Saturday, 10 December 2022

திருமண பொருத்தம் -மாமனார் மாமியார் பொருத்தம்

திருமண பொருத்தம் -மாமனார் மாமியார் பொருத்தம் 

3ல் ராகு சனி செவ்வாய் போன்ற கிரகங்கள் இருந்தால் மாமனார் மருமகன் உறவு அப்படியே தாமரை இலை தண்ணீர் போலத்தான் ஏதாவது சுப கிரகங்கள் பார்த்தால் இன்னும் கொஞ்சம் நெருக்கமாகும் 

பெரும்பாலும் மாமனார் வீட்டுக்கு போக மாட்டாங்க வருசம் ஒரு தடவை போவதே அரிது.மாமனார் ஆரோக்கியமாக இருக்க மாட்டார் ..சனி மூன்றில் மாமனார்க்கு வறுமை.குரு அல்லது சுக்கிரன் 3ல் மாமனார் பணக்காரர் செல்வாக்கானவர்…3ல் செவ்வாய் மாமனார் கோபக்காரர் ..3ல் கேது மாமனார் பல சிக்கல் உடையவர் வழக்கு விபத்து சந்திப்பார் விரக்தியானவர்.

 சுபரே அங்கு இருந்தால் 3ஆம் அதிபதி வலுவாக இருந்தா என் மாமனார் போல வருமா என ஊருக்குள் பெருமை பேசும் மருமகன் கிடைப்பார் மருமகள் கிடைப்பாள்.

2ஆம் அதிபதி திசை நடந்து 2ஆம் அதிபதி 12ல் வலுத்து பாவருடன் இருந்தால் மாமனார்க்கு தொடர் விழ்ச்சி…பத்தாம் அதிபதி கெட்டு இருந்தால் மாமியார் சதிகாரியா மாறிடுவாங்க..பத்தில் சுபர் இருந்தால் என்னொட மாமியார் என்னோட அம்மா மாதிரி என்பார்கள்..பத்தில் பாவர் மாமியார்க்கு கேடு..மாமியார் கொடுமை நடக்கும் பத்தாம் அதிபதி 6,8ல் இருந்தால் மாமியார்தான் முதல் எதிரி.

12 ஆம் அதிபதியும் பத்தாம் அதிபதியும் ஒண்ணா இருந்தால் மாமனார் தன்னுடைய தொழிலில் பங்கு தாரராக சேர்த்துக்கொள்வார்…சுகாதிபதி திசை நடந்தால் மாமனார் தன்னுடைய சொத்துக்களில் ஒன்றை மருமகன்/மருமகள் பெயரில் எழுதி வைப்பார்

3ஆம் அதிபதி லக்னாதிபதி ஒன்றாக 1,4,5,7,9,10,11 ஆம் இடங்களில் இருப்பின் மாமனார் மருமகன் எப்போதும் ஒற்றுமையா இருப்பாங்க..

10 ஆம் அதிபதி லக்னாதிபதி ஒன்றாக 1,4,5,7,9,10,11 ஆம் இடங்களில் இருந்தால் மருமகளும் மாமியாரும் ஒற்றுமையா இருப்பாங்க…10 ல் சுக்கிரன் மாமியார் வசதியானவர் அழகானவர் செல்வாக்கு நிறைந்தவர். அழகான பெரிய வீடு இருக்கும்.

லக்னத்தில் சுப கிரகம் இருந்தாலே அதாவது குரு,சுக்கிரன்,புதன்,சந்திரன் இவர்களில் ஒருவர் இருந்தாலே சிரித்த முகம்.மாமனார் மாமியார்க்கு பொதுவாகவே பிடிக்கும்.

லக்னத்தில் சுக்கிரன் உள்ளூரில் அல்லது பக்கத்து தெருவில் மாமனார் வீடு இருக்கும்..உறவில் திருமணம் ஆகி இருக்கும்

No comments:

Post a Comment