Wednesday, 13 December 2023

அமிர்தவல்லி இலை...




உடலுள்ள கழிவுகளை அகற்றி, எதிர்ப்பு செய்தியை அதிகரிக்க செய்வதில், அமிர்தவல்லியின் பங்கு அபாரம்.. இந்த இலைகளின் ஒருசில நன்மைகளை பார்ப்போம்.!!

உடலிலுள்ள கழிவுகளையும், நச்சுக்களையும் வெளியேற்றி, மொத்த உறுப்புகளின் சீரான செயல்பாட்டை நிர்வகிக்க, பல புரதங்கள் மற்றும் கொழுப்புகளின் உற்பத்தியை கட்டுப்படுத்தும் பணியை செய்வதே கல்லீரல் தான்.. ரத்தத்தை சுத்தப்படுத்துவதும் இந்த கல்லீரல்தான்.. புரதத்தை உருவாக்குவதும் இந்த கல்லீரல்தான்..

Do you know the excellent benefits of Giloy and Amirthavalli Leaves are the Best Medicine for Liver, Heart
ஆனால், கல்லீரலை பொறுத்தவரை, எந்த பிரச்சனையாக இருந்தாலும், 70 சதவீதம் பாதிக்கப்பட்ட பிறகே வெளியே தெரியவரும்.. அதனால்தான், பேராபத்து என்கிறார்கள்.

ஆல்கஹால்: இதற்கெல்லாம் ஒரே வழி, கல்லீரலை பத்திரமாகவும், பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்து கொள்வதுதான். இதற்கு நாம் உண்ணும் உணவில் சற்று கூடுதலான கவனத்தை செலுத்தினாலே போதும். முக்கியமாக, ஆல்கஹால், சிவப்பு இறைச்சி, அதிக உப்பு, சர்க்கரை இவைகளை தவிர்த்தாலே, கல்லீரல் காப்பாற்றப்பட்டுவிடும்.

அதேபோல, சில மூலிகைகளும் கல்லீரலின் நன்மைக்கு உதவக்கூடியது.. இதில் முக்கியமானது அமிர்தவல்லி இலைகளாகும். கல்லீரல் நோய்களை மட்டுமல்லாமல், சிறுநீரக நோய்த்தொற்றுகளையும் குணமாக்கக்கூடியது இந்த அமிர்தவல்லி இலைகள்.

அமிர்தவல்லி: பெரும்பாலும், நம்முடைய உடலில் எதிர்ப்பு சக்தியை வள்ரத்து கொள்ள உதவவே, இந்த இலைகள் பெரிதும் பயன்படுகின்றன.. இந்த அமிர்தவல்லி இலைகளிலும், காம்பிலும் ஏகப்பட்ட ஆன்டிஆக்சிடன்ட்கள் நிறைந்துள்ளன.

இதை சீந்தில் இலை என்பார்கள்.. இதய வடிவில் உள்ள கொடியிலையாகும்.. உடலிலுள்ள கழிவுகளையும், பாக்டீரியாக்களையும் வெளியேற்ற இந்த இலைகள் உதவுகின்றன. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ள அமிர்தவல்லி, உடலில் இருக்கும் ஃப்ரீ-ரேடிக்கல்களை எதிர்த்து போராடுகிறது..

இதனால், குடல் மட்டுமல்லாமல், ரத்தத்தையும் சுத்திகரிப்பு செய்கிறது. இதய நோயாளிகளுக்கு சிகிச்சை தருவதற்காக இந்த அமிர்தவல்லியை பயன்படுத்துகிறார்கள்.. டெங்கு, பன்றி காய்ச்சல், மலேரியா போன்ற தாக்கத்தையும் குறைக்கிறது. இதனால் மலச்சிக்கல் தீர்கின்றன.. நினைவாற்றலை அதிகரிக்க செய்கிறது.. மனம் அமைதி பெறுகிறது.

காம்பு இலை: அமிர்தவல்லி, இலைகள் மட்டும் காம்புகள் இரண்டுமே காய்ச்சல் போன்ற நோய்களுக்கு மருந்தாக உபயோகமாகின்றன.. இவைகளை ஜூஸ் தயாரித்து குடிக்கலாம்.. அதேபோல, டீ போல தயாரித்து குடிக்கலாம்.. அமிர்தவல்லி காம்பு மற்றும் இலைகளை பறித்து வந்து, தண்ணீரில் கழுவி எடுத்து கொள்ள வேண்டும்.


Do you know the excellent benefits of Giloy and Amirthavalli Leaves are the Best Medicine for Liver, Heart
ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி, 2 துண்டு இஞ்சி, 3 துளசி இலைகள், 3 நசுக்கிய மிளகு, சுத்தம் செய்யப்பட்ட அமிர்தவல்லி காம்பு மற்றும் குச்சிகளை சேர்த்து கொதிக்க விட வேண்டும். இதை வடிகட்டி குடித்தாலே பல பிரச்சனைகள் தீர்கின்றன. எதிர்ப்பு சக்திகள் உடலில் கூடுவதுடன், கல்லீரல், சிறுநீரக தொற்றுகளை கட்டுப்படுத்துகிறது.

கல்லீரல்: ஆனால், அளவுக்கு மிஞ்சினால் இந்த இலைகளும் கல்லீரலுக்கு நஞ்சாகிவிடும். அதேபோல, நேரடியாக இந்த இலைகளின் சாறு சாப்பிடகூடாதாம். இந்த இலைகளின் சாற்றினை, தண்ணீரில் கலந்தே குடிக்க வேண்டும். அதுவும் 6 வாரங்களுக்கு மேல் குடிக்கக்கூடாது.. அத்துடன், எந்த அளவு சாறு எடுத்து கொள்கிறோம் என்பதும் முக்யிம் என்பதால், டாக்டர்களின் முறையான வழிகாட்டுதல் இல்லாமல், இந்த இலைகளை மருந்தாக உட்கொள்ளக்கூடாது.


1 comment:

  1. அய்யா.. வெ.சாமி அவர்களுக்கு அடியேனின் 2024−ஆம் வருட புத்தாண்டு வாழ்த்துகள் அய்யா. தங்கள் பதம் பணிகிறேன் ஆசீர்வதியுங்கள் அடியேனை. திருச்சிற்றம்பலம்.

    ReplyDelete