவியால் சோமபானம் உள்ளிட்ட பல்வகை பதார்த்தங்களுடன் அவரவர் விரும்பியவாறு அனைவருக்கும் தடபுடலாக விருந்து தகுதிவாய்ந்த ஆசனங்கள் வசதிகளுடன் நடைபெற்று முடிந்தது.(ராஜ போஜனம் என்றால் அதில் மதுவும் உண்டு)
இத்தனை பேருக்கும் ஒரு நொடியில் விருந்தும் வசதிகளும் ஏற்படுத்திக் கொடுத்த காமதேனு(தேவலோக பசு) குறித்து சிந்தித்த மஹாராஜா இப்படி ஒரு பசுவால் அல்லவா இத்துறவி இத்தகு சிறப்பை செய்ய நேர்ந்தது. இப்படி பட்ட பசு நமது அரண்மனையில் அல்லவா இருக்க வேண்டும் அதுதானே நமக்கு பெருமை என்ற எண்ணம் மகாராஜாவிற்கு ஏற்படுகின்றது.
காமதேனுவை தன்னுடன் அரண்மனைக்கு உடன் அனுப்பி வைக்குமாறு ஜமத்கனி முனிவரிடம் கேட்கின்றார். முனிவர் மறுக்க போர் துவங்கியது. காமதேனுவால் உருவாக்கப்பட்ட வீரர்களுடன் போர் செய்தார்கள் போரில் கர்த்தவீர்ய மகாராஜா தோற்கடிக்கப்பட்டு அரண்மனைக்கு செல்கின்றார்.
அரண்மனையில் சோகமாக மகாராஜா இருப்பதை கண்ட தனது பிள்ளைகள் விவரம் அறிந்து உலகையே ஆட்சி செய்யும் பெரும் சாம்ராஜின் அதிபதி துறவியிடம் தோற்பதா என கோபம் .கொண்டார்கள். இதை அறிந்தால் நம் கட்டுப்பாட்டில் உள்ள சிற்றரசரர்கள் சிரிப்பார்கள் நம்மை மதிப்பார்களா என்று கேட்டுக்கொண்டே புறப்பட்டு சென்று தவம் செய்துகொண்டிருந்த நேரத்தில் ஜமத்கனி முனிவரை வதம் செய்து காமதேனுவை கைப்பற்றி சென்றார்கள்.
வதம் செய்யப்பட்ட பதியின்(கணவர்) சடலத்தின் அருகில் தலைவிரி கோலமாக சதியாகிய(மனைவி) ஸ்ரீ ரேணுகாம்பாள் அழுது புலம்புகின்றார். குரல் கேட்டு பரசுராமர் வருகின்றார். தனது தந்தையை வதம் செய்த சத்திரியர்களின் செயல்கண்டு 21தலைமுறைக்கும் சத்திரியர்கள் வம்சம் இல்லாமல் அழிப்பேன் என்று சபதமேற்று எட்டுத்திக்கும் வெறிகொண்டு நாளிகைக்கு ஐந்தாயிரம் பேர்கள் என சத்திரியர்களை தனது கோடாரியால் வதம் செய்கின்றார். ஒருகட்டத்தில் சத்ரிய குல ஆண்கள் அனைவரும் அழிந்துபோயினர். பரசுராமர் ஒரு சமயம் தாய் ரேணுகாதேவியிடம் பெண்களை துன்புறுத்த மாட்டேன் என்று சத்தியம் செய்துள்ளார். ஆகவே சத்ரிய குல பெண்களை விடுத்து ஆண்கள் அனைவரையும் அழித்தார்.
சத்திரிய குல பெண்களும் கர்பிணிகளும் தவிர்த்து ஆண்கள் அனைவரும் பரசுராமரால் வதம் செய்யபட்டார்கள். கர்ப்பிணி பெண்களுக்கு பிறக்கும் ஆண்பிள்ளைகள் பிறந்ததும் பரசுராமரால் வதம் செய்யபட்டார்கள்.
பரசுராமன் நமது வம்சத்தை அழிக்காமல் விடமாட்டேன் என்கிறானே பிறக்கும் ஆண் சிசுக்களை கருணையின்றி கொல்கின்றானே இதை எப்படி தடுப்பது சந்ததி காப்பது என்று நமது பாட்டிமார்கள் கவலைய்டன் ராஜகுருவிடம் ஆலோசனை கேட்டார்கள்.
ராஜகுரு' மகளே, பரசுராமனின் கோபத்தை அந்த பரமேஸ்வரனே வந்தாலும் தடுக்க இயலாது, பரசுராமர் தன் பெற்றவர் சொல்லை தட்ட மாட்டார் ஆகவே தாய் ஸ்ரீ ரேணுகாம்பாள் சொல்பேச்சையும் தட்ட மாட்டார். ஆகவே , நீங்கள் சென்று ஸ்ரீ ரேணுகாம்பாளிடம் அபயம் கேளுங்கள், அன்னைஅபயம் அளித்தால் உங்கள் குலம் தழைக்கும் இல்லையேல் இனம் அழியும் என்று சொல்லி அனுப்புவித்தார்.
ராஜகுருவின் ஆலோசனையின்படி கற்பிணி பெண்களுடன் நமது ராஜமாதா உள்ளிட்ட பாட்டிமார்கள் ஸ்ரீ ரேணுகாம்பாள் ஆசிரமம் சென்று அன்னையிடம் வேண்டினார்கள். ஆசிரமத்தில் நமது பாட்டிமார்கள் பலவாறு வேணடியும் பயனற்று போனதால் நம் பாட்டிமார்கள் அம்மனை பார்த்து தாயே எனது பதியின் மதிகெட்ட தனத்தால் போர் மூண்டதும் பின் தோற்றதும் தந்தையின் மானம் காக்க தமையன் தங்கள் சதியை குருவென்றும் பாராமல் வதம் செய்ததும் விதிவாசத்தால் அல்ல உன் கணவரே காரணம் ஆவார் என்றார்கள்.
தன் கணவனே காரணம் என்று சொல்வதை கேட்டதும் ஆசிரமத்தில் வெளியே வந்து கோபத்துடன் பார்க்கும் ஸ்ரீ ரேணுகாம்பாளை பார்த்து மேலும் நம் பாட்டி ராஜமாதா சொல்லுகிறாள்.
ஆம் உன் கணவர் விருந்தென்று சொல்லி சோமபானத்தையுங் கொடுத்தார். சோமபானத்தின் மயக்கத்தினால் என் கணவர் மதி கெட்டு காமதேனுவை கவர எண்ணினார். 56 தேசங்களுக்கும் அதிபதி தன ராஜ்யத்தில் தானே காமதேனு இருக்கிறது என்று அறியாமல் மதிகெட்டு காமதேனுவை கவர தூண்டியது உன் கணவரின் விருந்தே காரணமாகும் என்று வாதாடினார். தன கணவனை உயிரை கவர்ந்து சென்ற யாமனிடமே போராடி உயிர் மீட்ட பரம்பரையில் வந்த நம் பாட்டிமார்கள் வைத்த வாதத்தால் அம்மனும் சிந்திக்க துவங்கிய நொடியில் இதுவே சமயம் என்று ஸ்ரீ ரேணுகாம்பாளை சாந்தப்படுத்த மூன்று சத்தியம் செய்து கொடுத்தனர்.
நடந்தவை குறித்து சிந்தித்து நாம் ஒருவரை ஒருவர் குறை சொல்லி பயனில்லை நீ என் தமையானால் உன் கணவரை இழந்தாய்
நானோ உன் தமையானால் கணவரை இழந்தது மட்டுமல்ல எம் இன ஆண்கள் அனைவரையுமே இழந்துள்ளோம்.
ஆகவே இந்த பேரிழப்புக்கு காரணமான காரியங்களை மறந்து எம் சத்ரிய குலத்தை 21 தலைமுறைக்கும் சந்ததி இன்றி அளிப்பேன் என்று சப்பதமேற்றுள்ள பரசுராமரிடம் இருந்து எம் குல சந்ததியை காப்பாற்ற அபயம் தாருங்கள்.
தாயே நீங்கள் அபயம் அளித்தால் நாங்கள் உங்களுக்கு சத்தியம் செய்கின்றோம் இன்றிலிருந்து பிறக்கும் எம் சந்ததிகள் அனைவரும் இந்த சத்தியத்தை கட்டுப்பாட்டுடன் கடைபிடிப்பார்கள் என்று சொல்லி மூன்று சத்தியம் செய்தார்கள்.
சத்தியம் 1.
"தாயே அன்று நடைபெற்ற விருந்தில் சோமபானத்தின் போதையால் எமது இல்லத்து ஆண்கள் தகாதது செய்துவிட்டனர். நீங்கள் அபயம் அளித்தால் "எமது சந்ததியில் ஆணும் பெண்ணும் சோமபானத்தை அருந்த மாட்டார்கள்" என்று சத்தியம் செய்கின்றோம்."
சத்தியம் 2.
"லோகமாதாவே எங்கள் சந்ததிகளுக்கு அபயம் அளித்தீர்களானால் பசுவை முன்னிட்டு நடைபெற்ற தகாத செயல் நடந்துள்ளதால் "எமது சந்ததிகள் பசுவை துன்புறுத்த மாட்டார்கள்." என்று சத்தியம் செய்கின்றோம்.
சத்தியம் 3.
"ஜகத்முனி பத்தினியே எங்கள் சந்ததிகள் தழைக்க அபயம் வேண்டுகின்றோம். எங்கள் சந்ததியில் பிறக்கும் ஆணும் பெண்ணும் "உன்னையே குல தெய்வமாக வணங்கி வருவார்கள்", என்று சத்தியம் செய்கின்றோம்."
இவ்வாறு சத்தியம் செய்தமையாலும் நமது பாட்டிமார்களின் விடாமுயற்சியாலும் சாந்தமடைந்த ஸ்ரீரேணுகாம்பாள் செய்துகொடுத்த சத்தியத்தை மெய்யாக கடைபிடிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் அபாயம் அளித்தார். தன மகனை அழைத்து கொடுத்த வாக்குப்படி சத்தியம் கடைபிடிக்கும் வரையில் பரசுராமா இவர்களுக்கு அபயம் கொடுத்துவிட்டேன் என்று வரம் அளித்து நமது பாட்டிமார்களை அனுப்பி வைத்தார்.
பாட்டிமார்களின் வேண்டுதலாலும் ஸ்ரீ ரேனுகாம்பாள் அருளாலும் அன்று முதல் நமது குலத்தில் பிறந்த ஆண் பிள்ளைகள் பரசுராமரால் வதம் செய்யப்படாமல் பிறந்து வளர்ந்து மீண்டும் ராஜ்ஜியங்களை ஆட்சி செய்து வந்தனர்.
நம் முன்னோர்களும் சோமபானம் அருந்தாமல் பசுவை துன்புறுத்தல் செய்யாமல் பராசக்தியை குலதெய்வமாக வணங்கி விழாஎடுத்து ஸ்ரீ ரேணுகாம்பாளுக்கு கொடுத்த சத்தியம் தவறாது கடைப்பிடித்து சுகமாக வாழ்ந்து வந்தார்கள்.
சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு வரையில் நமது முன்னோர்கள் சத்தியம் தவறாமல் வாழ்ந்து வந்தனர்.
1530 - 1540 காலகட்டத்தில் 24 நாட்டு முகலாய மன்னர்கள் டில்லி சுல்தான்களுடன் ஒன்று சேர்ந்து தெலுங்கு சாம்ராஜ்யத்தை வென்றிட படையெடுக்க இருக்கும் சேதி அறிந்த நமது ராஜா தனக்கு துணையாக டச்சுக்காரர்களை அழைத்தார்கள். போரில் வென்றார்கள்
உதவிக்கு வந்த டச்சு படையினரால் சோமபானமும் வந்துவிட்டது. சத்தியம் மறந்த சத்திரியர்கள் போரில் வெற்றிபெற்றாலும் பரசுராமன் மீண்டும் வதம் செய்ய ராஜ்ஜியம் அனைத்தும் இழந்தனர்.
பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்கான கதையாக டச்சுக்காரர்களை போருக்கு துணையாக அழைத்து சோமபானம் அருந்தி சத்தியம் தவறியதால் நமது ராஜ்யங்கள் அனைத்தும் வீழ்ந்தது. அன்று முதல் நமது இனம் அழிவை நோக்கியே பயணம் செய்கின்றது. நம் இனத்தின் மக்கள் தொகை குறைந்துகொண்டே
உண்மையில் நமது இனம் அழிந்துவருக்கிறதா?
உங்களது ஊரில் நம் இனம் வளர்ச்சி குறித்து ஒரு பார்வை:
உங்களது அப்பாவின் அப்பா(பாட்டன்) நினைவு கொண்டு வாருங்கள். அவருடன் பிறந்தோர் மற்றும் அவரின் தலைக்கட்டு அல்லது நீர்பிழியும் பங்காளிகள் எத்தனை பேர்கள் பிறந்தனர் என்று எண்ணிக்கொள்ளுங்கள். அவர்களில் எத்தனை பேர்களுக்கு திருமணம் நடந்துள்ளது என்று கணக்கெடுங்கள் இப்பொழுது ஊரில் பிறந்த மொத்தம் உள்ள அனைத்து பாட்டன்களில் குறைந்தபட்சம் 10% பேர்களுக்கு திருமணமே நடவாமலும் திருமணம் நடந்தும் புத்திர பாக்கியம் இல்லாமலும், அல்லது ஆண் வாரீசு இல்லாமலும் சந்ததி இன்றி முடிந்து இருக்கின்றதா!...உங்கள் ஒவ்வொருவரின் ஊரிலும் இப்படி தான் இருக்கும் இல்லை எனில் தொடர்புகொள்ளவும்.
அதேபோன்று உங்களது தந்தை மற்றும் அவருடன் பிறந்தோர் மற்றும் அவரது பங்காளிகளை எண்ணிப்பாருங்கள் அவர்களில் குறைந்தபட்சம் 10% பேர்களுக்கு திருமணமே நடவாமலும் திருமணம் நடந்தும் புத்திர பாக்கியம் இல்லாமலும், அல்லது ஆண் வாரீசு இல்லாமலும் சந்ததி இன்றி இருக்கின்றதா!...
உங்களுக்கு
உங்களது உடன்பிறந்தோர் மற்றும் உங்களது பங்காளிகளை எண்ணிப்பாருங்கள் மேலே நடந்தது தான் தொடரும்.
அடுத்த தலைமுறையில் நம்மில் யாருக்கு சந்ததி இருக்கும்? யாருக்கு இருக்காது? அறிந்துகொள்ள முடியுமா ? சொல்ல முடியுமா?
அடுத்த தலைமுறையில் யாருக்கு சந்ததி இல்லாமல் போகும் ? என்ற கேள்விக்கு விடை தங்களிடம் உள்ளதா?
நமது இனத்தை தவிர பிற இனத்தாருக்கு இந்த ஆபத்து உள்ளதா? நமது ஊருக்கு ஒட்டிய ஊரில் வசிக்கும் பிற சாதியினர் பற்றி ஆய்வு::
நமது ஊரில் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு நாற்பது கம்மவார் வீடுகள் இருந்தது என்றால் இன்றும் அப்படியே அதே அளவுடன் அல்லது சற்று குறைந்தோ இருக்கும்.
ஆனால் அருகாமையில் உள்ள ஊரில் பிற சாதியினர் ஐம்பது ஆண்டிற்கு முன் நாற்பது வீடுகள் இருந்திருப்பின் இன்று குறைந்தபட்சம் 60 குடும்பங்கள் இருக்கும். அவர்களுக்கு வளர்ச்சி ஏற்படுகின்றது நமக்கு வீழ்ச்சி ஏற்படுகின்றதே என்பதை அறிந்துகொண்டீர்களா?
2001 ஆம் ஆண்டு ஐநா அமைப்பின் மனித மேம்பாட்டு துறை ஆய்வு அறிக்கை வெளியிட்டது. அதில் ஒரு இனம் அழியாமல் இருக்க மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 1.36% இருக்க வேண்டும் என்று தெரிவிக்கின்றது.
2001மற்றும் 2011இந்திய அரசின் சாதிவாரி கணக்கெடுப்பு புள்ளிவிவரப்படி கம்மவார் மக்கள் தொகை வளர்ச்சி மைனஸ் 1.30% ஆக உள்ளது. இவையெல்லாம் வலைதளத்தில் இருந்து பெறப்பட்ட விவரங்களாகும்.
ஸ்ரீ ரேணுகாம்பாள் அம்மனுக்கு கொடுத்த சத்தியத்தை நாம் மீறியதால் நம் இனம் அழிந்துகொண்டு உள்ளது என்பதை வரலாற்று ஆய்வு மூலம் கண்டுகொண்டோம். இது சரியா என்பதை அறிய சென்னையில் ஸ்ரீ ரேணுகாம்பாளுக்கு பூஜை செய்து வேண்டுதல் நிகழ்வு ஏற்பாடு செயத்தோம். பூஜைக்கு வந்தவர்களின் திருமண தடை புத்திர பாக்கியமின்மை குடும்ப ஒற்றுமையின்மை போன்ற குறைகள் நீங்கி குடும்ப ஒற்றுமை ஏற்படுவதையும் திருமணம் விரைந்து கைகூடுவதையும் அறிந்தோம். இதன் மூலம் நம் ஆய்வு சரியே என்ற தீர்மானத்திற்கு வந்துள்ளோம்.
நமக்கு எத்தனை கோடி சொத்து இருப்பினும் சந்ததி இல்லையேல் வாழ்ந்து என்ன பயன்?
சத்தியம் தவறி நடக்கும் கம்மவார்களுக்கு மட்டுமல்ல அவர்களின் உடன் பங்காளிகளுக்கும் பரசுராமர் பல பிரச்சனைகளை கொடுத்து கெடுக்கின்றார் என்பதை உணர்வோம். யார் தவறு செய்தாலும் அவரை திருத்தி நல்வழிப்படுத்தி சந்ததி காப்போம்.
திருமணம் தடைப்படுகிறதா?
புத்திர பாக்கியம் இல்லையா? தொழில் முடக்கம் குடும்ப ஒற்றுமையின்மை நிலையில்லாமல் போகும் செல்வம் குடும்பத்தில் மகிழ்ச்சி இல்லை என இதுபோன்ற பிரச்சனைகள் தீர்வுக்கு
ஆடம்பரம் இன்றி பக்தியுடன் பூஜை செய்து உங்கள் குலம் தழைக்க ஸ்ரீ ரேணுகாம்பாளை மனமுருகி வேண்டுங்கள்.
பூஜை பொருட்கள்:
மல்லிகைப்பூ, தாம்பூலம், வாழைப்பழம், மஞ்சள் குங்குமம் பத்தி, நெய்தீபம் ஏற்றி, அருகாமை கம்மவார் சொந்தங்களை தம்பதிகளாய் அழைத்து உங்கள் இல்லத்தில் செலவில் பக்தியுடன் பூஜை செய்து இந்த குலதெய்வ வரலாற்றை அனைவருக்கும் சொல்லி இனி சத்தியம் கடைப்பிடித்து காப்போம் என உறுதிமொழி ஏற்று திருமண தடை, புத்திர தோஷம் உள்ளிட்ட அனைத்து தோஷங்களில் இருந்தும் நிவர்த்தி பெறலாம். குடும்ப ஒற்றுமை செல்வ வளம் பெறலாம்.
முன்னோர்கள் செய்துகொடுத்த சத்தியத்தின்படி நடந்து நமது சந்ததியை காப்போம் என்று நம் கம்மவார் குல குழந்தைகள் அனைவருக்கும் சொல்லிக்கொடுத்து உறுதிமொழி ஏற்க செய்வோம் சந்ததி நலன் காப்போம்.
இதை படித்த அனைவரும் இதற்கு முன் அறியாமையால் ஏதேனும் தவறு செய்திருப்பினும் இனி நம் முன்னோர்கள் செய்துகொடுத்த சத்தியத்தின் படி வாழ்ந்து சந்ததி காப்போம்.
ஸ்ரீ ரேணுகாம்பாள்
பூஜை முறைகள்.
உறவினர்கள் 15-20 குடும்பங்கள் இணைந்து ஒருவர் வீட்டில் செய்யலாம்.
புகைப்படம்
மல்லியப்பூ அலங்காரம்
கும்பம்
ஒரு வெண்கலம் அல்லது பித்தளை சொம்பு நூல் சுத்தி ஆறு கிணறு போர் நிறைகுடம் இவற்றில் எடுத்த நீர் நிரப்பி மாவிலை வைத்து மஞ்சள் பூசிய தேங்காய் (தேங்காயில் மஞ்சள் குங்குமம் கொண்டு அழகான முகம் செய்தால் நன்றாக இருக்கும் இல்லையேல் வெறும் மஞ்சள் பூசி பொட்டு வைத்து) அலங்காரம் செய்யலாம்.
கும்பம்
கோலமிட்டு அதன் மேல் வாழையிலை இட்டு அதில் பச்சரிசியை கொட்டி கும்பம் வைக்கலாம் அல்லது முக்காலியிட்டு அதன் மேல் வெள்ளை துணி விரித்து அதன் மீதும் வைக்கலாம்.
தயார் செய்த கும்பம் பொட்டிட்டு மல்லிகை பூ சுற்றி பொட்டிட்டு சாயாமல் வைக்கவும்.
நெய் விளக்கு ஏற்றவும்
நாமகட்டி மஞ்சள் குங்குமம் சந்தனம் குழைத்து வரும் பக்தர்களுக்கு அளித்து நாமம் போட்டுக்கொள்ள சொல்லவும்.(யாராவது ஒருவர் வருகிற அனைவருக்கும் நாமம் போட்டு உதவலாம்)
ஜாதகம்
வரன் ஜாதகங்கள் வேண்டுதாலுக்காக யாரும் கொண்டுவந்திருந்தால் பூஜையில் வைக்கலாம். (பூஜை முடிந்ததும் ஜாதகம் எடுத்து சென்று வீட்டு பூஜை அறையில் ஸ்ரீ ரேணுகாம்பாள் முன் வைத்து திருமணம் நடைபெறும் வரை வணங்கி வரவேண்டும். திருமணம் முடிந்ததும் உங்கள் குடும்ப குலதெய்வ கோவிலுக்கு செல்வதும் ஸ்ரீ ரேணுகாம்பாள் கோவிலுக்கு செல்வதும் நல்லது.)
ஸ்ரீ ரேணுகாம்பாள் பக்தி பாடல்களை பஜனை செய்யவும். ஒரு மணிநேரம் பஜனை பக்தியுடன் பாடி அம்மனை அழைக்க வேண்டும்.
உறுதிமொழி
அதன் பிறகு அம்மனுக்கு ஆரத்தி எடுத்து நம் முன்னோர்கள் செய்துகொடுத்த சோமபானம் அருந்த மாட்டோம். பசுக்களை துன்புறுத்த மாட்டோம், ஸ்ரீ ரேணுகாம்பாள் அம்மனை வணங்குகிறோம் என்று சொல்லி உறுதியேற்றல்.
அனைவருக்கும் பிரசாதமும் பூ மஞ்சள் கொடுத்து ஒருவருக்கொருவர் குடும்ப பெயர் சொல்லி அறிமுகம் செய்து நல்ல தகவல்களை மட்டும் பரிமாறிக்கொள்ளல்.
நன்றியுடன்
நிறைவு செய்து ஒருவருக்கொருவர் வாழ்த்திவிடைபெற வேண்டும்.
இவ்வாறு உங்கள் வீட்டில் செய்து பரிகாரம் செய்துகொள்ளலாம். பெருமைக்கு செய்யாமல் உண்மையில் பக்தியுடன் ஒவ்வொரு பவுர்ணமி மற்றும் வாரம் ஒருநாள் நீங்கள் விரும்பிய நாள், கிழமையில் செய்யுங்கள் வேண்டியது நடக்கும்.
ஸ்ரீ ரேணுகாம்பாள் பூஜை
பஜனை 1 மணிநேரம்
வரலாறு 1 மணிநேரம்
காலந்துரையாட 1மணிநேரம் என மூன்று மணி நேரம் சற்று குறைவாக இருப்பினும் பூஜை அலங்காரம் முதல் இறுதிவரை முழுமையாக பங்கேற்பது அவசியம்.
பொது இடங்கள் மண்டபங்களில் வைத்தும் செய்யலாம். எங்கு செய்தாலும் வேற்று இன மத மக்கள் யாரும் பிரசாதம் உன்ன கொடுக்க கூடாது, நாய் உள்ளிட்ட பிராணிகளுக்கு கொடுக்க கூடாது. கால்மிதிபடும் இடங்களில் சிந்திவிட கூடாது, மீதம் ஆகாமல் அனைவரும் உண்ணும் அளவுக்கு மட்டுமே பிரசாதம் தயார் செய்ய வேண்டும்.
ஸ்ரீ ரேணுகாம்பாள் பூஜை குறித்து சந்தேகங்கள் தீர்வுக்கு விளக்கங்கள் பெற தினமும் காலை 10 மணி முதல் 11 மணிவரை மட்டும் அழைக்கவும்.
இப்பொழுது உங்களுக்கு ஒரு கேள்வி எழும்.
நாங்கள் முனீஸ்வரனை, அக்கம்மாள், கெங்கம்மாள், அக்கம்மாள், திரௌபதி, முத்தாலம்மன், எல்லம்மாள், அங்காளம்மன் இப்படி பல பெயர்களில் ஒவ்வொரு கம்மவார் உட்பிரிவில் குலதெய்வமாக வணங்கி வருகின்றோம். இப்பொழுது அனைவருக்கும் ஸ்ரீ ரேணுகாம்பாள் அம்மன் குல தெய்வம் எப்படி? இப்படி ஒரு கேள்வி எழுகிறதா?
ஆம் உண்மை முழுவது அறிந்துகொள்ள இரண்டு கேள்விகளுக்கு விடை அறிய வேண்டும்.
நம் முன்னோர்கள் முகலாய படைகளை தோற்க செய்ய டச்சு காரர்களை உதவிக்கு அழைத்தார்கள் என்று சொன்னேன் அல்லவா,
நமக்கும் முகலாயர்களுக்கும் ஏன் போர் நடந்தது?
சுமார் 40 ஆண்டுகள் முன்பு நம் வீட்டு பெண்களை குழந்தைகள் முதல் பெரியவர்கள் பாட்டி வரை யாரையுமே வீட்டு ஆண்கள் பெயர் சொல்லி அழைக்க மாட்டார்கள். அம்மா, பெத்தம்மா, மொகுட்டிட்டி அம்மா, சித்தமாக்கிட்டி அம்மா.....
அல்லது
சின்னதாயி, பெத்ததாயி, மொகுட்டிட்டி தாயீ, சித்தமாக்கிட்டி தாயீ....
என மட்டுமே அழைத்தார்கள் ஏன்?
இப்பொழுது இரண்டாவது கேள்விக்கு விடை காண்போம்.
நம் கம்மகுல பெண்கள் பக்தி, அன்பு, அறிவு, திறமை, மனவலிமை, உடல்வலிமை, பயம் அற்ற மன உறுதி, உழைப்பு , உதவி செய்யும் ஈகை குணம் உள்ளிட்ட அனைத்து நற்பண்புகளையும் ஒருங்கே பெற்றவர்களாக இருக்கின்றார்கள். பிற இனத்தில் பெண்களுக்கு ஏதோ ஒன்று இரண்டு பண்புகள் மட்டுமே சிறந்திருக்கும். ஒட்டுமொத்தமாக அனைத்து நற்பண்புகளையும் கொண்டே ஒரே இன பெண்கள் என்றால் அவர்கள் கம்மகுல பெண்கள் மட்டுமே. நீங்களும் கவனித்து உண்மையை அறியலாம்.
இந்த நற்பண்புகள் எல்லாம் கம்மவார்களுக்கு மட்டும் இருக்க காரணம் நம் கம்மகுல பெண்கள் பார்வதியின் அவதாரமாக பூலோகத்தில் பிறந்தவர்கள்.
இப்படி பார்வதி தாயின் அவதாரமாக விளங்கும் பெண்களை அந்த பார்வதி தாயாகவே அவரை அழைப்பது போலவே எண்ணி ஒவ்வொரு வீட்டிலும் அம்மா என்றோ அல்லது தாயீ என்றோ அழைத்து வந்தார்கள். ஆகவே வீட்டு பெண்களை தெய்வமாக எண்ணிய ஆண்களுக்கு சகல ஐஸ்வர்யங்களும் மகிழ்வான குடும்பமும் இருக்கும். இதுவும் உண்மையா இல்லையா என்பதை நீங்கள் ஆய்வு செய்து அறிந்துகொள்ளலாம்.
பெண்களின் நற்குணங்கள் அனைத்தும் பெண்களின் ஜீன் வழியாக அவர்களின் பிள்ளைகளுக்கு கடத்தப்பட்டு வருகிறது என்று இனதுறைய அறிவியல் சொல்கிறது.
இதை அன்றே அறிந்த முகலாயர்கள் கம்மகுல பெண்களை திருமணம் செய்து தங்கள் சந்ததிகளை அறிவார்ந்த திரண்படைத்த சமூகமாக உருவாக்கிக்கொள்ள வேண்டி பெண்களை அபகரிக்க போர் செய்தனர்.
முகலாயர்கள் சில போரில் வெற்றிபெற்று ஊருக்குள் வந்துவிட்டால் அவர்கள் கைகளில் அகப்படாமல் நினைத்த மாத்திரத்தில் தன்னைத்தானே எரித்துக்கொண்டும், பெற்றவர்களால் சால், பறி, கொடாப்பு, அடுக்கு பானை, குதிர் போன்ற இடங்களில் பிள்ளைகளை பல நாட்களாக மறைத்து வைத்து வீரர்கள் தேடி அலுத்து சென்றதும் திறந்து பார்த்த பொழுது பல பெண் பிள்ளைகள் அன்ன ஆகாரமும் காற்றும் இன்றி மாண்டு போயினர்.
கழனிக்கு சென்று திரும்பும் வழியில் திடீர் என முகலாய வீரர்கள் வந்துவிட்டால் தன்னைத்தானே எரித்துக்கொண்டு மானம் காத்த பெண்கள் என 96ஆயிரத்திற்கும் மேற்பட்டோம் இறந்துவிட்டதாக புள்ளிவிவரம் சொல்கிறார்கள்.
குல மானம் காக்க வேற்று இன ஆடவரின் சுட்டுவிரல் கூட மேனியில் பட அனுமதிக்காமல் தன்னைத்தானே எரித்துக்கொண்டும் அபாண்டமாகவும் இறந்துவிட்ட பெண்களின் உடன்பிறந்த அண்ணன் தம்பி அக்காள் தங்கள் உள்ளிட்டோர் மானம் காத்த சாமியாக மானம் காத்த தெய்வமாக அன்று முதல் இன்று வரை வணங்கி வருகிறார்கள்.
ஸ்ரீ ரேணுகாம்பாள் குல சந்ததிகள் காத்த குலதெய்வம்.
ஒவ்வொரு குலத்தவரும் வணங்கும் தெய்வம் நம் வீட்டில் பிறந்து மானம் காக்க அபாண்டமாக மறித்து போனவர்களை மானம் காத்த சாமி குலசாமி.
ஆகவே தான் சில கோவில்களில் ஸ்ரீ ரேணுகா ஸ்ரீ ரேணுகாதேவி, ஸ்ரீ ரேணுகா எல்லம்மாள், ஸ்ரீ ரேணுகா கெங்கம்மாள், ஸ்ரீ ரேணுகா மங்கம்மாள், ஸ்ரீ ரேணுகா அச்சம்மாள் என்று இருக்கும். இதில் ரேணுகா என்பது ஸ்ரீ ரேணுகாம்பாள் அம்மனை குறிக்கும்.
முகலாய படையெடுப்பின்போது பெண்குழந்தை இல்லாத வீட்டில் வீட்டு பெண்கள் அபாண்டமாக இறந்து இருக்க மாட்டார்கள் அவர்கள் தங்கள் குலதெய்வமாக ஸ்ரீ ரேணுகாம்பாள் அல்லது ஸ்ரீ ரேணுகாம்பாள் பிற அவதாரங்கள், அல்லது ஸ்ரீ ரேணுகாம்பாள் கணவர் ஜெமதகணி முனி, மகன் பரசுராமர் என ஒரே தெய்வத்தை மட்டும் (ஸ்ரீ ரேணுகாம்பாளை மகிழ்விக்க) வணங்கி வருகின்றார்கள்.
குலம் காத்த அம்மன் ஸ்ரீ ரேணுகாம்பாள் நம் சந்ததி தழைக்கும்.
மானம் காத்த குல தெய்வமான நம் வீட்டு தெய்வங்களை வணங்கி சகல ஐஸ்வர்யம் பெறலாம்.
கம்மவார் இனத்தின் விழிப்புணர்வு பெற படித்தவர்கள் பகிர்ந்தும் அச்சிட்டு துண்டு பிரசுரமாகவும் விநியோகம் செய்யலாம்.
சேவை மனப்பான்மை உள்ள கம்மவார்கள் KNJS இல் இணைந்து செயல்பட விருப்பம்.உள்ளவர்கள் மட்டும் இணைபபை சொடுக்கி பதிவு செய்துகொள்ளவும்.
www.knjsmembers.com
அன்புடன்
செருக்கூறார்
E.பாலசுப்ரமணியன்
பொதுச்செயலாளர்
கம்மவார் நாயுடு ஜன சங்கம்
9042905783கம்மவார் குலதெய்வ வரலாறு.
கிருதயவீர்யன் காலத்திற்கு பின் மகிஷ்மதி நகரை தலைநகராக்கி தவத்தின் வலிமையால் தத்தாத்ரேயரின் வரத்தால் ஆயிரம் கரங்களுடன் ஆட்சி செய்து வந்த கார்த்தவீர்ய மகாராஜா(கம்மவார்களின் முன்னோர்) 85ஆயிரம் ஆண்டுகள் உலகின் 56 தேசங்களுக்கும் அதிபதியாக இருந்து நீதி அரசராக திகழ்ந்தார்.
ஒருநாள் கார்த்தவீர்ய மஹாராஜா ரத கஜ துரக படை பரிவாரங்களுடன் காட்டிற்கு சென்று வேட்டையாடி முடித்து அரண்மனைக்கு திரும்பிக்கொண்டு இருந்தார். வருகின்ற வழியில் தனது ஆஸ்தான குரு ஜமதக்னி முனிவரின் ஆசரமம் கண்டார். குருவிடம் ஆசிபெற்று செல்லலாமே என்று எண்ணி பரிவாரங்களுடன் குருவின் ஆசிரமம் செல்கின்றார்.
களைப்புடன் இருக்கும் மகாராஜாவையும் படை பரிவாரங்களையும் கண்ட ஜமதக்னி(கம்மவார்) ரிஷி அனைவரையும் ஒருவேளை விருந்துண்டு செல்லவேண்டும் என்று கேட்டுக் கொண்டார் ( இது கம்மவார் மக்களுக்கு மட்டுமே உள்ள குறிப்பால் அறிந்து பசியாற்றும் குணம்). ரிஷியின் கோரிக்கையை கேட்ட மஹாராஜா நகைப்புடன் இந்த துரவியால் அனைவரையும் பசியாற்ற இயலாது என்று மனதில் எண்ணிகொண்டார் பிறகு ரிஷியிடம் ராஜபோஜனம் தவிர்த்து நாங்கள் வேறு உண்ணலாகாது என்றார்.
மகாராஜாவின் விருப்பபடியே விருந்து செய்கிறேன் என்று சொன்னது மட்டுமன்றி காமதேனுவின் உதவியால் சோமபானம் உள்ளிட்ட பல்வகை பதார்த்தங்களுடன் அவரவர் விரும்பியவாறு அனைவருக்கும் தடபுடலாக விருந்து தகுதிவாய்ந்த ஆசனங்கள் வசதிகளுடன் நடைபெற்று முடிந்தது.(ராஜ போஜனம் என்றால் அதில் மதுவும் உண்டு)
இத்தனை பேருக்கும் ஒரு நொடியில் விருந்தும் வசதிகளும் ஏற்படுத்திக் கொடுத்த காமதேனு(தேவலோக பசு) குறித்து சிந்தித்த மஹாராஜா இப்படி ஒரு பசுவால் அல்லவா இத்துறவி இத்தகு சிறப்பை செய்ய நேர்ந்தது. இப்படி பட்ட பசு நமது அரண்மனையில் அல்லவா இருக்க வேண்டும் அதுதானே நமக்கு பெருமை என்ற எண்ணம் மகாராஜாவிற்கு ஏற்படுகின்றது.
காமதேனுவை தன்னுடன் அரண்மனைக்கு உடன் அனுப்பி வைக்குமாறு ஜமத்கனி முனிவரிடம் கேட்கின்றார். முனிவர் மறுக்க போர் துவங்கியது. காமதேனுவால் உருவாக்கப்பட்ட வீரர்களுடன் போர் செய்தார்கள் போரில் கர்த்தவீர்ய மகாராஜா தோற்கடிக்கப்பட்டு அரண்மனைக்கு செல்கின்றார்.
அரண்மனையில் சோகமாக மகாராஜா இருப்பதை கண்ட தனது பிள்ளைகள் விவரம் அறிந்து உலகையே ஆட்சி செய்யும் பெரும் சாம்ராஜின் அதிபதி துறவியிடம் தோற்பதா என கோபம் .கொண்டார்கள். இதை அறிந்தால் நம் கட்டுப்பாட்டில் உள்ள சிற்றரசரர்கள் சிரிப்பார்கள் நம்மை மதிப்பார்களா என்று கேட்டுக்கொண்டே புறப்பட்டு சென்று தவம் செய்துகொண்டிருந்த நேரத்தில் ஜமத்கனி முனிவரை வதம் செய்து காமதேனுவை கைப்பற்றி சென்றார்கள்.
வதம் செய்யப்பட்ட பதியின்(கணவர்) சடலத்தின் அருகில் தலைவிரி கோலமாக சதியாகிய(மனைவி) ஸ்ரீ ரேணுகாம்பாள் அழுது புலம்புகின்றார். குரல் கேட்டு பரசுராமர் வருகின்றார். தனது தந்தையை வதம் செய்த சத்திரியர்களின் செயல்கண்டு 21தலைமுறைக்கும் சத்திரியர்கள் வம்சம் இல்லாமல் அழிப்பேன் என்று சபதமேற்று எட்டுத்திக்கும் வெறிகொண்டு நாளிகைக்கு ஐந்தாயிரம் பேர்கள் என சத்திரியர்களை தனது கோடாரியால் வதம் செய்கின்றார். ஒருகட்டத்தில் சத்ரிய குல ஆண்கள் அனைவரும் அழிந்துபோயினர். பரசுராமர் ஒரு சமயம் தாய் ரேணுகாதேவியிடம் பெண்களை துன்புறுத்த மாட்டேன் என்று சத்தியம் செய்துள்ளார். ஆகவே சத்ரிய குல பெண்களை விடுத்து ஆண்கள் அனைவரையும் அழித்தார்.
சத்திரிய குல பெண்களும் கர்பிணிகளும் தவிர்த்து ஆண்கள் அனைவரும் பரசுராமரால் வதம் செய்யபட்டார்கள். கர்ப்பிணி பெண்களுக்கு பிறக்கும் ஆண்பிள்ளைகள் பிறந்ததும் பரசுராமரால் வதம் செய்யபட்டார்கள்.
பரசுராமன் நமது வம்சத்தை அழிக்காமல் விடமாட்டேன் என்கிறானே பிறக்கும் ஆண் சிசுக்களை கருணையின்றி கொல்கின்றானே இதை எப்படி தடுப்பது சந்ததி காப்பது என்று நமது பாட்டிமார்கள் கவலைய்டன் ராஜகுருவிடம் ஆலோசனை கேட்டார்கள்.
ராஜகுரு' மகளே, பரசுராமனின் கோபத்தை அந்த பரமேஸ்வரனே வந்தாலும் தடுக்க இயலாது, பரசுராமர் தன் பெற்றவர் சொல்லை தட்ட மாட்டார் ஆகவே தாய் ஸ்ரீ ரேணுகாம்பாள் சொல்பேச்சையும் தட்ட மாட்டார். ஆகவே , நீங்கள் சென்று ஸ்ரீ ரேணுகாம்பாளிடம் அபயம் கேளுங்கள், அன்னைஅபயம் அளித்தால் உங்கள் குலம் தழைக்கும் இல்லையேல் இனம் அழியும் என்று சொல்லி அனுப்புவித்தார்.
ராஜகுருவின் ஆலோசனையின்படி கற்பிணி பெண்களுடன் நமது ராஜமாதா உள்ளிட்ட பாட்டிமார்கள் ஸ்ரீ ரேணுகாம்பாள் ஆசிரமம் சென்று அன்னையிடம் வேண்டினார்கள். ஆசிரமத்தில் நமது பாட்டிமார்கள் பலவாறு வேணடியும் பயனற்று போனதால் நம் பாட்டிமார்கள் அம்மனை பார்த்து தாயே எனது பதியின் மதிகெட்ட தனத்தால் போர் மூண்டதும் பின் தோற்றதும் தந்தையின் மானம் காக்க தமையன் தங்கள் சதியை குருவென்றும் பாராமல் வதம் செய்ததும் விதிவாசத்தால் அல்ல உன் கணவரே காரணம் ஆவார் என்றார்கள்.
தன் கணவனே காரணம் என்று சொல்வதை கேட்டதும் ஆசிரமத்தில் வெளியே வந்து கோபத்துடன் பார்க்கும் ஸ்ரீ ரேணுகாம்பாளை பார்த்து மேலும் நம் பாட்டி ராஜமாதா சொல்லுகிறாள்.
ஆம் உன் கணவர் விருந்தென்று சொல்லி சோமபானத்தையுங் கொடுத்தார். சோமபானத்தின் மயக்கத்தினால் என் கணவர் மதி கெட்டு காமதேனுவை கவர எண்ணினார். 56 தேசங்களுக்கும் அதிபதி தன ராஜ்யத்தில் தானே காமதேனு இருக்கிறது என்று அறியாமல் மதிகெட்டு காமதேனுவை கவர தூண்டியது உன் கணவரின் விருந்தே காரணமாகும் என்று வாதாடினார். தன கணவனை உயிரை கவர்ந்து சென்ற யாமனிடமே போராடி உயிர் மீட்ட பரம்பரையில் வந்த நம் பாட்டிமார்கள் வைத்த வாதத்தால் அம்மனும் சிந்திக்க துவங்கிய நொடியில் இதுவே சமயம் என்று ஸ்ரீ ரேணுகாம்பாளை சாந்தப்படுத்த மூன்று சத்தியம் செய்து கொடுத்தனர்.
நடந்தவை குறித்து சிந்தித்து நாம் ஒருவரை ஒருவர் குறை சொல்லி பயனில்லை நீ என் தமையானால் உன் கணவரை இழந்தாய்
நானோ உன் தமையானால் கணவரை இழந்தது மட்டுமல்ல எம் இன ஆண்கள் அனைவரையுமே இழந்துள்ளோம்.
ஆகவே இந்த பேரிழப்புக்கு காரணமான காரியங்களை மறந்து எம் சத்ரிய குலத்தை 21 தலைமுறைக்கும் சந்ததி இன்றி அளிப்பேன் என்று சப்பதமேற்றுள்ள பரசுராமரிடம் இருந்து எம் குல சந்ததியை காப்பாற்ற அபயம் தாருங்கள்.
தாயே நீங்கள் அபயம் அளித்தால் நாங்கள் உங்களுக்கு சத்தியம் செய்கின்றோம் இன்றிலிருந்து பிறக்கும் எம் சந்ததிகள் அனைவரும் இந்த சத்தியத்தை கட்டுப்பாட்டுடன் கடைபிடிப்பார்கள் என்று சொல்லி ?
No comments:
Post a Comment