Tuesday, 18 October 2022

லக்னம் vs தரிசனம்

மிதுனம் லக்னத்தில் பிறந்தவர்கள் திருப்பதி சென்று வந்தால் பணம் நிறைய சேரும்...அதே போல இவர்கள் திருவண்ணாமலை கிரிவலம் சென்று வந்தால் சொந்த வீடு அமையும்

சிம்மம்,விருச்சிகம் லக்னத்தார் திருச்செந்தூர் சென்று வந்தால் வருமானம் இரட்டிப்பாகும்...தனுசு லக்னத்தாருக்கு இங்கு சென்று வந்தால் வீடு அமையும்.

கன்னி லக்னத்தார் சபரிமலை சென்று வருவது நல்லது

கடகம் ,சிம்மம் லக்னத்தாருக்கு ஆற்றின் கரை யில் இருக்கும் முருகனை கிருத்திகையில் வழிபட்டால் கடன் தீரும்.

மேசம் ,துலாம் லக்னத்தாருக்கு பழமி முருகனையும் ,அடிவாரத்தில் இருக்கும் முருகனையும் ஒரு சேர தரிசிக்க சகல பிரச்சினைகளும் தீரும்.

மகரம் ,கும்பம் லக்னத்தார் ஸ்ரீரங்கம் பெருமாளை வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு விஸ்வரூப தரிசனமாக பார்க்க எல்லா துன்பங்களும் தீர்ந்து ஆரோக்யம் உண்டாகும் பண பிரச்சினை தீரும்.

ரிசபம் லக்னத்தார் மதுரை மீனாட்சியை வெள்ளிக்கிழமை இரவு கால பூஜையை தரிசிக்க லாபம் உண்டு.

மீனம் லக்னத்தார் மலை மீது இருக்கும் முருகன் வழிபாடு சிறப்பு தரும்.

ராசிக்கு சொல்லவில்லை லக்னத்துக்கு சொல்லி இருக்கிறேன்.

No comments:

Post a Comment