Thursday, 16 November 2023

உடல் ஆரோக்கியத்திற்கு எப்படி குளிக்க வேண்டும்...




உடலில் ஏற்படும் அதிகமான வெப்பம் பெரும்பாலான நோய்களுக்கு காரணமாகிறது. உடல் ஆரோக்கியம் பெறுவதற்கு எவ்வாறு குளிக்க வேண்டும் என்பதை இங்கே பார்க்கலாம்....
குளிக்க ஆரம்பிக்கும் போது முதலில் தலையில் தண்ணீரை ஊற்றுவது தவறானதாகும். குளத்தில் இறங்கி குளிக்கும் முறையை போல முதலில் சிறிது நீரை உச்சந்தலையில் தெளித்து கொண்டு பின்பு கால்களில் தண்ணீர் ஊற்ற வேண்டும். பிறகு உடலில் தண்ணீரை ஊற்ற இறுதியாக தலையில் நீரை ஊற்ற வேண்டும். அப்போது தான் உடலின் மொத்த வெப்பமும் காதுகள், கண்களில் வழியாக வெளியேறும். எடுத்த எடுப்பிலேயே தலையிலும், தேளிலும் நீரை ஊற்றும்போது மொத்த வெப்பமும் உடலிலேயே தங்க நேரிடுவதால் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. குளிப்பது உடலை குளிர்விப்பதற்கான செயல் முறை. குளிர்ந்த நீரில் குளித்தால் மட்டுமே உடலின் வெப்பத்தை வெளியேற்ற முடியும். குளிப்பதற்கு முன்பாக வாய் முழுவதும் நீரை நிரப்பி அப்படியே வைத்திருந்து குளித்து முடித்தவுடன் துப்பிவிடும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டால் நுரையீரலுக்கு மிகவும் நல்லதாகும்.

வாரத்தில் இரண்டு நாட்கள் எண்ணெய் தேய்த்து குளிக்கலாம். நல்லெண்ய்யை மிதமாக சூடாக்கி அதில் தோல் நீக்கிய சிறிய இஞ்சி துண்டையும்,சிறிது மிளகையும் பொடித்து போட்டு ஆறவைக்க வேண்டும். அந்த எண்ணெய்யை தலையிலும், உடலிலும் தேய்த்து அரை மணி நேரமாவது ஊற வைத்து விட்டு குளிக்க வேண்டும். எண்ணெய் குளியல் மேற்கொள்ளும் போது மட்டும் மிதமான வெந்நீரில் குளிக்க வேண்டும். தினமும் காலையில் எழுந்தவுடன் குளித்து விட்டு மற்ற வேலைகளை பார்ப்பது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும். சாப்பிட்ட பிறகு குளிக்கக்கூடாது. உணவு உண்டதும், உடல் செரிக்கும் வேலையை தொடங்கி விடும். செரிமானத்துக்க்காக உடலின் வெப்பநிலை அதிகரிக்கும். அநத் நேரத்தில் குளித்தால், உடல் குளிர்ச்சியடைந்து செரிமான வேலை தடைப்படும். இதன் காரணமாக அமிலச்சுரப்பு அதிகரித்து நெஞ்செரிச்சல் ஏற்படலாம். குளிப்பது உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்ச்சியை தரக்கூடிய இனிமையான அனுபவமாக இருக்க வேண்டும். அவசர அவசரமாக குளிப்பதால் குளியலின் நன்மைகளை முழுமையாக பெற முடியாமல் போகலாம்.

No comments:

Post a Comment