Monday, 20 September 2021
வாழைப்பழ தேநீர்
இரவில் தூங்கச் செல்லும்முன் இயற்கையாக தூக்க மாத்திரை போட்டுக் கொள்ளும் அதிகரித்து விட்டது. அப்படி இருப்பவர்கள் தூங்கும்முன் வாழைப்பழ டீ குடித்துவிட்டு தூங்குவது நல்லது .
ஏனெனில் வாழைப்பழத்தில் ட்ரிப்டோபன் என்னும் அமினோ அமிலம் உள்ளது. இந்த அமிலம் நமது மூளையில் செரோடோனின் என்ற வேதிப்பொருளை உற்பத்தி செய்கிறது.
செரோடோனின் நமது தூக்கத்திற்கு நன்மை பயக்கக்கூடியது. எனவே தற்போது இந்த வாழைப்பழ டீயை எப்படி தயாரிக்கலாம் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்
தேவையானவை
வாழைப்பழம் - 1
இலவங்கப்பட்டை தூள் - 1 தேக்கரண்டி
தயாரிக்கும் முறை
வாழைப்பழத்தின் முனைகளை நன்கு வெட்டிக் கொள்ளவும், ஆனால் அதன் தோல்களை அகற்ற தேவையில்லை, ஏனெனில் வாழைப்பழ தோல்களும் பல நன்மைகளை கொண்டவையாகும். பின்னர் வாழைப்பழத்தை தோலுடன் பெரிய பெரிய துண்டுகளாக வெட்டவும்.
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் ஒரு கப் அளவிற்கும் சற்று கூடுதலாக நீரை சேர்த்துக் கொள்ளவும். பிறகு அந்த நீரில் தயாராக வைத்துள்ள இலவங்கப்பட்டை தூள் அல்லது இலவங்கப்பட்டையை சேர்க்கவும்.
பின்னர் இரண்டையும் கொதிக்க வைக்கவும், பிறகு அதில் வெட்டி வைத்துள்ள வாழைப்பழத்தை சேர்த்து வெப்பத்தை குறைத்து 10 நிமிடங்களுக்கு இளம்சூட்டில் நீரை கொதிக்க வைக்கவும். 10 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும்.
பிறகு சிறிது ஆற விட்டு பிறகு வடிக்கட்டியை பயன்படுத்தி அதில் உள்ள நீரை மட்டும்தனியாக பிரித்தெடுக்கவும். இப்போது நமக்கு தேவையான வாழைப்பழம் தேநீர் தயார். இதை படுக்கைக்கு செல்வதற்கு 20 நிமிடங்கள் முன்பாக அருந்தவும்.
நன்மை
சரியான தூக்கம் இல்லாமல் அவதிப்படுபவர்கள் சிறந்த தூக்கத்தை பெற தினமும் இந்த தேநீரை செய்து அருந்தலாம். இதன் மூலம் நீங்கள் நல்ல தூக்கத்தை பெற முடியும்.
எனவே இனி தூங்க செல்வதற்கு முன்பாக வாழைப்பழ தேநீரை எடுத்துக் கொள்ள மறக்க வேண்டாம்.
No comments:
Post a Comment