இன்றைய வாழ்க்கை முறையில் சருமத்தை பாதிக்க கூடிய பலவித செயல்களை செய்து வருகிறோம். மோசமான கெமிக்கல் கொண்ட புராடக்ட்ஸ் முதல் காற்று மாசு வரை நமது தோல் சருமத்தை பாதிக்க கூடிய அளவிற்கு உள்ளன. இது ஒரு புறம் இருக்க நாம் பின்பற்ற கூடிய வாழ்க்கை முறையும் நமது தோலை பாதிக்கிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். குறிப்பாக நாம் தினசரி குளிக்கும் முறை கூட நமது தோலின் ஆரோக்கியத்தை பாதிக்குமாம். அது எப்படி குளியல் கூட நமது தோலை பாதிக்கும் என்று யோசிக்கிறீர்களா? ஆம், இது உண்மை தான்.
நீண்ட நேரமாக குளிக்கும் முறை உங்களது தோலை பாதிக்கும் என்று தோல் நிபுணர்கள் கூறுகின்றனர். பொதுவாக குளியல் என்பது அமைதியான உணர்வைத் தருவதோடு, உடலில் உள்ள மன அழுத்தம் மற்றும் பதட்டத்தின் அளவைக் குறைக்கும் வழியாக உள்ளது. சிலர் அதிகாலையில் குளிப்பதை வழக்கமாக கொண்டிருந்தாலும், மற்றவர்கள் இரவில் நீண்ட நேரம் குளித்து சுத்தம் செய்ய விரும்புகிறார்கள். ஆனால் குளிக்கின்ற கால அளவு கூட உங்களின் தோலை பாதிக்கும். அதே போன்று நமது தோலை பாதிக்க கூடிய குளியல் நேர முறைகளை பற்றி இனி தெரிந்து கொள்வோம்.
ஷவர் ஜெல்
குளிக்கும்போது ஷவர் ஜெல் அல்லது கூடுதல் நுரைக்கும் ஜெல்லை பயன்படுத்துவதால், அது சருமத்தை சேதப்படுத்துமாம். மேலும் குளிக்கும்போது ஷேவிங் செய்யக்கூடாதாம். இதற்கு காரணம் குளிக்க கூடிய நேரத்தில் நமது சருமம் ஷேவிங்கிற்கு தயாராகி வருவதற்கு நேரம் எடுத்து கொள்ளுமாம். சுமார் 5 முதல் 7 நிமிடங்கள் நனைந்த பிறகு தோல் மிருதுவாகி, ஷேவிங்கிற்குத் தயாராகும். குளிக்கும் போது அவசரமாக ரேசரை தோலில் பயன்படுத்தினால், அது ஆழமான வெட்டுக்களை ஏற்படுத்தும்.
குளிக்கும் போது மேக்கப்பை கழுவ கூடாதாம். குளிக்கும்போது தண்ணீரை ஊற்றி மேக்கப்பை அகற்ற முயற்சித்தால், மேக்கப் முழுமையாக அகற்றப்படாது. எனவே, குளிப்பதற்கு முன் மேக்கப் ரிமூவர் அல்லது எண்ணெயைக் கொண்டு மேக்கப்பை நன்றாக அகற்றுவது நல்லது. அதன் பிறகு குளியலை எடுத்து கொள்ளலாம்.
வெந்நீரில் குளிப்பதை தவிர்க்க வேண்டும் என்று தோல் நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். ஆனால், பலருக்கும் வெந்நீரில் குளிப்பது என்பது சோர்வை நீக்க கூடியதாக இருக்கும் என்று கருதுகின்றனர். இது சோர்வை நீக்கினாலும் சருமத்தையும் சேதப்படுத்துகிறது. எனவே மிக சூடான வெந்நீரில் குளிப்பதற்கு பதிலாக வெதுவெதுப்பான நீரில் குளிக்க முயற்சிக்கலாம்
தூங்குவதற்கு முன்னர் குளிக்க கூடிய பழக்கம் சிலருக்கு உண்டு. இது உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இதற்கு காரணம், இரவில் உறங்கச் செல்வதற்கு முன், உங்கள் உடல் வெப்பநிலை குறைந்து விடுமாம். எனவே உறங்குவதற்கும் குளிப்பதற்கும் இடையில் குறைந்தது இரண்டு மணிநேர இடைவெளியை வைத்திருப்பது சிறந்ததாகக் கருதப்படுகிறது
இன்றைய வாழ்க்கை முறையில் பலதும் வொர்க் அவுட் செய்யும் வழக்கத்தை பின்பற்றி வருகின்றனர். இது நல்லது தான் என்றாலும், வொர்க் அவுட் செய்த உடனே குளிப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தை பாதிக்கும் மற்றும் சில நேரங்களில் இது உங்களுக்கு மயக்கத்தை கூட ஏற்படலாம்.
மேற்சொன்ன வழிமுறைகளை பின்பற்றி, உங்கள் சருமத்தை ஆரோக்கியமாகவும் நீரேற்றமாகவும் வைத்திருங்கள்
No comments:
Post a Comment