Saturday, 15 October 2022

உங்க ராசிப்படி நீங்க எப்படி ..

உங்க ராசிப்படி நீங்க எப்படி ..
மிதுனம்,கன்னி,தனுசு,மீனம்

உபய ராசிகள் என்பது மிதுனம்,கன்னி,தனுசு,மீனம் ஆகும்..இவை நான்கும் ராசிக்கட்டத்தில் ஒவ்வொரு மூலையிலும் இருக்கும் ராசிகளாகும்..நான்கு மூலைகளிலும் போய் சந்தில் மாட்டிக்கொள்கின்றன...அது போலவே இந்த ராசியினரும் எப்போதும் அடைபட்டு இருக்கும் குணமுடையவர்.

ஒரு பிரச்சினை என்றால் மனசு கஷ்டமாகி படுத்துக்கொள்வர்.அதிகம் செயல்படாத ராசி.வீடு தான் இவர்களுக்கு உலகம்.அலுவலகம் விட்டால் வீடு.குழந்தைகள் மீது உயிரையே வைத்திருப்பர்.

நான் வாழ்வதே குழந்தைகளுக்காக என்பர்.அடிக்கடி குழப்பத்தில் ஆழ்ந்து விடுவர்.யார் என்ன சொன்னாலும் நம்புவர்.ஏமாந்தும் விடுவர்....வரவு செலவுக்கு இவங்க ஒத்து வர மாட்டாங்க..கடன் இவங்க யாருக்காவது கொடுத்தா திரும்பி வராது....பிஞ்சு மூஞ்சி என்பது இவர்களுக்குதான்.ஆனா சவுண்ட் பலமா இருக்கும்.

இன்னொரு உபய ராசியினரை கல்யாணம் செய்துகிட்டா பிரச்சினை இல்லை..ஆனா சர ராச்யினரை கல்யாணம் செய்துகிட்டா அவங்க என்ன சொல்றாங்களோ அதைதான் கேட்கனும்.மனைவி சொல்லே மந்திரம் என வாழ்வது இவர்கள்தான்.மாமனார் மாமியார்க்கு கட்டுப்பட்ட மாப்பிள்ளை.

..கல்யாணம் வரைக்கும் அம்மா,அக்கா,அண்ணன் தான் தெய்வம்..கல்யாணத்துக்கு அப்புறம் மனைவி,மாமனார் ,மாமியார்தான் தெய்வம் என வாழ்வது இந்த ராசியினர்தான்..பாசக்காரங்க...மென்மையானவங்க..
கடும் சொல் தாங்காதவர்கள்...கடுமையா உழைக்கவும் முடியாது...

மிகப்பெரும் அறிவாளிகள்..அறிவால்தான் சம்பாதிப்பர்.உடல் உழைப்பு ஆகாது.அது இவங்களுக்கு தெரியாது.....நிறைய சம்பாதிக்கும் வித்தை இவர்களுக்குதான் தெரியும்..

.பங்கு வர்த்தகம்,வங்கி பணி,ஆன்மீகம் சார்ந்தவை,பைனான்ஸ்,வியாபாரம் போன்றவற்றில் இவர்களே இருக்கின்றனர்.உட்கார்ந்து சம்பாதிக்கும் எல்லா துறைகளிலும் இவர்களை பார்க்கலாம் ..மாமியார்,மருமகள் சண்டை அடிக்கடி நடப்பது இந்த நான்கு ராசிக்காரங்க வீட்லதான்.

மிதுனம் ராசியினர் மனைவி /கணவன் சொல் மட்டும் கேட்டு நடந்து கொண்டால் எந்த ஆபத்தும் இல்லை.குடும்பம் நல்லாருக்கும்...மாமியாரால் ஆதாயம் உண்டு.மாமியார்,மருமகள் சண்டை ,மாமனார் ,மருமகன் ஈகோ பிரச்சினை அடிக்கடி உருவாகும்.

கன்னி ராசியினர் மனைவி ஆன்மீகம் கடவுள் பக்தி கொண்டவர். நல்லவர்.மாமனார்தான் அடிக்கடி வம்பிழுப்பார்.அம்மா போலவே நல்ல பொண்ணு மனைவியா அமைவாங்க.

தனுசு ராசியினர் மனைவி/கணவர் அறிவாளி.அவர்கள் சொல்படி செயல்படுவது உத்தம பலன் தரும்.அம்மா ஆன்மீகவாதி.மனைவி முற்போக்கு சிந்தனையாளர்.அம்மா ம்னூட நம்பிக்கை எனில் மனைவி எதையும் பகுத்தறிந்து செயல்படுபவர்.

மீனம் ராசியினர் கணவன் /மனைவி கலகலப்பானவர் செல்வாக்கானவர்.உங்கள் கடும் சொல்தான் அடிக்கடி அவரை கடுப்பாக்கும்.மாமனாரால் ஆதாயம் உண்டுமனைவியும் அறிவாளி.அம்மாவும் அறிவாளி..இருவரையும் ஒரே வீட்ல இருந்தா அதை திறமையாக சமாளிப்பதுதான் இவர்களது முக்கிய வேலை

No comments:

Post a Comment