Tuesday, 4 April 2023

சாலையில் கிடைக்கும் பணத்தை எடுப்பது நல்லதா?... ஜோதிடம் கூறுவது என்ன?

சாலையில் பணம் கிடப்பதை பார்ப்பது, மிகவும் சுபமாக பார்க்கப்படுகிறது. நீங்கள் எங்காவது செல்லும் போது சாலையில் ஒரு நாணயம் கிடப்பதைக் கண்டால், உங்கள் முன்னோர்களின் ஆசிர்வாதம் கிடைப்பதாக அர்த்தம் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. இந்நிலையில், நீங்கள் எடுக்கும் அனைத்து விஷயமும் வெற்றி பெரும். சீன ஜோதிடத்தின்படி, பணம் நல்ல அதிர்ஷ்டத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது.
வேலையில் வெற்றி : வாஸ்து சாஸ்திரத்தின்படி, ஏதாவது ஒரு முக்கியமான வேலைக்காக வெளியில் செல்லும் போது நடுரோட்டில் நாணயம் அல்லது பண நோட்டு கிடப்பதைக் கண்டால், நீங்கள் செய்யும் வேலையில் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்பதற்கான அறிகுறியாகும்.
நிதி நன்மை : வேலை முடிந்து வீடு திரும்பும் போது நடுரோட்டில் பணம் கிடக்கிறது. அதை நீங்கள் கண்டுபிடித்தால், நீங்கள் விரைவில் நிதி நன்மைகளைப் பெறப் போகிறீர்கள் என்பதற்கான அறிகுறியாகும்.
சாலையில் பணம் கிடப்பதைக் கண்டால், அதை கோயிலுக்கு நன்கொடையாகக் கொடுங்கள் அல்லது உங்கள் பணப்பையில் அல்லது உங்கள் வீட்டில் எங்காவது வைத்திருக்கலாம், ஆனால் வாஸ்து படி அதை செலவிடக்கூடாது.
வழியில் நாணயங்கள் விழுவதை நீங்கள் கண்டால், விரைவில் நீங்கள் ஒரு புதிய வேலையைத் தொடங்கலாம் என்பதற்கான அறிகுறியாகும். மேலும், இந்த வேலை உங்களுக்கு வெற்றியையும் நிதி ஆதாயத்தையும் தரும்.

No comments:

Post a Comment