பலரது வீட்டு வாசலில் மணிபிளான்ட் செடி இருப்பதை பார்த்திருப்போம். பெரும்பாலானோர் அவர்களது வீட்டில் அதிர்ஷ்டம் உண்டாவதற்காக மணி பிளான்ட் செடியை வளர்த்து வருவார்கள். ஆனால் ஒரு சில வீடுகளில் என்னதான் முயற்சித்தாலும் சீக்கிரத்தில் இந்த செடி வளர்ந்து விடாது. இதற்கு காரணம் என்னவென்றால் மணி பிளான்ட் செடி வைப்பதற்கென்று உரிய இடம் இருக்கிறது. அந்த இடத்தில் வைத்து வளர்த்தால் மட்டுமே இந்தச் செடி நன்றாக தழைத்து வளர்ந்து உங்கள் வீட்டிற்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். இவ்வாறு உங்கள் வீட்டிற்கும் அதிர்ஷ்டம் உண்டாக இந்த மணி பிளான்ட் செடியை எந்த திசையில் வைத்து வளர்க்க வேண்டும் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
மணி பிளான்ட் செடி தென்கிழக்கு ஆசியாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கொடி வகையாகும். மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் இந்த செடி மிகவும் பிரபலம் வாய்ந்தாக உள்ளது.வன பகுதிகளில் வளரும் மணி பிளான்ட் ஐம்பதிலிருந்து அறுபது அடி உயரத்திற்கு வளரும். ஆனால் வீட்டில் சிறிய தொட்டியில் வளர்க்கப்படும் மணிபிளான்ட் 15 முதல் 20 அடி மட்டுமே வளரும். ஒரு சிலர் மணி பிளான்ட் செடியை வீட்டை அலங்கரிப்பதற்காகவும் வளர்க்கின்றனர். இதனை வளர்ப்பதற்கு பெரிதாக செலவுகள் ஒன்றும் ஆகாது. ஆனால் வாஸ்துப்படி இதனை சரியான இடத்தில் வைத்து வளர்ப்பது என்பது மிகவும் அவசியமாகும்.
மணி பிளான்ட் வைக்க வேண்டிய திசை:
வாஸ்து நிபுணர்களின் கூற்று படி இந்தச் செடியை தென்கிழக்கு திசையில் வைத்துதான் வளர்க்கவேண்டும். ஏனென்றால் தென் கிழக்கு திசையில்தான் பாசிட்டிவ் எனர்ஜி அதிகமாக கிடைப்பதாகவும், இந்த திசையில் மணிபிளான்ட் செடி வைத்து வளர்ப்பதன் மூலம் அது நன்றாக வளர்ந்து, அதன் வேகமான வளர்ச்சி போலவே வீட்டில் செல்வ வளமும் பெருகும் என்பது வாஸ்து நிபுணர்களின் கூற்றாக உள்ளது
தென்கிழக்கு திசை விநாயகருக்கு உரிய திசையாகவும், சுக்கிரன் பிரதிநிதித்துவம் செய்யும் திசையாகவும் கருதப்படுகிறது. எவ்வாறு விக்னம் என்னும் சொல்லிற்கு ஏற்றவாறு விநாயகர் நமது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக இருக்கிறாரோ, அதுபோல இந்த திசையில் வைக்கப்படும் மணிபிளான்ட் செடியும் நமது வீட்டில் உள்ள பிரச்சனைகள் அனைத்தையும் தீர்க்கும் வல்லமை பெற்றதாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் சுக்ரனுக்கு உரிய திசை என்பதால் செல்வ வளமும் பெருகும் என்பது அனைவரின் நம்பிக்கையாக உள்ளது.
மணி பிளான்ட் வைக்கக்கூடாத திசை:
மணிபிளான்ட் செடியை எக்காரணம் கொண்டும் வடகிழக்கு திசையில் மட்டும் வைத்து விடக்கூடாது. ஏனென்றால் இந்த திசை எதிர்வினையை அதிகரிக்கும் திசை என்பதால நமது வீட்டில் நஷ்டம் தான் அதிகரிக்கும். வீண் விரயங்களும் ஏற்படும்.
மணி பிளான்ட் வளர்க்க வேண்டிய முறை:
வீட்டில் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும் மணி பிளான்ட் செடியை மண் அல்லது நீரில் வைத்து வளர்த்தாலும் நன்றாக வளரும். அவ்வாறு வீட்டின் உட்புறம் மற்றும் வெளிப்புறம் இவ்வாறு உங்களுக்கு விருப்பமான எந்த இடத்தில் வைத்தும் வளர்க்கலாம். ஆனால் நீங்கள் வைக்கும் திசையை மட்டும் கவனமாக பார்த்து கொள்ள வேண்டும். இந்த செடியில் இருக்கும் இலைகள் ஏதேனும் ஒன்றிரண்டு வாடி இருந்தாலும் அதனை உடனே அகற்றி விட வேண்டும். இல்லையென்றால் அவை முழுச் செடியையும் பாதித்துவிடும். இவ்வாறு இந்தச் செடி பாதிப்படைவதென்பது வீட்டிற்கு நன்மையை கொடுத்திடாது.
This comment has been removed by the author.
ReplyDeleteVery nice ayya V.samy avl.
ReplyDelete