Tuesday, 7 September 2021

புதினாக்கீரை பயிரிடும் முறைகள் மற்றும் பயன்கள்

புதினாக்கீரை
 
புதினாக்கீரை பயிரிடும் முறைகள் மற்றும் பயன்கள்
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

கீரை வகைகளில் ஒன்றான புதினா நல்ல நறுமணம் கொண்ட ஒரு மருத்துவ மூலிகையாகும்.

கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லியை போலவே புதினாவும் உணவுக்கு மணமூட்டுவதற்காக பயன்படுத்தப்படுகிறது.

புதினா வருடம் முழுவதும் அறுவடை செய்யக்கூடிய பயிர்களில் ஒன்றாகும். இதற்கு காலநிலை எதுவும் கிடையாது. ஆனால் ஜூன் – ஜூலை மாதங்களில் நடவு செய்ய சிறந்த பருவம் ஆகும்.

பயிரிடும் முறை:👇👇👇

நிலத்தை நன்கு பண்படுத்தி மக்கிய தொழு உரம் இட வேண்டும். பின்பு சாகுபடிக்கு ஏற்றவாறு பாத்திகள் அமைத்துக் கொள்ளவேண்டும். பாத்தி கட்டி புதினா நாற்றை நடவு செய்ய வேண்டும்.
இது பொதுவாக பத்தியங்கள் மூலம் இனப்பெருக்கம் செய்யக்கூடியது. சிறிது வேர் இருந்தாலும் நன்கு தழைத்து வளரும் தன்மை உடையது.
தயார் செய்துள்ள பாத்திகளில் 40 x 40 செ.மீ இடைவெளியில் புதினாவை நடவு செய்ய வேண்டும். புதினா சாகுபடிக்கு உப்பு நீரை பாய்ச்சினால், அது விளைச்சலை பாதிக்கும். எனவே நல்ல நீரை மட்டும் பாய்ச்ச வேண்டும். பின்னர் மூன்று நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
ஒரு எக்டருக்கு தழைச்சத்து 30 கிலோ, மணிச்சத்து 60 கிலோ மற்றும் சாம்பல் சத்து 10 கிலோ கொடுக்கக்கூடிய உரங்களை அடியுரமாக இட வேண்டும்.
நடவு செய்த 60 மற்றும் 120 வைத்து நாளில் ஒரு எக்டருக்கு 30 கிலோ தழைச்சத்து உரத்தை இரண்டு முறை பிரித்து இடவேண்டும். ஒவ்வொரு அறுவடைக்கு பின்னரும் உரமிட வேண்டும்.
தேவைக்கேற்ப கைகளை எடுத்து களைகளை கட்டுப்படுத்த வேண்டும்.
பூச்சி தாக்குதல் அதிகமாக இருக்காது. சில இடங்களில் வெள்ளை பூச்சி அல்லது புரோட்டான் கருப்புப் புழு தாக்குதல் காணப்பட்டால் இஞ்சி பூண்டு கரைசல் தெளிக்கலாம்.
நடவு செய்த 5 வைத்து மாதத்தில் முதல் அறுவடையும் அதன் பின்னர் மூன்று மாத கால இடைவெளியிலும் அறுவடை செய்ய வேண்டும். நல்ல முறையில் பராமரிப்பு செய்தால் நான்கு ஆண்டுகள் வரை மகசூல் எடுக்கலாம்.
ஒரு வருடத்திற்கு ஒரு எக்டரிலிருந்து 15 – 20 டன் புதினா கிடைக்கும்.

பயன்கள்:👇👇👇

உடலுக்கு நோய் எதிர்புச் சக்தி அளிக்கக்கூடியது. உணவை செரிமானம் செய்யவும், உணவு செரிமானம் சம்மந்தமாக வரும் வெப்பத்தையும் ஜூரத்தையும் நீக்கவல்லது.
வயிற்றுப்போக்கு ஏற்பட்ட சமயம் புதினாக்கீரை துவையலை சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு நிற்கும்.
மூச்சுத்திணறல் நிற்க புதினா இலையைச் சிறிதளவு எடுத்து மூன்று மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து பின் அந்த நீரை குடித்தால் மூச்சுத்திணறல் பிரச்னை நீங்கும்.
புதினாவை உலர்த்திப் போடி செய்து பற்பொடியாக உபயோகப்படுத்தினால் பற்களுக்கு நல்லது. ஈறுகளும் வலிமை பெரும்.
மஞ்சள் காமாலை, வாதம்,வறட்டு இருமல், சோகை, நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றுக்கும் புதினாக் கீரை சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.

1 comment:

  1. புதினா கீரையின் வேறு பெயர்கள் : ஈயெச்சக் கீரை, பொதினா, புதியன் மூலி, புதீனா.

    இதன் தாவரவியல் பெயர் : Mentha Arvensis (Old Name : Mentha Sativa

    குடும்ப பெயர் : Lamiaceae
    ஆங்கில பெயர் : The Marsh Mint
    ஹிந்தி : Chetni-maragu
    தெலுங்கு : Pudina
    சமஸ்கிருதம் : "
    மலையாளம் : Putiyana

    புற விளக்கம்(புற அமைப்பு) :

    வாசனை நிறைந்த தாவரம். "தனி இலைகள் எதிரிலை குறுக்கு மறுக்கு அடுக்கத்தில் அமையப் பெற்றிருக்கும்.
    இலை விளிம்பு பற்கள் போன்ற முனைகள் உடையதாகக் காணப்படும். சிறிய இளஞ் சிவப்பு நிறமான மலர்கள் கொத்து கொத்தாகக் காணப்படும்.

    வேதிப் பொருட்கள் :

    இலையிலுள்ள நறுமண எண்ணெயில்
    Carvone, Carene Menthol எனும் டெர்பினாய்டுகள் உள்ளன. Camphor என்ற பொருளும் இதிலிருந்து கிடைக்கப் பெறுகிறது.

    செய்கைகள் : இசிவகற்றி, வெப்பமுண்டாக்கி, அகட்டுவாய்வகற்றி.

    மருத்துவ குணம் :அஜீரணம்,நீர்க்கட்டு,
    கபநோய்கள், வயிற்றுவலி, சுவையின்மை, காமாலை, வாந்தி, விக்கல் முதலியன குணமாகும்.

    நோய் தீர்க்கும் முறை :

    * இதிலிருந்து எடுக்கப்படும் ஒருவகை ஊண்ணெய் வெளிநாட்டில் தயாராகும் Peppermint தைலத்தைப் போலிருக்கும். ஆனால்.. காரம் சற்று குறைச்சலாகும்.
    இதை நெற்றியிவ் தடவ, தலைவலி குணமாகும். சிறிது நீர் கலந்து உள்ளுக்குக் கொடுக்க வயிற்றுவலியை நீக்கி பசியை உண்டுபண்ணும்.

    * புதினாக் கீரையைத் துவையல் செய்து சாப்பிட ... அஜீரணம், வயிற்றுவலி தீரும்.

    * புதினாக் கீரையை நன்கு உலர்த்திப் பொடி செய்து பல் துலக்கி வர .. பல் நோய்கள் மட்டுப்படும்.

    * புதினாக் கீரையை உலர்த்திக் குடிநீரிட்டு, 50 மி.லி. வீதம் கொடுத்துவர ... காமோலை, விக்கல், வயிற்றுவலி நீங்கும்.

    * புதினா கீரையை உலர்த்தி, அத்துடன் கற்பூரப் புல்லையும் சமஅளவு எடுத்து குடிநீரிட்டுக் கொடுக்க ... வாந்தி, தலைவலி, ஜுரம் தணியும். சிறுநீரைப் பெருக்கும். நல்ல உறக்கம் உண்டாகும். சூதகக் கோளாறுகள், வயிற்றுவலி நீங்கும்.


    அன்புடன்
    சிவ ஜான்ஸி கண்ணன்



    ReplyDelete