Saturday, 4 February 2023

திருப்பதியில் தங்க இடம் முகவரி

திருப்பதியில் தங்க இடம் முகவரி இங்கு 200 படுக்கை அறை உள்ளது ஓரு அறைக்கு வெறும் 200 ருபாய் காலை காபி காலை சிற்றுண்டி மதியம் உணவு இரவு உணவு எல்லாம் சேர்த்து ஓரு ஆளுக்கு வெறும் 200 ருபாய் மட்டும் தான் திருப்பதி செல்பவர் பயன்படுத்தி கொள்ளலாம்.

Tirumala Sri Kasimath,
Ring road, Near S.V.Meseum,
Tirumala - 517507 (A.P)
Ph : 0877-2277316
திருமலையில் தங்குவதற்கு  ஒரு அறை கண்டுபிடிக்க சிரமமாக இருந்தால், 
இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் , பயன்படுத்தி கொள்ளுங்கள்.

கோவிலுக்கு மிக அருகிலேயே கீழ் கண்ட மடங்கள் உள்ளன. அவற்றில் தங்கலாம்.

ஹோட்டலுக்குரிய ரூம்வசதிகளோடு உள்ளன.

மூல் மட் மின்: +918772277499 0877-2277499.
புஷ்பா மண்டபம் : 0877-2277301.
ஸ்ரீ வல்லபச்சரிய ஜீ மட் பி: 0877-2277317.
உத்ததி மட் (திருப்பதி) பி 0877-2225187.
ஸ்ரீ திருமலகாஷி மட் Ph-0877-2277316.
ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமி மட்  Ph-0877-2277302.
ஸ்ரீ வைகனச திவ்யா சித்தன்டா விவேர்டினினி சபை 
Ph: 0877-2277282.
ஸ்ரீ காஞ்சி காமகோடி மட் 
Ph : 0877-2277370.
ஸ்ரீ புஷ்பகிரி மட் Ph-0877-2277419.
ஸ்ரீ உட்டாரடி மட் Ph-0877-2277397.
உடுப்பி மட் Ph-0877-2277305.
ஸ்ரீ ரங்கம் ஸ்ரீமத் ஆத்வான் ஆசிரமம் : 0877-2277826.
ஸ்ரீ பரகலா ஸ்மிமி மட் பி: 0877-2270597,2277383.
ஸ்ரீ திருப்பதிஸ்ரீமன்னாரயன 
ராமானுஜா ஜீயர் மட் பி: 0877-2277301.
ஸ்ரீ சிருங்கரி சாரதா மடம்
Ph: 0877-2277269, 2279435.
ஸ்ரீ அஹோபீதா மட் ப. 0877-2279440.
ஸ்ரீ திருமல காஷி மத் தொலைபேசி: 222 77316
உடுபி மட் பி: 0877 222 77305
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீதந்தி ராமனுஜீயர் மட் Ph : 0877 222 77301)
ஸ்ரீ காஞ்சி காமகோடி 
பீட்டம் மட் / சர்வா மங்கலா கல்யாண மண்டபம் , 
Ph : 0877 222 77370
ஸ்ரீ வல்லபச்சரிய மடம் 
தொலைபேசி: 222 77317
மந்திராலயா ராகவேந்திர சுவாமி மட் / பிருன்தாவனம் Ph : 0877 222 77302
ஆர்யா வைசியா சமாஜம் எஸ்.வி.ஆர்.ஏ.வி.டி.எஸ்.எஸ்.டி
Ph  : 0877 222 77436
ஸ்ரீரங்கம் ஸ்ரீமதி 
ஆதித்யான் ஆஷ்ரம் 
Ph : 0877 222 77826
ஸ்ரீ வைகநாத ஆசிரமம்
Ph : 0877 222 77282
ஸ்ரீ அஹோபில மட்  
Ph : 0877-2279440
ஸ்ரீ சிருங்கேரி சங்கர மடம் / சாரதா கல்யாண மண்டபம் Ph : 0877 222 77269
ஸ்ரீ வைசராஜர் மடம் மோதிலால் பன்சிலால் தர்மசாலா Ph : 0877 222 77445
ஹோட்டல் நரிலமா சௌல்ரி Ph : 0877 222 77784
ஸ்ரீ சீனிவாச சொல்ரி 
Ph : 0877 222 77883
ஸ்ரீ ஹதிராம்ஜி மட் மின் 
Ph : 0877 222 77240
கர்நாடகா விருந்தினர் 
மாளிகை 
Ph : 0877 222 77238
தக்ஷிணா இந்தியா ஆர்யா வியா கபு முனிரட்ணம் 
அறநெறிகள் 
Ph : 0877 222 77245
ஸ்ரீ சிருங்கேரி சங்கர நீலம் 
Ph : 0877 222 79435
ஸ்ரீ ஸ்வாமி ஹதிராஜ் முட்டம் Ph : 0877-2220015

வயதில் மூத்த குடிமக்களும் ஜருகண்டி சொல்லித் தள்ளிடும் திருப்பதிகோவில் பாதுகாவலர்கள் இனி யாரைத் தள்ளுவது என்று முழிக்கும் காலம் வந்துவிட்டது.
65 வயது கடந்த மூத்த குடிமக்கள் நாள் ஒன்றுக்கு 700 பேர் இலவசமாக தரிசனம் செய்யலாம் என்பது எப்படி?

நிபந்தனைகள் 
1) ஆதார் அட்டை அவசியம்.
2) 65 வயது முடிந்திருக்க வேண்டும்
3) காலை எட்டு மணிக்கு குறிப்பிட்ட இடத்தில் அறிக்கை செய்ய வேண்டும்.
4) காலை 10 மணி முதல் 
மாலை 3 மணி வரை தரிசனம் நேரம்.
5) தினம் 700 பேருக்கும் அனுமதி உண்டு.
6.) உதவி செய்வதெற்கென 
உடனொருவர் செல்ல அனுமதி உண்டு அவளுக்கும் ஆதார் அவசியம்.
7) காலை உணவு பால் இலவசம்.
8.) அவர்களுக்கு 70 ரூபாய்க்கு 4 லட்டுகள் வழங்கப்படும்.
9) ஒருமுறை சென்றவர் 3 மாத காலத்திற்கு பின்னரே மீண்டும் அனுமதிக்கப் படுவர்.
10) இவை அனைத்தும் இலவச சேவையாகும். பயனுள்ள தகவலை பகிரலாமே. இந்த தகவல்கள்அனைத்தும் திருப்பதி தேவஸ்தானம் அறிக்கை !

 ௐ நமோ நாராயணா....

13 comments:

  1. அய்யா வெ.சாமி அவர்களுக்கு நமஸ்காரம். அருமையான தகவல்..அய்யா. ஆனால் ஒரு வருத்தம் 65− வயதுக்கு மேலுள்ளோர் எனக் கொடுத்து..என் ஆசை வடிந்துவிட்டதுங்கய்யா. நானும் ஒரு நாள் திருப்பதி செல்ல வேண்டும் என்கிற தனிப்பட்ட ஆசை எனக்குண்டுங்கய்யா. அதற்கு இன்னும் அடியேன் 2− வருடம் காத்திருக்ண வேண்டுமா என்ன ?

    ReplyDelete
  2. தங்கள் பதிவை அனைவருக்கும் பார்வர்டு செய்து விட்டேன் அய்யா. எனக்கு அப்பாக்யம் கிடைத்ததீல் எனக்கு சந்தோஷம். ,

    ReplyDelete
  3. Mon. 20, Mar. 2023 at 12. 18 pm.

    சைவ சித்தாந்தம் தொடர்ச்சி...!

    411) இருவினை ஒப்பால் உண்டாவது....
    *சத்திநிபாதம்.*

    412) சத்திநிபாதத்தின் வகைகள்....
    *மந்தகரம், மந்தம், தீவிரம், தீவிரதரம்.*

    413) ஏகனாகி நிற்றல் என்பது....
    *ஆன்மா... இறைச் சார்பில் ஒன்றி நிற்றல்.*

    414) ஏகனாகி நிற்றலால் ஏது பயன்....
    *ஆணவ மலவாசனை தாக்காது.*

    415) இறைபணி நிற்றல் என்பது....
    *எல்லாம் சிவம் செயல் என்று ஒழுகல்.*

    416) இறைபணி நிற்றலால் ஏது பயன்...
    *மாயா மலவாசனையும், கன்ம மலவாசனையும் தாக்காது.

    417) மந்திரங்களில் தலையாய மந்திரம்.*திருவைந்தெழுத்து.*

    418) இதுபோல்.... மந்திர ராஜம் என்று அழைக்கப்படுவது....
    *திருவைந்தெழுத்து.*

    419) திருவைந்தெழுத்தின் வடமொழிப் பெயர்....
    *பஞ்சாக்கரம்.*

    420) ஐந்தெழுத்தின் மூன்று வகைகள்....
    *தூல பஞ்சாக்கரம், சூக்கும பஞ்சாக்கரம்,காரண பஞ்சாக்கரம்.*

    மீண்டும் அடுத்த பதிவில்....!

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  4. Tue. 21, Mar. 2023 at 12.28 pm

    உயிரியல் துளிகள் − 49.

    * தாவரங்களையும், விலங்குகளையும் வகைப்படுத்தியவர்.....
    *காரல் வின்னேயஸ்.*

    * மோப்பத்தை அறிய உதவும் நரம்பு.....
    *வாசனை நரம்பு.*

    * காய்கறித் தங்கம்.....
    *சேஃரான்.*

    * லிங் பைப் என்பது....
    *ஒரு பறவை.*

    * வைட்டமின் B-1 ன் வேறு பெயர்....
    *தயமின்.*

    * உலகின் முதல் உயிரினம் எனக் கருதப்
    படுவது....
    *பாக்டீரியா.*

    * நமது மூளை எத்தனை செல்களால் ஆனது....
    *6−மில்லியன் செல்களால் ஆனது.*

    * வண்ணத்துப் பூச்சிப் புழுவின் பெயர்....
    *காட்டர் பில்லர்.*

    * நுரையீரலைத் தாக்கும் நோய்....
    *நிமோனியா.*

    .* ஒரு செல் உயிரிகள் அழைக்கப்படு
    வது....
    *புரோட்டோ சோவாக்கள்.*

    மீண்டும் அடுத்த பதிவில்....!

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  5. அய்யா... வாழ்க்கையில் முயன்றால் கிடைக்காதது எதுவுமே இல்லை அய்யா. முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்..!

    அடுத்து எனக்கு ஒரு சிறிய ஆசை.. தட்டச்சுவைப் பற்றியும் பதிவு அனுப்பலாம் என ஒரு ஆசை.

    ReplyDelete
  6. சிவயசிவ...!

    Mon. 20, Mar. 2023 at 5. 30 pm.

    தட்டச்சு நாடாவானது.... 3− விதமான இயக்கத்தைப் பெற்றுள்ளது.

    1) Lengthwise movement. அதாவது நீட்டுப் போக்கு இயக்கம்.

    2) Up and Down movement. அதாவது மேல் கீழ் இயக்கம்.

    3) Automatic Reverse movement. அதாவது...தானாக மாறும் இயக்கம்.

    நாடாவின் நீளம் முழுவதும் பயன்பட நீட்டுப்போக்கு இயக்கமும்....

    நாடாவின் அகலம் முழுவதும் பயன்பட
    மேல் கீழ் இயக்கமும்....

    நாடாவின் சக்கரத் தண்டு சுற்றும் பொழுது, நாடாவானது நீட்டுப் போக்கு இயக்கத்தையும் பெறுகிறது.

    நாடாவின் மேல் கீழ் இயக்கம்... "நாடாவை இயக்கும் நெம்புகோலினால்" நடைபெறுகிறது.

    ஒரு நாடாச் சக்கரத்தில் உள்ள நாடா காலியானதும்... தானாக மாறும் இயக்கத்தினால், காலியான நாடாச் சக்கரம் நாடாவைத் தன்னகத்தே சுற்றிக் கொள்ளும் நிலையைப் பெறுகிறது. இவ்வாறு தானாக மாறும் இயக்கம் "நாடா திசை திருப்பியால்" நடைபெறு கிறது.

    * Draw Cord - இழுவை நாடா

    * Mainspring Drum − வில்விசைத் தொட்டி

    * Gear plat − பல் சக்கரத் தகடு

    * Driving Shaft Gear − செலுத்துந் தண்டின் பல் சக்கரம்


    * Driving Shaft Bevel Gear − செலுத்துந் தண்டின் சாய்வுப் பல் சக்கரம்.

    * Ribbon Ratchet − நாடா பல் சக்கரம்

    * Long Gear Shaft − பல்லிணை நீளத் தண்டு.

    * Long Gear Shaft Bevel Gear − பல்லிணை நீளத் தண்டின் சாய்வுப் பல் சக்கரம்.

    * Ribbon Spool Shaft Bevel Gear − நாடாச் சக்கரத் தண்டின் சாய்வுப் பல் சக்கரம்.

    * Ribbon Spool Shafts − நாடாச் சக்கரத் தண்டுகள்.

    * Ribbon Spool Rings − நாடாச் சக்கர வளையங்கள்

    * Triggers − விசைவில்கள்

    * Ribbon Reversers − நாடா திசை திருப்பிகள்.

    * Ribbon Spool − நாடாச்சக்கரம்

    * Ribbon Pool Top Plate − நாடாச் சக்கர மேல் தட்டு.

    * Ribbon − நாடா

    * Ribbon Carrier − நாடா தாங்கி

    * Typebar Guide − எழுத்தச்சாணி வழிகாட்டி.

    * Segment − அரைவட்டத் தகடு

    * Carriage Scale Indicator − உருளைத் தாங்கி அளவுகோலின் குறிகாட்டி.

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  7. Mon. 20, Mar. 2023 at 5. 51 pm.

    தட்டச்சுவின் மணியோசை...!

    வலது ஓர நிறுத்தி உள்ள இடத்திற்கு ...
    ஏழு எழுத்தச்சுக்கு முன் ... உருளைத் தாங்கி வந்ததும், வலது ஓர நிறுத்தியின் "பக்க எறிவானது மணியோசைச் சுத்தியலின் பக்க எறிவைத் தள்ளுகிறது.

    மணியோசைச் சுத்தியலின் பக்க எறிவு சரிவாக இருப்பதால்... ஓரநிறுத்தியின் பக்க எறிவினால் வலப்புறமாகத் தள்ளப் பட்டு, மூல நிலையை அடையும்போது...மணியோசைச் சுத்தித் தகட்டின் முனையிலுள்ள, கண்டாமணியானது, மணியோசைக் கிண்ணத்தின் மீது மோதி, ஓசையை எழுப்புகிறது.

    உருளைத் தாங்கி ஏழு எழுத்தச்சு தூரத்தைக் கடந்ததும், வலது ஓர நிறுத்தியின் கீழ்எறிவானது, ஓர நிறுத்தித் தகட்டுடன் தொடர்பு கொண்டு, அதை இயங்கச் செய்கிறது.

    ஓர நிறுத்தித் தகடு இயங்குகையில், அதனுடன் இணைந்துள்ள, தடைத் தகட்டின் நீண்ட பாகமானது விடுபடுகிறது.

    இந்நிலையில்.... விசைப்பலகையின் தடைத்தகடானது நகர்ந்து விசை நெம்பு கோலின், எறிவு இடைவெளியில் நுழைவதால், விசைப்பலகையானது இயங்காத நிலையைப் பெறுகிறது.

    விசைப்பலகையை இயங்க வைப்பதற்கு, ஓர விடுவிப்பு விசையை அழுத்தும் போது, அதனுடன் இணைந்துள்ள நெம்பு கோலானது, ஒரநிறுத்தித் தகட்டைத் தள்ள, வல ஓர நிறுத்தியின் கீழ் எறிவானது, தடையினின்று விடுபடுகிறது.

    அதே சமயத்தில்... தடைத் தகட்டின் நீண்ட பாகமானது செயல்பட்டு, விசைப்பலகை
    யின் தடைத்தகட்டை விசை நெம்பு கோலின் எறிவு இடைவெளியிலிருந்து, விடுபடச் செய்து, விசைப்பலகையை இயங்கும்படிச் செய்கிறது.

    * Right Marginal Stop - வலது ஓர நிறுத்தி.

    * Marginal Rack − ஓரப் பல்சட்டம்.

    * Right Marginal Stop Downward Projection − வலது ஓர நிறுத்தியின் கீழ்எறிவு.

    * Right Marginal Stop Side Projection −
    வலது ஓர நிறுத்தியின் பக்க எறிவு.

    *Bell Hammer Side Projection − மணியோசைச் சுத்தியலின் பக்க எறிவு.

    * Bell Hammer Plate − மணியோசைச் சுத்தியல் தகடு.

    * Gong − கண்டாமணி

    * Bell Cup − மணியோசைக் கிண்ணம்.


    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  8. Tue. 21, Mar. 2023 at 4.14 pm.

    இன்றைய மருத்துவம்
    கண்டங்கத்திரி .....!

    கண்டங்கத்திரி :

    வேறு பெயர்கள் :

    கப நாசினி, பொன்னிறத்தி, முள் கொடிச்சி, சிங்கினி, சுவாச காசக்கினி, கன்னங்கத்திரி, கறி முள்ளி, பாப்பார முள்ளி.

    தாவரவியல் பெயர் :
    Solanum Surattense (Old Name : Solanum Xanthocarpum).

    குடும்பப் பெயர் : Solanaceae.
    ஆங்கிலப் பெயர் : Wild Eggs Plant.
    தெலுங்கு : Nelamulaka-vakudu.
    சமஸ்கிருதம் : Kanta -karika.
    மலையாளம் : Vellottu.
    ஹிந்தி : Kateli.
    கன்னடம் : Nela-gulla.

    வளரியல்பு : செடி.

    தாவரத்தின் புற அமைப்பு விளக்கம் :

    தாவரம் முழுவதும் 1.5 c.m நீளமுள்ள மஞ்சள் நிறமான முட்கள் காணப்படும்.
    இலைகளின் ஓரம் பிளவுற்று பற்கள் போன்று காணப்படும்.

    மாற்றடுக்கில் அமையப் பெற்றிருக் கும்.

    நீலநிறப் பூக்கள் சிறு கொத்துகளாகக் காணப்படும்.

    மேலும்.. பழங்கள் மஞ்சள் நிறமாகக் காணப்படும்.

    பயன்படும் பகுதி : சமூலம்.

    சுவை : கார்ப்பு
    தன்மை : வெப்பம்
    பிரிவு : கார்ப்பு

    தாவர வேதிப் பொருட்கள் :
    Carpesterol, Solanocarpine ஆகிய ஆல்கலாய்டுகள் உள்ளன.

    மருத்துவ குணங்கள் :

    இது கோழையை அகற்றி, சிறுநீரைப் பெருக்கும்.

    குடலில் தோன்றும் வாயுவைப் போக்கும்.

    பல்வலி, தொண்டைக் கட்டு, மலச்சிக்கல் முதலியன தீரும்.

    அதாவது... வெப்பமுள்ள கண்டங் கத்திரியினால்... காசம், சுவாசம், ௯ஷயம், தீச்சுரம், அக்கினி மந்தம், சந்நிபாதம் , ஏழுவகைத் தோஷங்கள், வாதரோகம் ஆகிய இவைகள் போம்.

    செய்கை :

    கபஹரகாரி, மூத்திர வர்த்தனகாரி, உதரவாதஹரகாரி, திரவகாரி (விதைக்கு).

    * கபஹரகாரி ( Expectorant) என்பது....கபத்தை வெளியாக்கி இருமலைத் தணிக்கும் மருந்து.

    * மூத்திர வர்த்தனகாரி (Diuretic) என்பது...
    மூத்திரத்தை அதிகமாக்கும் மருந்து.

    * உதரவாதஹரகாரி (Carminative ) என்பது....
    வயிற்றில் உஷ்ணத்தை உண்டாக்கி,வாயுவைக் கண்டிக்கும் மருந்து.

    * திரவகாரி (Sialogogue ) என்பது...
    உமிழ்நீரைச் சுரப்பிக்கும் மருந்து.

    நோய் தீர்க்கும் முறைகள் :

    1) கண்டங்கத்திரி விதையை..
    நெருப்பிலிட்டு வரும் புகையை சுவாசிக்க... வாயிலுள்ள கிருமிகள் மடியும். பல் வலி நிவாரணம் பெறும்.

    2) கண்டங்கத்திரி சமூலத்தை (இலை, பூ, காய், பழம், விதை, பட்டை வேர் இவையே சமூலம் என்பது) நன்கு அரைத்து.. 20 கி. எடுத்து, நீரில் கலந்து, தினம் 2− வேளைகள் குடித்துவர, மூக்கில் நீர் பாய்தல், தலை நீரேற்றம், கபநோய்கள் குணமாகும்.

    3) கண்டங்கத்திரி சமூலத்துடன் இந்துப்பு, பெருங்காயம் கலந்து, 10கி. வீதம் சாப்பிட்டு வெந்நீர் அருந்த இளைப்பிருமல் நீங்கும்.

    4) கண்டங்கத்திரி சாற்றுடன் தேன் கலந்து 100 மி.லி. வீதம் அருந்தி வர தொண்டைக்கட்டு குணமாகும்.

    5) கண்டங்கத்திரி வேர் 25 கி. கொத்தமல்லி 10 கி. ; சீரகம் 2 கி.;
    சுக்கு 2 கி. ; எடுத்து.. 2 லி. நீரில் போட்டு, 4−ல் 1− பங்காக சுருக்கி காய்ச்சி தினம் 3−வேளைகள்.. 100 மி.லி.வீதம் கொடுத்துவர நுரையீர லினால் தோன்றும் காய்ச்சல், சளிக்காய்ச்சல், கபநோய்கள் நீங்கும்.

    6) கண்டங்கத்திரி வேர், ஆடாதோடை வேர் வகைக்கு 30 கி. திப்பிலி 5 கி. சேர்த்து சிதைத்து, 1.5 லிட்டர் நீரில் கொதிக்க வைத்து 500 மி.லி.ஆக சுண்டியதும்.. தினமும் 100−மி.லி. வீதம்..3− வேளைகள் கொடுத்து வர ... ஆஸ்துமா, இருமல், நுரையீரலில் தோன்றும் கப நோய்கள் நீங்கும்.

    * கண்டங்கத்திரிச் சாறு− 1 1/4 பலம்
    * கருந்துளசிச் சாறு − 2 1/2 பலம்
    * ஆடாதோடைச் சாறு − 3 3/4 பலம்
    * தேன் − 7 1/2 பலம்

    இவைகளை ஒருமிக்கக் கலந்து, ஒரு பாத்திரத்திலிட்டு, அதனில் சுக்கு,மிளகு, திப்பிலி, நெல்லிவற்றல், கடுக்காய்தோல், தான்றிக்காய்(நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) கிராம்பு, இலவங்கப்பட்டை, ஏலம்,சித்தரத்தை, ஜாதி பத்திரி, பேரறத்தை, அதிமதுரம், தாளிசபத்திரி, ஜாதிக்காய் இவை யாவும் விராகனெடை − 1/2 விகிதம், பொன்மேனீயாக வறுத்தெடுத்து, சூரணம் செய்து போட்டுச் சிறுதீயாக எரித்து, விரலால் அழுந்தும்படியான இளகிய பதத்திற்குக் கிளறி வைத்துக் கொண்டு... தினம் காலை, மதியம், மாலை என மூன்று வேளையும், ஒரு விரலில் தோய்த்தெடுத்த அவிழ்தத்தைக் குழந்தைகளின் நாவில் தடவி வரக் "கக்குவான்" என்று சொல்லப்பட்ட கொடிய இருமல் குணமாகும். ஒருமாதம் தொடர்ந்து கொடுக்க..கக்குவான் முற்றிலும் குணமாகிவிடும்.

    *இதனைவிடச் சிறந்த அவிழ்தம் இல்லை எனலாம்.

    கப சம்பந்தமான, இருமல், ஈளை, கஷ்ட சுவாசம் இவைகளுக்குத் தொடர்ந்து கொடுத்துக் கொண்டு வர...கபத்தை எளிதில் கரைத்து...உபத்திரவத்தை நீக்கும்.

    இதில் கொடுக்கப்பட்டுள்ள அளவுகள்... பலம், விராகனெடை என்பது.

    1 − ரூபாய் எடை − 1 − தோலா
    3 − தோலா − 1 − பலம்.

    ( இது வேறுவிதமான அளவை)

    4−நெல் எடை = 1−குன்றிமணி
    32−குன்றிமணி = 1−விராகனெடை
    10−விராகனெடை = 1−பலம்
    ( இது நிறுத்தல் அளவை).

    ^ வாழ்க நலமுடன் ^

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  9. Tue. 21, Mar. 2023 at 9.46 pm.

    வார சூலம்....!

    * திங்கள் , சனி = கிழக்கே சூலம்.

    * செவ்வாய் , புதன் = வடக்கே சூலம்.

    * ஞாயிறு , வெள்ளி = மேற்கே சூலம்.

    * வியாழன் = தெற்கே சூலம்.

    அந்தந்த கிழமைகளில்..கொடுக்கப் பட்டுள்ள திசை நோக்கி பயணம் செல்வது சிறந்ததல்ல..

    வார சூலை என்பது... வார நாட்களில் பயணம் செய்ய ஏற்றதல்லாததான காலம்.


    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  10. வார சூலம்.* : பாடலும் − விளக்கமும்.

    பாடல் − 1

    வாரத்தில் சூலம் வரும்வழி கூறுங்கால்

    நேர்ஒத்த திங்கள் சனிகிழக்கே ஆகும்

    பார்ஒத்த சேய்புதன் உத்தரம் பானுநாள்

    நேர்ஒத்த வெள்ளி குடக்காக நிற்குமே.

    விளக்கம் :

    வாரத்தில் சூலம் வரும் வழி கூறுங்கால் − வார நாட்களில் சூலம் எதிர்கொள்கின்ற திசைகளைச் சொல்ல வேண்டும் என்றால்...

    நேர்ஒத்த திங்கள் சனிகிழக்கே ஆகும் − சரியான சூல நாள், திங்கட்கிழமையும் சனிக்கிழமையும் *கிழக்கே* சூலம்.

    பார்ஒத்த சேய் புதன் உத்தரம் பானு நாள் − பூமித்தாயின் புத்திரனா கிய செவ்வாய், புதன் கிழமைகளில் *வடக்கே* சூலம்.

    பானுநாள் − *ஞாயிற்றுக் கிழமை அன்றும்,...*

    நேர்ஒத்த வெள்ளி குடக்கே நிற்குமே − நேரான *வெள்ளி* அன்றும் *மேற்கே* சூலம் ஆகும்.

    பொருள் .....!

    நேர் ஒத்த − நேரான
    பார்ஒத்து − பூமித் தாயைப் போன்ற அவளின் பிள்ளை செவ்வாய்க் கிழமை.

    உத்தரம் − வடக்கு.

    பானு − சூரியன், ஞாயிற்றுக்கிழமை.

    குடக்கு − மேற்கு.

    இப்பாடல்.... சூலம் எதிர்உள்ள திசையும், நாளும் கூறும் பாடல் ஆகும்.

    சிவா... தங்களின் ஆர்வம் எனக்கு மேலும் உற்சாகத்தை ஏற்படுத்த வழிகோலியாக இருக்கிறது... !


    2- வது பாடல் :


    தெக்கணம் ஆகும் வியாழத்துச் சேர்திசை

    அக்கணி சூலமும் ஆம்இடம் பின்ஆகில்

    துக்கமும் இல்லை வலம்முன்னே தோன்றிடின்

    மிக்கது மேல்வினை மேல்மேல் விளையுமே.

    தெக்கணம் − தென்திசை. *வியாழக் கிழமை தெற்கே* சூலம் ஆகும்.

    அக்கு − எலும்பு
    அணி − சூடிய

    அக்கணி சூலமும் ஆம் இடம் பின்ஆகில் − எலும்பு மாலை அணிந்த சூலம். இடப் பக்க மாகவோ, பின்பக்க மாகவோ இருக்கப் பயணம் மேற்கொண்டால், ஒரு துன்பமும் (துக்கமும்) இல்லை.

    இப்படியில்லாமல் சூலம் வலம் முன்னே தோன்றிடின் − வலப்பக்கமாகவோ முன்புறமாகவோ இருக்கப் பயணம் செய்தால் , மேலும், மேலும் துன்பமே உண்டாகும்.

    *திங்கள், சனி .... கிழக்கே சூலம்.*

    *ஞாயிறு, வெள்ளி .... மேற்கே சூலம்.*

    *செவ்வாய், புதன்.... வடக்கே சூலம்.*

    *வியாழன்.... தெற்கே சூலம்.*

    *இந்த நாட்களில், இந்தத் திசையில் பயணம் செய்தல் கூடாது...* என்பது கூறப்பட்டது.

    இப்பாடல்.. மூன்றாம் தந்திரத்தில் "வார சூலம்" என்ற தலைப்பில் அமைந்துள்ளன.
    *(797 − 798 )*

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  11. Thu. 23, Mar. 2023 at, 1.04 pm.

    சைவ சித்தாந்தம் தொடர்ச்சி....!

    441) அசுத்த மாயா தத்துவங்களின் வேறு பெயர்கள்....
    *வித்தியா தத்துவம், சுத்தா சுத்த தத்துவம்.*

    442) சுத்தா சுத்த தத்துவம் தோன்றுவது..*அசுத்த மாயையிலிருந்து.*

    443) அசுத்த மாயையை தொழிற்படுத்து பவர்....
    *அனந்த தேவர்.*

    444) வித்தியா தத்துவம் எனப் பெயர் வரக் காரணம்....
    *அனந்த தேவரான வித்தேசுவரரால் தோற்றுவிக்கப்பட்டதால்.*

    445) இறப்பு, நிகழ்வு, எதிர்வு என்ற கால வேறுபாட்டு உணர்வைத் தரும் தத்துவம்.....
    *கால தத்துவம்.*

    446) அவரவர் வினைப் பயனை அவரவரே நுகருமாறு நியமிக்கும் தத்துவம்....
    *நியதி தத்துவம்.*

    447) ஆன்மாவின் கிரியா சத்தியைச் சிறிதளவு விளங்க வைக்கும் தத்துவம்....
    *கலைத்தத்துவம்.*

    448) ஆன்மாவின் ஞான சத்தியைச் சிறிதளவு விளங்க வைக்கும் தத்துவம்....
    *வித்தைத் தத்துவம்.*

    449) ஆன்மாவின் இச்சா சத்தியைச் சிறிதளவு விளங்க வைக்கும் தத்துவம்....
    *அராக தத்துவம்.*

    450) காலம் முதலிய ஐந்தும் தோன்றக் காரணமான தத்துவம்...
    *வித்தியா தத்துவத்துள் ஒன்றான மாயை.*

    மீண்டும் அடுத்த பதிவில்....!

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  12. Fri. 24, Mar. 2023 at 8.57 am.

    சைவ சித்தாந்தம் தொடர்ச்சி....!

    451) சுத்த வித்தைக்கும், வித்தை தத்துவத்துக்கும் உள்ள வேறுபாடு....
    *சுத்தவித்தை சிவ தத்துவங்களில் ஒன்று. வித்தை தத்துவம்.... வித்தியா தத்துவங்களில் ஒன்று.*

    452) பிரகிருதி மாயை என்பது....
    *அசுத்த மாயையின் தூலப் பரிணாமம்.*

    453) சகல.... வர்க்க உயிர்களுக்குத் தனு, கரண, புவன போகங்களைத் தருகிற மாயை....
    *பிரகிருதி மாயை.*

    454) பிரகிருதி மாயையின் வேறு பெயர்கள்.....
    *மான், மூலப்பகுதி, அவ்வியத்தம். மூலப்பகுதி என்பது மூலப்பிரகிருதி.*

    455) பிரகிருதி மாயை தோன்றுவது....
    *வித்யா தத்துவங்களில் ஒன்றான கலைத் தத்துவத்திலிருந்து.*

    456) அவ்வியத்தம்(மூலப் பிரகிருதி) என்பது....
    *முக்குணங்களும் வெளிப்படாமல்... சூக்குமமாய் அடங்கியிருக்கும் நிலை.*

    457) பிரகிருதி மாயா தத்துவத்தின் வேறு பெயர்....
    *ஆன்ம தத்துவம்.*

    458) ஆன்ம தத்துவங்களை இயக்குபவர்....
    *ஶ்ரீகண்டருத்திரர்.*

    459) ஆன்ம தத்துவம் என பெயர் வரக் காரணம்....
    *சகல வர்க்க ஆன்மாக்களின் தலைவரான ஶ்ரீகண்ட ருத்திரரால் தொழிற்படுத்தப்படுதமையால்.*

    460) ஆச்சாரிய பஞ்சாக்கரத்தின் வேறுபெயர்....
    *பக்தபஞ்சாக்கரம்.*

    மீண்டும் அடுத்த பதிவில்...!

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  13. Fri. 24, Mar. 2023 at 3.46 pm.

    வேதியியல் துளிகள் −49.

    * மின்காந்தம் தயாரிப்பில் அதிக அளவு பயன்படுவது...
    *தேனிரும்பு.*

    * ஒர் அணுவின் உட்கருவில் இருப்பவை..*நியூட்ரான்கள் மற்றும் புரோட்டான்கள்.*

    * கனரக இயந்திரங்களில், உயவுப் பொருளாகப் பயன்படுவது....
    *கார்பன் மற்றும் கிராபைட் .*

    * பச்சை உப்பு என அழைக்கப்படுவது...*ஃபெரஸ் சல்பேட்.*

    * வானிலை ஆய்வு பலூன்களில் பயன்படும் வாயு...
    *ஹீலியம்.*

    * அடர்ப்பிக்கப்பட்ட யுரேனியம்....
    *மஞ்சள் கேக்.*

    * பென்சிலின் மருந்தின் சிறப்புப் பெயர்... *மருந்துகளின் அரசி.*

    * சோடியம் கண்டு பிடித்தவர்....
    *சர் ஹம்பிரி டேவி.*

    * கமபியாக இழுக்கவும், தகடாக அடிக்கவும் இயலாத உலோகங்கள்...
    *பாதரசம் மற்றும் பிஸ்மத்.*

    * நிக்ரோம் கம்பியில் சூடாவதற்கான தனிமம்...
    *அதிக மின்தடை.*

    மீண்டும் அடுத்த பதிவில்....

    Jansikannan60@gmail.com

    ReplyDelete