Friday, 3 November 2023

Maruthani Plant: மருதாணி செடி

Maruthani Plant: உங்கள் வீட்டில் பலவிதமான செடிகளை வளர்க்கிறீர்களா? குறிப்பாக உங்கள் வீட்டில் மருதாணி செடி உள்ளதா? நிறைய பேருக்கு வீட்டில் மருதாணி செடியை வளர்க்கலாமா என்ற கேள்வி மனதில் இருக்கும். ADVERTISEMENT மருதாணி செடியானது லட்சுமி தேவியின் அம்சத்தைக் குறிக்கிறது. இது தவிர மருதாணி செடியின் ஒவ்வொரு பகுதியும் பலவித நன்மைகளை வழங்குகின்றன. வீட்டில் மருதாணி செடி இருந்தால், அது அந்த வீட்டில் கெட்ட சக்தி நுழைவதைத் தடுக்கும். ADVERTISEMENT இதற்கு காரணம் மருதாணியின் வாசனை தான். இந்த வாசனைக்கு எந்த கெட்ட சக்தியும் மட்டுமின்றி, பூச்சிகளும் வராது. உங்கள் வீட்டில் மருதாணி செடி இருந்தால், அதன் ஒவ்வொரு பகுதியையும் எப்படி பயன்படுத்தலாம் மற்றும் மருதாணி செடியை வைத்திருந்தால் செய்யக்கூடாத தவறுகள் குறித்து இப்போது காண்போம். Next Orhan Awatramani Big Statement,App log Mera Majak... வீட்டில் உள்ள கெட்ட சக்திகள் நீங்க.. வீட்டில் உள்ள கெட்ட சக்திகளை நீக்க விரும்பினால், மருதாணி செடியின் விதைகளை எடுத்து வெயிலில் நன்கு காய வைத்து, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வீட்டில் சாம்பிராணி போடும் போது, அதில் சிறிது இந்த விதைகளை சேர்த்து தூபம் போட்டால், அதன் வாசனைக்கு கெட்ட சக்திகள் நீங்குவதோடு, வீட்டில் பூச்சிகள் வராமலும் இருக்கும். நிம்மதியான தூக்கத்தைப் பெற... மருதாணி செடியின் பூக்கள் நல்ல மணத்தைக் கொண்டது. நீங்கள் இரவு நேரத்தில் தூக்கம் வராமல் அவதிப்படுவீர்களா? அப்படியானால் மருதாணி செடியில் உள்ள பூக்களை பறித்து, அதை ஒரு துணியில் போட்டு கட்டி, அதை தலையணைக்கு அடியில் வைத்து தூங்கினால், அதிலிருந்து வரும் மணம் மனதை ரிலாக்ஸ் அடையச் செய்து, நல்ல தூக்கத்தைப் பெற உதவும். ADVERTISEMENT வாஸ்து தோஷம் நீங்க.. உங்கள் வீட்டில் வாஸ்து தோஷம் இருந்தால், அந்த தோஷத்தைப் போக்கும் சக்தி மருதாணி செடிக்கு உள்ளது என்பது தெரியுமா? அதுவும் நீங்கள் வாடகை வீட்டில் இருந்து, அந்த வீட்டில் உள்ள வாஸ்து தோஷத்தை எளிதில் நீக்க நினைத்தால், ஒரு சிறிய தொட்டியில் மருதாணி செடியை வைத்து வளர்த்து வந்தால் வாஸ்து தோஷம் நீங்குவதோடு, வீடும் செல்வ செழிப்போடு இருக்கும். செய்யக்கூடாத தவறுகள் மருதாணி செடியை வீட்டில் வைத்திருப்பவர்கள், யாருக்காவது மருதாணி இலைகளைப் பறித்து கொடுப்பதாக இருந்தால், அதை இலவசமாக கொடுக்காதீர்கள். ஒரு ரூபாயாவது வாங்கிக் கொண்டு கொடுங்கள். மருதாணி செடியானது லட்சுமி தேவியாக கருதப்படுவதால், யாருக்கும் இலவசமாக கொடுக்காதீர்கள். அதேப் போல் மருதாணி செடியின் இலைகளை மாலை வேளையில் விளக்கு வைத்த பின் தானமாக கொடுக்க வேண்டாம். ஏன் காசு கொடுத்தால் கூட மருதாணி இலைகளை கொடுத்துவிடாதீர்கள். அப்படி கொடுத்தால், அது வீட்டில் உள்ள லட்சுமி தேவியை வீட்டில் இருந்து வெளியேற்றுவதற்கு சமம். எனவே இந்த தவறை செய்யாதீர்கள்.

No comments:

Post a Comment