இது ஜோசியம் எல்லாம் இல்ல! இந்த கலர்ல கார் வாங்குனா தான் நல்ல மைலேஜ் கிடைக்கும்! ஏன் தெரியுமா?
கார் வாங்க போகிறீர்களா ? நீங்கள் காருக்கான கலரை தேர்வு செய்யும் முன் காரின் நிறத்திற்கும் காரின் மைலேஜிற்க்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அதைப்பற்றி நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும் அதன் பின்பு தான் நீங்கள் எந்த நிற காரை வாங்க வேண்டும் என்ற முடிவை எடுக்க வேண்டும். இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
ஒரு குடும்பத்தில் முதன் முறையாக கார் வாங்க வேண்டும் என்றால் அவர்கள் தங்கள் வாழ்நாளில் சேர்த்து வைத்த மிகப் பெரிய பணத்தை அதில் முதலீடு செய்து தங்கள் மிகப்பெரிய கனவான காரை வாங்கும் முடிவை எடுப்பார்கள். கார் வாங்க வேண்டும் என்ற முடிவை எடுத்தவுடன் அவர்களின் பட்ஜெட்டிற்கு ஏற்ப மார்க்கெட்டில் என்ன கார் இருக்கிறது. அவர்களின் தேவை என்ன? என்பதை புரிந்து எந்த கார் வேண்டும் என முடிவு செய்வார்கள்.
ஆனால் பெரும் குழப்பம் என்று வரும்போது கார் நிறத்தை தேர்வு செய்வதில் தான் வரும். கார் நிறத்தை தேர்வு செய்யும்போது வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரும் நண்பர்களும் ஒவ்வொரு விதமான காரணத்தை சொல்லுவார்கள். இதில் கார் வாங்கும் நபருக்கு எந்த நேரத்தில் காரை வாங்க வேண்டும் என்ற குழப்பமே ஏற்படும். பலர் இப்படியான குழப்பத்தில் இறுதியாக ஜோதிடரிடம் சென்று கூட எந்த கலர் காரை வாங்கலாம் என்ற முடிவை எடுப்பார்கள்.
ஆனால் நீங்கள் வாங்கும் காரின் கலருக்கும் காரின் மைலேஜிற்க்கும் மிகப்பெரிய தொடர்பு இருக்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆம் அறிவியல் ரீதியாகவே இப்படியான தொடர்பு இருக்கிறது. இப்படியாக எந்த கலர் கார் அதிக மைலேஜ் தரும் எந்த கலர் கார் கம்மியான மைலேஜ் தரும் என காணலாம் வாருங்கள்.
கருப்பு நிற கார்: மற்ற எல்லா கலரை காட்டிலும் கருப்பு நிற கார் தான் குறைவான மைலேஜ் தரும் காராக இருக்கிறது. இந்த கார் சாலையில் செல்லும்போது நல்ல லுக்கில் இருந்தாலும், மற்ற நிறங்களை ஒப்பிடும்போது இந்த நிற காரில் மைலேஜ் குறைவாக இருக்கும். இதற்கு காரணம் கருப்பு நிறம் வெளியில் உள்ள வெப்பத்தை காருக்குள் ஈர்க்கும் திறன் கொண்டது.
இதனால் காருக்குள் அதிகமாக வெப்பமாகும் இந்த வெப்பத்தை போக்க நாம் அதிகம் ஏசியை பயன்படுத்த வேண்டியது இருக்கும். ஏசி பயன்பாட்டு காரணமாக மைலேஜ் குறையும். அதே நேரம் காரின் இன்ஜின் இருக்கும் பகுதியும் அதிகம் சூடாவதால் அதன் மைலேஜ் அதிகமாக பாதிக்கப்படும்.
வெள்ளை நிற கார்: இந்தியாவில் அதிகம் விற்பனையாவது வெள்ளை நிற காரர்கள் தான். வெள்ளை நிற கார்கள் வெப்பத்தை புறம்தள்ளும் திறன் கொண்டது. இதனால் காரின் உள்ளே வெப்பம் அவ்வளவு சுலபமாக வராது. இதனால் ஏசி பயன்பாடு குறைவாக இருக்கும். இதனால் மற்ற நிற கார்களை விட வெள்ளை நிறக்காரர்கள் தான் அதிகமான மைலேஜ் தரும் திறன் கொண்ட கார்களாக இருக்கிறது.
ADVERTISEMENT
நீல நிற கார்: நீல நிற கார்கள் மார்க்கெட்டில் விற்பனையாவது பெரும்பாலும் மெட்டாலிக் நிற கார்களாக இருக்கின்றன. இந்த மெட்டாலிக் நிறை பெயிண்ட் எல்லாமே வெப்பத்தை தன்வசம் ஈர்க்கும் திறன் கொண்டதுதான். இதனால் இந்த கார்களிலும் மைலேஜ் பாதிக்கப்படும். கருப்பு நிற கார்கள் அளவுக்கு மைலேஜ் பாதிக்கப்படாவிட்டாலும், இதில் ஓரளவுக்கு மைலேஜ் பாதிப்பு இருக்கத்தான் செய்கிறது. ஆனால் இந்த மெட்டாலிக் நீல கலர் காருக்கு நல்ல லுக்கை கொடுக்கும்.
car color and mileage
சில்வர் நிறக்கார்: சில்வர் நிறம் என்பது ஒரு சிறந்த கார் கலர் தேர்வாக இருக்கிறது. இந்த காரில் அழுக்கு பட்டாலும் வெள்ளை நிற கார் போல அவ்வளவு ஈசியாக வெளியே தெரியாது. அதே நேரம் இந்த கார் வெள்ளை நிற காருக்கு நிகரான மைலேஜ் வழங்கும் திறன் கொண்டதாக இருக்கிறத
இந்த கார் அதிகமாக வெப்பத்தை உள்ளே இருக்காது. இதனால் ஏசி பயன்பாடு குறைவாக இருக்கும். இஞ்சின் பகுதியும் சுலபமாக கூல் ஆகும் என்பதால் இந்த கார் நிச்சயம் ஒரு நல்ல சாய்ஸாக இருக்கும். இந்த நிறம் பார்க்கவும் நல்ல லுக்கை தரும் பாராமரிப்பும் குறைவாக இருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கார் வாங்கும் பலருக்கு இப்படி காரின் நிறம் காரின் மைலேஜ் பாதிக்கும் என்ற விவரம் தெரியாமல் இருக்கும் மைலேஜ் வித்தியாசத்தை பார்த்தால் ஏதோ சிறிய அளவு மைலேஜ் வித்தியாசம் தான் உங்கள் கண்ணுக்கு தெரியும். இதனால் என்ன நஷ்டம் வரப்போகிறது என நீங்கள் நினைக்கலாம்.
ஆனால் இதை நீண்ட நாட்கள் பயன்படுத்தும் போது பெரிய அளவிலான பணத்தை நீங்கள் காரின் கலரால் ஏற்படும் மைலேஜ் பாதிப்பிற்காக செலவு செய்ய வேண்டியது இருக்கும். இதனால் காரின் நிறத்தை தேர்வு செய்யும் போது கவனமாக இருங்கள். வெள்ளை மற்றும் சில்வர் நிற கார்கள் சிறப்பான மைலேஜ் தரும் கார்களாக உள்ளன.
No comments:
Post a Comment