Saturday, 25 November 2023

சாணக்கிய நீதி...

நம் வாழ்வில் சில விஷயங்களை கடைப்பிடித்தால் மட்டுமே வேலையில் நாம் வெற்றி பெற முடியும் என்கிறார் சாணக்கியர். ஆச்சார்யா சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் ஒரு தனிமனிதனின் வாழ்க்கை தொடர்பான பல விஷயங்களைக் கூறியுள்ளார். இதை கடைபிடிப்பதன் மூலம் ஒருவர் வாழ்க்கையில் பல பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம். சாணக்கிய நீதி என்ன வேலை எப்போது செய்ய வேண்டும் அல்லது எத்தனை பேருடன் என்ன வேலை செய்ய வேண்டும் என்று என்பது பற்றி குறிப்பிட்டுள்ளார். இவற்றை நம் வாழ்வில் கடைப்பிடித்தால் வேலையில் எளிதில் வெற்றி பெற முடியும். நான்கு பேருடன் பயணம் சாணக்கியரின் கூற்றுப்படி, ஒரு நபர் எப்போதும் 4 பேருடன் பயணம் செய்ய வேண்டும். நீங்கள் தனியாக பயணம் செய்தால், நீங்கள் அதிக ஆபத்துக்களை எடுக்க வேண்டியிருக்கும். சொல்லப்போனால் எந்த ஒரு பிரச்சனையையும் இரண்டு பேரால் சரியாக சமாளிக்க முடியாது. எனவே பயணத்தில் குறைந்தது 4 பேர் இருந்தால், அவர்கள் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்பார்கள் என்று சாணக்கியர் கூறுகிறார். இரண்டு பேராக மட்டுமே படிக்க வேண்டும் சாணக்கியரின் கூற்றுப்படி, ஒருவர் 2 பேருடன் ஒன்றாக அமர்ந்து படிக்க வேண்டும். ஏனெனில், ஒரே இடத்தில் பலர் அமர்ந்து படிப்பதால், கவனம் சிதறும். இந்த சூழ்நிலையில் உங்களால் சரியாக படிக்க முடியாது. அதே சமயம், இருவர் மட்டும் சேர்ந்து படிக்கும் போது, ஏதேனும் ஒரு பாடத்தில் பிரச்னைகள் ஏற்பட்டால், ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளலாம். ஒருவர் மட்டுமே தவம் செய்ய வேண்டும் ஆச்சார்யா சாணக்கியரின் கூற்றுப்படி, தவம் எப்போதும் தனியாக மட்டுமே செய்யப்பட வேண்டும். ஏனெனில், நீங்கள் மற்றவர்களுடன் சேர்ந்து செய்தால், உங்கள் கவனம் சிதறலாம். எனவே எப்பொழுதும் தனியாகவே தவம் செய்ய வேண்டும். அதன்மூலம் தவத்தை சரியாக முடியும், அப்போதுதான் உங்கள் இலக்கை அடைய முடியும். குறைந்தது 3 நபர்களுடன் பொழுதுபோக்க செல்ல வேண்டும் நீங்கள் ஒரு பொழுதுபோக்கு நிகழ்வுக்குச் செல்கிறீர்கள் என்றால், நீங்கள் குறைந்தது 3 பேருடன் செல்ல வேண்டும். ஆச்சார்ய சாணக்கியரின் கூற்றுப்படி, பொழுதுபோக்கிற்கு 3 பேருக்கு மேல் இருக்க வேண்டும் என்கிறார். 3 பேருக்கும் குறைவான நபர்களுடன் பொழுதுபோக்கிற்கு வெளியே சென்றால், அதில் முழு இன்பம் கிடைக்காது என்று சாணக்கியர் கூறுகிறார். போருக்கு செல்லும் போது கூட்டமாக செல்ல வேண்டும் ஆச்சார்ய சாணக்கியரின் கூற்றுப்படி, ஒருவர் ஒருபோதும் அதீத தன்னம்பிக்கையில் தனியாகப் போருக்குச் செல்லக்கூடாது. ஏனெனில், போரில், உங்கள் பக்கம் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது முக்கியம். உங்களுடன் அதிக மக்கள் துணையாக இருக்கும் போது உங்கள் வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். எனவே போருக்குச் செல்லும்போது, உங்களுடன் அதிக உதவியாளர்களை மற்றும் நண்பர்களை அழைத்துச் செல்ல வேண்டும்.

No comments:

Post a Comment