Saturday, 25 November 2023

கார்த்திகை தீபம் எதனால் கொண்டாடப்படுகிறது என்று தெரியுமா?

தமிழ்நாட்டில் மட்டுமின்றி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் கொண்டாடப்படுகிறது. சொல்லப்போனால் தீபாவளியை விட கார்த்திகை தீப பண்டிகையின் போது வீடுகளானது பல மடங்கு விளங்குகளால் அழகாக அலங்கரிக்கப்படுகிறது.  சரி, இத்தனை ஆண்டுகளாக கார்த்திகை தீப பண்டிகையை கொண்டாடி வருகிறீர்களே, இந்த பண்டிகை எதனால் கொண்டாடப்படுகிறது, அதற்கு பின்னிருக்கும் உண்மையான கதை என்னவென்று உங்களுக்கு தெயுமா? கார்த்திகை மாதமானது முருகப்பெருமான் பிறந்த மாதம் என்பதால், இந்த மாதம் இன்னமும் சிறப்பு வாய்ந்த மாதமாக கருதப்படுகிறது. இப்போது கார்த்திகை தீப பண்டிகையின் பின்னணி கதையைக் காண்போம். விஷ்ணு, பிரம்மா சண்டை ஒருமுறை விஷ்ணு, பிரம்மா இருவரும் யார் உயர்ந்தவர் என்ற ஒரு விவாதத்தில் ஈடுபட்டு, சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். இப்படி பிரம்மாவும், விஷ்ணுவும் பயங்கரமாக சண்டை போடுவதால், மற்ற தேவர்கள் கவலையடைந்து சிவபெருமானிடம் சென்று, நடந்ததைக் கூறி, இந்த சண்டையை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டனர். தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க சிவபெருமான் பிரம்மா மற்றும் விஷ்ணுவின் முன் தோன்றி, ஒரு பெரிய நெருப்புத்தூண் (ஜோதிர்லிங்கம்) வடிவத்தை எடுத்து, இந்த நெருப்புத் தூணின் தொடக்கத்தையும் முடிவையும் கண்டுபிடிக்குமாறு கூறினார். அதில் யார் முதலில் கண்டுபிடிக்கிறாரோ, அவரே உயர்ந்தவராக கருதப்படுவர் என்றும் சிவன் கூறினார். பிரம்மாவும், விஷ்ணுவும் அதை ஒப்புக் கொண்டனர்.  அப்போது விஷ்ணு பன்றியாக மாறி நெருப்புத் தூணின் முடிவைக் கண்டுபிடிக்க பூமியை ஆழமாக தோண்டினார். ஆனால் அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. பின் சிவனிடம் தனது தோல்வியை ஒப்புக் கொண்டார். அதே வேளையில் நெருப்புத் தூணின் தொடக்கத்தைக் கண்டறிய பிரம்மா மேல் நோக்கி அன்ன வடிவில் மேலே பறந்து சென்றார். ஆனால் அவராலும் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் சிவனிடம் வந்து கண்டுபிடித்துவிட்டதாக பொய் கூறினார். சிவபெருமான் பிரம்மா பொய் சொல்வதை அறிந்து, சாபமிட்டார். இதன் மூலம் சிவன் தான் உயர்ந்தவர் என்றும், மற்ற இருவரும் தன்னை விட தாழ்ந்தவர் என்றும் நிரூபித்தார். அப்போது தான் திருவண்ணாமலை பகுதியில் மலை வடிவில் சிவன் காட்சியளித்தார். திருவண்ணாமலை என்பதற்கு புனிதமான நெருப்பு மலை என்று பொருள். இந்த நிகழ்வின் நினைவாகவே திருவண்ணாமலையில் ஒரு சிவன் கோயில் கட்டப்பட்டது. மேலும் கார்த்திகை தீபத்தன்று இந்த திருவண்ணாமலையில் தீபம் ஏற்றப்படுவதாக கூறப்படுகிறது. மற்றொரு கதை கார்த்திகை தீபம் குறித்து கூறப்படும் மற்றொரு கதை தான் இது. இதில் கார்த்திகை தீபம் பண்டிகையானது சிவன் மற்றும் பார்வதி தேவியின் மகனான முருகப்பெருமானுடன் தொடர்புடையதாக கூறுப்படுகிறது. சிவபெருமானின் மூன்றாவது கண்ணில் இருந்து தோன்றிய 6 தீப்பொறிகளில் இருந்து முருகப்பெருமான் பிறந்ததாக புராணங்கள் கூறுகின்றன. இந்த 6 தீப்பொறிகளும் சரவண பொய்கை ஏரியில் 6 கார்த்திகை பெண்களால் பராமரிக்கப்பட்டு 6 குழந்தையாக இருந்தது. கார்த்திகை தீப நாளில் பார்வதி தேவி இந்த 6 குழந்தைகளையும் ஒரு குழந்தையாக இணைத்தார். இதனாலேயே முருகப் பெருமானுக்கு ஆறுமுகன், ஆறுமுகம், கார்த்திகேயன் என்ற வந்தது. 

No comments:

Post a Comment