Saturday, 15 October 2022

சொந்தமாக வீடு வாங்க முடியவில்லை நாம் எல்லாம் சொந்த வீடு எங்கே வாங்க போகிறோம் என நினைக்கவே வேண்டாம்

சொந்தமாக வீடு வாங்க முடியவில்லை நாம் எல்லாம் சொந்த வீடு எங்கே வாங்க போகிறோம் என நினைக்கவே வேண்டாம் .உங்கள் சொந்த வீடு எப்படி இருக்க வேண்டும் அதில் எத்தனை அறைகள் இருக்க வேண்டும் முகப்பு எப்படி இருக்கனும் வீட்டின் பெயர் என்ன என்ன நிறத்தில் பெயிண்ட் என நுணுக்கமாக யோசித்து கொண்டே இருங்கள் .நீங்கள் நினைத்தது போலவே அமையும் .ஒரு நாள் சொந்த வீட்டில் வசிப்பீர்கள்.

வருமானம் இல்லை சேமிப்பு இல்லை என துவள வேண்டாம் தினசரி அலது மாதம் எவ்வளவு தொகை வேண்டும் என பெரிய தொகையை கற்பனை செய்யுங்கள் அதை எப்படி பயனுள்ளதாக செலவழிக்க வேண்டும் முதலீடு செய்ய வேண்டும் பெருக செய்ய வேண்டும் என்பதை பற்றி தினசரி இரவு தூங்கும் முன் பத்து நிமிடம் திட்டமிடுங்கள் 

அந்த தொகை நிச்சயம் வந்தடையும் .இது பேராசை அல்ல.பெரும் பணத்தை நிர்வகிக்க உங்கள் மனம் முதலில் தயாராக இருக்க வேண்டும் அதன் பின்பே இறையருள் உங்களுக்கு அதனை வழங்குகிறது தயாராக இல்லாதவரிடத்தில் பெரும் பணம் வந்தாலும் தங்குவதில்லை.

No comments:

Post a Comment