Saturday, 2 December 2023

பாதுகாவலர்கள் கருப்புநிற சன்கிளாஸ் ஏன்



கருப்புநிற சன்கிளாஸ் ஏன்: பாதுகாவலர்கள் இப்படி இருக்க வெளிநாட்டு தலைவர்களான உள்பட பலரது மெய்க்காப்பாளர்களும் ஏறக்குறைய இதே பாணியில் தான் உடை அணிவார்கள். குறிப்பாக இந்திய உள்பட வெளிநாட்டு தலைவர்களின் மெய்க்காவலர்கள் அனைவருமே கண்களில் கருப்புநிற சன்கிளாஸ் அணிந்து இருப்பார்கள். நாம் பல இடங்களில்தனை பார்த்து இருக்கலாம். இருப்பினும் ஏன் இந்தியா உள்பட அனைத்து நாட்டு தலைவர்களின் மெய்க்காவலர்களும் கருப்புநிற சன்கிளாசஸ் அணிவதை வாடிக்கையாக வைத்துள்ளனர் என நினைத்து பார்த்தது உண்டா?.

3 முக்கிய காரணங்கள்: ஆம், இது வெறும் ஸ்டைலுக்காக அணிவது கிடையாது. மாறாக அமெரிக்க அதிபர் ஜோபைடன் முதல் பிரதமர் மோடி உள்பட பல நாடுகளின் தலைவர்களின் பாதுகாவலர்கள் கருப்பு நிற சன்கிளாசஸ் அணிவதன் பின்னணி 3 முக்கிய காரணங்கள் உள்ளன. அவை அனைத்தும் பாதுகாப்பு சார்ந்தவையாகவே இருக்கின்றன. அந்த 3 காரணங்கள் என்னென்ன என்பது பற்றி இந்த செய்திகள் பார்க்கலாம்.

முதலாவது காரணம்: இது நாம் அனைவரும் அறிந்ததே. அதாவது மதிய வேளைகளில் சூரியவெளிச்சம் என்பது மிகவும் அதிகமாக இருக்கும். இந்த வேளையில் கண்கள் சோர்வடையலாம். அதோடு கண்எரிச்சல், கண்ணீர் வரலாம். இதனை தடுப்பதில் கருப்புநிற சன்கிளாசஸ் உதவுகிறது. மேலும் பத்திரிகையாளர்கள் போட்டோக்கள் எடுக்கும்போது விழும் பிளாஷ் லைட்டில் இருந்து கண்களை இந்த சன்கிளாசஸ் பாதுகாக்கும். இதனால் தலைவர்களின் மெய்க்காப்பாளர்களான பாதுகாவலர்கள் கருப்புநிற கண்ணாடி அணிகின்றனர்.


2வது காரணம்: கருப்பு நிற சன்கிளாஸை ஒருவர் அணிந்தால் அவரது கண்களை யாராலும் நேரடியாக பார்க்க முடியாது. அதாவது வெளியில் இருந்து பார்ப்போருக்கு கருப்பு கண்ணாடி மட்டுமே தெரியும். இதன்மூலம் பாதுகாவலர்கள் யாரை, எந்த பக்கமாக பார்க்கின்றனர்? என்பதை எதிரிகள் அறியாமல் குழப்பத்திலேயே இருக்க வைக்க முடியும். இது 2வது காரணமாகும்.

3வது காரணம்: அதாவது 3வது காரணம் என்பது நேரடி பார்வையை தவிர்ப்பது. பொதுவாக மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாவலர்களின் கவனத்தை சிதறடிக்கும் முயற்சி நடக்கலாம். பொதுவாக இருவரின் கண்கள் நேரடியாக சில வினாடிகள் பார்த்தாலே கவனச்சிதறல் ஏற்படும். ஆனால் பாதுகாவலர் கருப்பு கண்ணாடி அணிந்தால் அவர் யாரை பார்க்கிறார் என்பதை பிறரால் அறிய முடியாது. இதனால் கவனச்சிதறல் ஏற்பட வாய்ப்பில்லை. இந்த 3 காரணங்கள் தான் பெரியபெரிய தலைவர்களின் பாதுகாப்பில் ஈடுபடும் பாதுகாவலர்கள் கருப்பு நிற சன்கிளாசஸ் அணிய முக்கிய காரணங்களாக சொல்லப்படுகின்றன.


No comments:

Post a Comment