Friday 1 December 2023

ரேகை...

நம் கையில் என்னற்ற ரேகையில் இருந்தாலும் மிக முக்கியமான ரேகைளை மட்டும் படத்தில் காட்டப்பட்டுள்ளது. விதி ரேகை நம் கையில் உள்ள செல்வத்தையும், நாம் வாழ்க்கையில் பெறும் வெற்றியையும். இருதய ரேகை‍‍ = நமது மன நிம்மதியையும், மற்றும் ஞானத்தையும். புத்தி ரேகை = நம் வாழ்க் கையில் கிடைக்க இருக்கும் வெகுமதி, புத்தியால் கிடைக்கும் வெற்றியையும், அறிவாற்றலையும். ஆயுள் ரேகை = நம் ஆயுளை யும், நம் உடல் ஆரோக்கியத்தையும். செவ்வாய் ரேகை = ஆயுள் ரேகைக்கு துனையாக செயல்படும்.மற்றும் தெய்வபக்தியும், வீடு நிலம், குறிக்கும். காதல் ரேகை = நம் காதல் வாழ்க்கையும். தோல்வி அடையபோகும் சமயம் சரியாக அதன் மீது குறுக்கீட்டு ரேகை வளரும். ஞான ரேகை அல்லது குரு ரேகை = ஒருவர் ஆன்மிக எண் ணத்தையும், எதையும் பகுத்து ஆராயதலையும், ஆபத்து வருவதை முன் கூட்டியே உணரும் ஆற்றல் உடையவராகவும் இருப்பார். படத்தில் காட்டப்பட்ட சூரிய ரேகை நம் கையில் இருப்பது= மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை அமைவதை குறிக்கும். மேலும் 35 வயதிற்கு மேல் ஒரு ஸ்திரமான வாழ்க்கை அமையும். படத்தில் உள்ள ரேகைகளில் ஏதேனும் குறூக்கீட்டு ரேகைகள், அல்லது தீவுக்குறிகள் இருந்தால் அந்த ரேகை பாதிப்பு அடைந்துள்ளது என்று அர்த்தம். அதன் பாதிப்பு எப்போது நடைமுறைக்கு வரும் என்றால் எந்த இடத்தில் பாதிப்பு தெரி கிறதோ அந்த ரேகையின் இடம் குறிக்கும் வயதில் அப் பாதிப்பானது தெரியும்.

8 comments:

  1. அய்யா.. வெ.சாமி அவர்களுக்கு நமஸ்காரம். நல்லதுங்கய்யா தங்கள் பதிவு. ஆனால் , இதற்கான விளக்கப் படம் இல்லையே.. பதிவில்.

    ReplyDelete
  2. இன்னும் அதிகமாக தாங்கள் விளக்கி இருக்கலாமோ என அடியேன் மனதில் நினைக்கத் தோன்றுகிறது அய்யா.

    * தீவுக்குறி என்பது... கெடுதலான பலனைத் தரவல்லது.

    * இக்குறியானது ரேகைகளில் இருந்தாலும், கிரகமேடுகளில் இருந்தாலும் அதனதன் சுய பலன்களைக் கெடுத்துவிடும்.

    * ஆயுள் ரேகையில், தீவுக்குறி காணப்பட்டால், ஆரோக்கியத்தை முழுமையாக பாழ்படுத்திவிடும்.

    * புத்தி ரேகையில் இக்குறி காணப்படின் மூளைக்கோளாறு ஏற்படும்.

    * இருதய ரேகையில் சூரிய மேட் டின் கீழே காணப்பட்டால், பலவீன இருதயம் உள்ளவராக இருப்பர்.

    * விதி ரேகையில் இக் குறி காணப்பட்டால் வாழ்க்கைப் பாதையில் பலவித இடையூறுகள் ஏற்பட்டு நிலை தடுமாற வைக்கும். மட்டுமின்றி பண நஷ்டத்தையும் ஏற்படுத்தி விடும்.

    * சூரிய ரேகையில், தீவுக்குறி காணப்பட்டால், மறைமுக விரோதிகள் பலர் இருப்பர். பலவந்தமாக பதவி நீக்கம் பெற நேரிடும்.

    * கிரக மேடுகளில் அந்த மேட்டில் தீவுக் குறி காணப்பட்டாலும், அந்த மேடு உச்சம் பெற்றிருந்தா லும், அதனால் நடை பெற வேண் டிய நல்ல பலன்களைத் தடைப் படுத்திவிடும்.

    ReplyDelete
  3. Sat. 9, Dec. 2023 at 2.35 pm.


    உபரேகைகளும் + குறியீடுகளும் :


    -----////----- = கிளை ரேகைகள் (மேல் நோக்கியவை).


    --------\\\\\----- = கிளை ரேகைகள் (கீழ் நோக்கியவை).


    ~~~^^~~~ = அலை ரேகைகள்.


    //
    ====
    ==== = இணை ரேகைகள் . அடிக்கோடு மேல்நோக்கி ) இந்த சிம்பல் மேல்நோக்கி இருப்பது போல்.

    --------<
    >-------<
    ---------<<< = இடுக்கி ரேகைகள்.

    ___-<>---<>- = தீவு ரேகை .

    ~<><><><>~ = சங்கிலி ரேகை .


    − − − −
    ---------
    ______ = கொஞ்சம் அடிக்கோடுகள் இரண்டும் நெருங்கிய வண்ணம் இருக்கும்.


    /
    () = தீவுக் குறி.
    |


    /
    © © 0 = புள்ளிகள்
    / /


    • * * = நட்சத்திரம்.


    ##### = வளை ரேகை.


    X X X X X = பெருக்கல் குறி.


    <\ /X = முக்கோண ரேகை.


    ||ப|| = சதுர ரேகை.


    ₹))(/@))))/// = கிரக ரேகை ..


    ௦ ௦
    ௦௦ ௦ = வளையம்.

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  4. Thu. 4, Jan. 2023 at 5.39 pm.

    ஒரு சோதிடன் மறக்க கூடாதவை : திசா, புத்தி,அந்தரம்.

    *சோதிடம் என தமிழ் முனிவர்கள் பெயர் வைத்த காரணங்கள் − 7*

    1. சோதிடம் = சோதி + இடம்.
    சோதியான இறைவன் இருப்பதை நிருபிக்கும் விஞ்ஞானம். சோதியான சூரிய ஒளி லக்னத்திற்கு 12−இட அதிபதிகளின் நிலைமைகளால் ஏற்படும்.

    2. திசை : சாதகனுக்கு நல்ல வழி திசையையே சோதிடன் காட்டணும்.

    3. புத்தி : சாதகனுக்கு நல்ல புத்திகளையே சோதிடன் கூறணும்.

    4. அந்தரம் : சாதகன் நடந்த அந்தரங்களை கூறணும். சோதிடனும் நடந்தவைகளை,அந்தரங்கமாக வைத்து, நடக்க போகின்றதையும் ரகசியமாக கூறணும்.

    5. கோள்கள் : கோள் சொல்லும். கோளாறு ஆகும். கோளறு பதிகம் சம்பந்தர் போல பாடி கோளறுக்கணும், பயம் கூடாது. பக்தி கூடணும்.

    6. நிமித்திகள் : வரும் நிமித்தங்களைக் கூறும் சோதிடன்.

    7. யோகம் : இருவர் ஒத்துச் சேராவிட்டால் யோகமில்லை, போகமும் இல்லை. சோகமும், சோரமும் ரோகமும் உண்டாகும்.
    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  5. *மாதங்களுள் "தாம்" மார்கழி :*

    * மார்கழி மாதத்தில் ஒரு மகிமை உண்டு.

    * சூரியோதயத்திற்குச் சற்று முன்புள்ள நேரம் "பிரம்ம முகூர்த்தம்" எனப்படுகிறது. *ஆத்ம சாதனத்துக்கு அது சிறந்த வேளை.*

    *மனிதர்களுடைய ஒரு வருஷம், தேவர்களுக்கு ஒரு நாள் ஆகிறது.*

    தை மாதமாகிய *உத்தராயண* புண்ணிய காலம், அவர்களுக்கு *சூரியோதயம்*

    * அதிலிருந்து உத்தராயணம் ஆறு மாதம் அவர்களுக்குப் பகல்.

    * ஆடியிலிருந்து மார்கழி வரையில் த௯ஷிணாயனம் அவர்களுக்கு இரவு.

    * அதிலே மார்கழி மாதம் விடியற்காலம் தேவர்களது நாளில் *பிரம்ம முகூர்த்தம்* ஆகிறது.

    * அப்பொழுது செய்யும் ஆராதனை (தேவாராதனை) வந்தனை வழிபாடு முதலியன மனதை நன்கு பண்படுத்த வல்லவைகள்.

    * இங்ஙனம் மார்கழி மாதம்... புலனடக்கம், கடவுள் வழிபாடு ஆகிய வற்றோடு முழுவதும் பிணைக்கப் பட்டிருக்கிறபடியால்... *மாதங்களுள் தாம் மார்கழி மாதம்* என்கிறார் பகவான்.

    * ஹேம ருது அல்லது பனி காலத்தில் மரங்கள் எல்லாம் பட்டுப் போகிறது.

    * வசந்த ருதுவில் அவைகள் திரும்பவும் தளிர்த்துப் புத்துயிர் பெறும்.

    * அசேதனம் போன்று இருக்கும் தாவரம், ஜங்கமம் ஆகியவைகள் வசந்த ருதுவில் சேதனம் பெறுகின்றன.

    * அந்த இளவேனிற்காலம் மனிதனிடத்தும், புதியதொரு சக்தியையும், ஊக்கத்தையும் உண்டு பண்ணும்.

    * ஆதலால் இறைவன்... *தம்மைப் பருவங்களுள் இளவேனிற் பருவம் அதாவது வஸந்த காலம் என்கிறார்.*
    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  6. Thu. 4, Jan.2024 at 8.7 pm.

    சங்கரன் என்றால் மங்களத்தைச் செய்பவன்.*

    "ருத்திரர்களுக்குள் நான் சங்கரனாக இருக்கிறேன் என்பதன் கருத்து, *துன்பத்தின் மூலம் மக்களைப் பண்படுத்துபவன் என்று பொருள்.*

    * ருத்திரன் என்பதன் பொருள்... ரோதனம் உண்டு பண்ணுபவன் என்று பொருள்.

    * ராவணன் என்னும் சொல்லுக்கும் இதே பொருள் தான்.

    * ஆனால், இவ்விருவரும் உண்டு பண்ணும் அழுகை வெவ்வேறானவை.

    * கொலை, களவு செய்பவன், மக்களுக்கு கஷ்டத்தை உண்டு பண்ணி அழச் செய்கிறான் ராவணன்.

    * ஆனால் ருத்திரனோ, மக்களை அழச் செய்வதன் மூலம், அவர்களைப் பண்படுத்தி, மேன்மை பொருந்தியவர்களாக மாற்றுகிறான்.

    *ருத்திரர்களுள் நான் சங்கரனாக இருக்கிறேன் என்பதன் கருத்து இதுவே ஆகும்.

    * ருத்திரர்கள் பதினொரு பேர் இருக்கிறார்கள்.

    பலரும், பல இடங்களில் பலவிதமாக கூறுகின்றனர்.

    அடியேன் இங்கு குறிப்பிடுவதாவன..

    *அலஜகபதன், அஹிர்புத்னியன், வீரபத்ரன், கிரீசன், சங்கரன், அபராஜிதன், ஹரன், அங்காரகன், பிநாகன், பகன், சம்பு.*

    *இவர்கள் எல்லாரும் சிவனுடைய அம்சங்கள்.*
    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  7. Thu. 4, Jan. 2024 at 9.9 pm.

    *நாலாயிர திவ்ய பிரபந்தம் :*

    *வினா − விடை :*

    1. வேதாந்தத்தின் அடிநிலைகள் : *3*

    2. வேதாந்தத்தின் மூன்று அடி நிலைகள் : *உபநிடதங்கள், பகவத்கீதை, பிரமசூத்திரம்.

    3. பிரம்ம சூத்திரத்தின் பகுதி : *2−வகைப்படும்.*

    4. பிரம்ம சூத்திரத்தின் இரு பகுதிகள் : "தத்வபரம்", உபாச நபரம்".

    5. தத்வபரம் என்பவை : *திருவாய்மொழியின் முதல் பத்துப் பாசுரங்கள்.*

    6. உபாசநபரம் என்பவை : *இரண்டாம் பத்துப் பாசுரங்கள்*

    7. பன்னிரு ஆழ்வார்களின் காலம் : 6−9 -ஆம் நூற்றாண்டு.

    8. நாலாயிர திவ்விய பிரபந்தம் என்பது : *பன்னிரு ஆழ்வார்கள் பாடிய அமுதப் பாக்களின் தொகுப்பு.*

    9. பன்னிரு ஆழ்வார்கள் :
    *பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாள்வார், பெரியாழ்வார், ஆண்டாள், தொண்டரடிப் பொடியாழ்வார், திருமங்கையாழ்வார், திருப்பாணாழ்வார், குலசேகர ஆழ்வார், நம்மாழ்வார், மதுரகவி ஆழ்வார் ஆகியோர்.*

    10. நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தை தொகுத்தவர் : *நாதமுனிகள்.*

    11. நாதமுனிவரின் காலம் : *கி.பி. 825−918.*

    12. நாலாயிர திவ்விய பிரபந்தத்தின் பிரிவுகள் : *4*

    13. நாலாயிர திவ்விய பிரபந்தத்தின் நான்கு பிரிவுகள் : *முதலாயிரம், பெரிய திருமொழி, திருவாய்மொழி, இயற்பா.*

    14. நாதமுனிகள் வகுத்த நான்கு தொகுதிகளில் அடங்கி உள்ளவை : *இசைப்பா, இயற்பா.

    15. இசைப்பாவில் அடங்கி உள்ள தொகுதி : *3*

    16. இயற்பாவில் அடங்கி உள்ள தொகுதி : *1*

    17. இசைப்பா தொகுதியான முதலாயிரத்தில் அடங்கும் பிரபந்தங்கள் : *பெரியாழ்வார் திருமொழி முதல் கண்ணிநுண் சிறுத்தாம்பு வரை உள்ள 9-பிரபந்தங்கள்.*

    18. இசைப்பாவில் அடங்கும் மொத்தப் பாசுரங்கள் : *947*

    19. பெரியதிருமொழியில் அடங்கும் பிரபஞ்சங்கள் : *பெரிய திருமொழி, திருக்குறுந் தாண்டகம், திருநெடுந்தாண்ட கம் வரை உள்ள மூன்று பிரபந்தங்கள்.*

    20. பெரியதிருமொழியில் உள்ள மொத்தப் பாசுரங்கள் : *1134*

    21. திருவாய்மொழியில் அடங்கிய பிரபந்தம் : *திருவாய்மொழி மட்டும்.*

    22. திருவாய்மொழியில் அடங்கியுள்ள பாசுரம் : *1102*

    23. இயற்பாவில் அடங்கியுள்ள பிரபந்தங்கள் : *முதல் திருவந்தாதி முதல் பெரிய திருமடல் வரையுள்ள பத்து பிரபந்தங்கள்.*

    24. இயற்பாவில் அமைந்துள்ள பாசுரம் : *593*

    25. இராமாநுச நூற்றந்தாதி யில் (யாப்பு வகை) அடங்கியுள்ள பிரபந்தம் : *24*

    26. இராமாநுச நூற்றந்தாதியில் உள்ள இயற்பா பிரபந்தங்கள் : *11*

    27. திருவிருத்தம் அமைந்துள்ள பாங்கு : *கட்டளைக் கலித்துறை பாக்களில் அமைந்தவையும், இசைக்கு சேரக் கூடியனவாகவும் உள்ளது.*

    28. இராமாநுச நூற்றந்தாதி என்று பெயர் பெறும் தொகுதி : *இயற்பா.*

    29. அந்தாதி வகை யாப்பில் அமைந்துள்ள பிரபந்தங்கள் ": *8*

    30. இயற்பா தொகுதியில் ஒரே பாடலாக உள்ளவை : *திருவெழு கூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல்.*

    31. அந்தாதிப் பிரபந்த வகைக்கு வழங்கும் பெயர் : *தொடர்நிலைச் செய்யுள் வகையில் "சொற்றொடர் நிலைச் செய்யுள்" என வழங்குவர்.*

    32. அந்தாதிப் பிரபந்தம் எந்த வகையில் அடங்கும் : *தொல்காப்பியர் கூறும் "விருந்து" என்ற வகையில் அடங்கும்.*

    33. அந்தாதிப் பிரபந்தங்கள் : *8*

    34. முதலாழ்வார் பாடிய அந்தாதி : *3*

    35. முதலாழ்வார் பாடிய வெண்பா அந்தாதிகள் : *முதலாழ்வார் பாடிய மூன்று அந்தாதிகள், நான்முகன், திருவந்தாதி, பெரிய திருவந்தாதி ஆகிய ஐந்து.*

    36. கலித்துறை அந்தாதி என்பது : *இராமாநுச நூற்றந்தாதி.*

    37. ஆசிரியப்பாவால் அமைந்த பிரபந்தங்கள் : *2*

    38. ஆசிரியப்பாவால் அமைந்த பிரபந்தங்கள் ": *திருவாசிரியம், திருவெழுக்கூற்றிருக்கை.*

    39. அகத்துறைப் பிரபந்தங்கள் : *3*

    40. அகத்துறைப் பிரபந்தங்கள் : *திருவிருத்தம், சிறிய திருமடல், பெரிய திருமடல்.*

    ReplyDelete
  8. 41. முதலாழ்வார்கள் என்று வழங்கப்படுபவர்கள் : *பொய்கையார், பூதத்தார், பேயார்.*

    42. களவழி நாற்பது என்னும் நூலைப் பாடிய பொய்கையாரும், இவரும் : *வெவ்வேறானவர்கள்.*

    43. இவர்கள் இருவரும் வெவ்வேறு என்பதற்கான ஆதாரம் : *தொண்டை நாடும் வைணவமும் என்னும் நூலில் உள்ளது.*

    44. பொய்கையார், பூதத்தார், பேயார் என்ற முதலாழ்வார்கள் திருமலையைப் பற்றி பாடிய பாசுரங்கள் : *38*

    45. முதலாழ்வார்கள் திருவரங்கத்தைப் பற்றி பாடிய பாசுரங்கள் : *7*

    46. முதலாழ்வார்களின் உள்ளத்தைக் கவர்ந்த திருத்தலம் : *திருமலை.*

    47. திருமலையில் பொய்கையாழ்வார் காட்டும் காட்சி :
    *திருமலையில் வாழும் குறவர்கள் தங்கள் தினைப் புனங்களில் பட்டிமேயும் யானையைத் துரத்த, பரண்களிலிருந்தபடியே, கையிலுள்ள மாணிக்கக் கட்டியை, அதன் மீது எறிவர். அப்போது அங்குத் திரியும் மலைப்பாம்புகள் அந்த இரத்தினத்தைக் கண்டு, யானையை மேகமாகவும், இரத் தினத்தை மின்னலாகவும் எண்ணி மயங்குகின்றன. "மின்னலுடன் இடிதோன்றும் என்று அஞ்சி" அவை புற்றினுள் புகுகின்றன. யானையைத் துரத்தும் குறவர்கள், ஒரு கையில் அம்பு தொடுக்கப்பட்ட வில்லும், மற்றொரு கையில் தீவட்டியும் கொண்டு, யானையை அதட்டிச் செல்வர். யானை வெருவி ஓடும்பொழுது, விண்ணினின்று விழுமீன் தானாக அதன் வழியில், பேரொளியுடன் விழுவதைக் கண்டு, அதனைக் குறவர்களின் கைத்தீவட்டி என மயங்கி மேல் செல்லாது திகைத்து நிற்கின்றது.*

    48. பூதத்தாழ்வார் காட்சி :
    *திருமலையில் மதம் கொண்டு, மனம்போனவாறு ஒரு களிறு திரிகின்றது. அது வழியில் ஒரு சிறந்த பிடியைக் காண்கிறது. அப்பிடி தன்னை மீறி, அப்பால் செல்லாதிருக்க, அதற்கு இனிய உணவு தந்து, மன நிறைவு செய்விக்க விரும்புகிறது. எனவே, அதன் முன் நின்று, இரண்டே இரண்டு கணுக்களை உடைய மூங்கில் குருத்து ஒன்றைப் பிடுங்கி, அருகிலிருக் கும் தேனில் தோய்த்துத் தருகிறது.*

    49. முதலாழ்வார்களின் நூற்றந்தாதிப் பிரிவு : *3*

    50. பேயாழ்வார் காட்டும் காட்சிகள் :
    *திருமலையில் குறத்திகள் தம் கைகளால் மூங்கிலைப் பற்றி, அதன்மேல் ஏறி விளையாடுவர்.
    அம் மூங்கில்கள் சந்திரனை, இராகுவிடமிருந்து விடுவிக்கும். அது நித்திய சூரிகளுக்குத் தலைவனான பெருமானுடைய திருத்தலம் ஆகும்."குரங்குகளின் செயல்கள்" : கற்பாறையின் மீது அமர்ந்திருந்த மந்தி, தன்னிடம் அன்புள்ள ஆண்குரங்கைப் பார்த்து, "சந்திரனைக் கொணர்ந்து கொடு" என்று கேட்கும் இடம் அத் திருமலை ஆகும். அம்மலையின் ஒரு பக்கத்தில் சுனை நீரைப் பார்க்கும் ஆண்குரங்கு, அதில் தன் நிழலைப் பார்த்து, வேறொரு ஆண் குரங்காக எண்ணும்; நிழல் குரங்கு, களாப் பழங்களைப் பறிப்பதாகக் கருதி, "அதைப் பிடித்து தா" என்று அது கை நீட்டும். "யானைக் காட்சி" : திருவேங்கடவன் சந்நிதியில் தொண்டு செய்யச் செல்வோர், வாய்பூசி, கை கால்களைத் தூய்மை செய்து கொண்டு, மலர்களைக் கொண்டு செல்வது வழக்கம். இப்பழக்கம், விலங்கான யானைக்கும் அமைந்துள்ளது என்கிறார் பேயாழ்வார். யானை பொய்கையில் நீராடி, மலர்களைக் கொண்டு கோயிலுக்குள் புக, மத்தகம் கன்னங்களில் பெருகும் மதநீரால் வாய்பூசி, கால் அளவும் பெருகும் மதநீரால் கால்களைக் கழுவிக் கொள்கிறது. "அம் மலர்களைக் கொண்டு தூவி, திருமலை அப்பனைக் கண்டு வணங்குகின்றது என்கிறார் பேயாழ்வார்.*
    Jansikannan60@gmail.com

    ReplyDelete