Thursday, 14 December 2023

பாலாரிஷ்டம்...


பாலாரிஷ்டம் என்ற சொல்லிற்கு சிறுவயதில் இறப்பது அல்லது சிறு வயதில் உடல்ரீதியாகத் கெடுவது என்ற பொருள். இந்த தோஷத்திற்கு சிறந்த பரிகாரம் உள்ளது.
பிறந்த ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து 6,8,12-ம் இடங்களில் குரு கிரகம் நின்றாலும் அல்லது சூரியன், சந்திரன் நின்றாலும் 8-ம் இடமான ஆயுள் தானத்தில் ஆயுள் காரகன் சனி நின்றாலும் அது பாலாரிஷ்ட தோஷமாகும். இந்த குழந்தைகளுக்கு நோய் நொடிகளே பிறந்த காலத்திலிருந்து 1 அல்லது 2 ஆண்டுகள் வரை தரக்கூடிய வாய்ப்புகள் உண்டு. பாலாரிஷ்டம் என்ற சொல்லிற்கு சிறுவயதில் இறப்பது அல்லது சிறு வயதில் உடல்ரீதியாகத் கெடுவது என்ற பொருள். பிறந்த குழந்தை உயிருடன் இருக்குமா? எத்தனை காலம் இருக்கும்? இந்தக் குழந்தை பிறப்பினால் தாய்க்கும் ஏதாவது கஷ்டங்கள் இருக்குமா என்பதை பாலாரிஷ்ட தோஷம் சுட்டிக் காட்டும்.
ஒரு குழந்தை ஜனனமானவுடனேயே நேரத்தைக் குறித்து என்ன நட்சத்திரத்தில் பிறந்துள்ளது என்று பார்ப்பது வழக்கமாக இருந்து வருகிறது. குழந்தையின் ஜாதகத்தில் பாலாரிஷ்டம் இருந்தால் அதனை ஜோதிடம் தெளிவாகக் கூறி, அதற்குரிய பரிகாரத்தையும், முன் வைக்க வேண்டும். அடிக்கடி கரு தங்காமல், கருச்சிதைவு ஏற்படுபவர்களும், குழந்தை பிறந்த சில நாளிலேயே இறந்து, மீண்டும் பிறக்கும் குழந்தை நீண்டகாலம் வாழ `மிருத்யுஞ் ஹோமம்'' செய்யலாம். பிரதோஷ வேளையில் சிவ வழிபாடு, லட்சுமி நரசிம்மர் வழிபாடு செய்யலாம். சக்கரத்தாழ்வாரை வழிபடுவதும் நல்லது. விஷ்ணு சகஸ்வரநாமம், லலிதா நாமம் பாராயணம் செய்யலாம். பாலாரிஷ்ட தோஷத்தைப் போக்கும் அன்னையாக இருப்பவள் ஸ்ரீ பால சௌந்தரி என்றும் அம்பிகை. இவள் திருச்சியில் இருந்து 12 கி.மீ. தொலைவில் திருவாசி என்றும் திருத்தலத்தில் வீற்றிருந்து  அருள்பாலிக்கிறாள். இந்த அம்பிகைக்கு அபிஷேகம் செய்யும் தீர்த்தம் மற்றும் பாலை குழந்தைகளுக்கு மூன்று ஞாயிற்றுக்கிழமைகள் கொடுத்துவர பாலாரிஷ்ட  தோஷம் நிவர்த்தியாகும்.
ராமேஸ்வரத்தில் காலையில் நடைபெறும் ஸ்படிகலிங்க பூஜையில் கலந்து கொண்டு கடலில் தீர்த்தமாடி விட்டு. பின்னர் கோயிலில் இருக்கும் தீர்த்தங்களிலும்  நீராடிவிட்டு சுவாமியையும், அம்மனையும் தரிசியுங்கள், தோஷம் விலகும். பாலாரிஷ்ட தோஷம் நீங்க குழந்தையை முருகன் கோவிலில் சுவாமிக்கு தத்துக்  கொடுத்து வழிபடலாம். குழந்தையின் ஜென்ம நட்சத்திரம் சொல்லி. அர்ச்சனை செய்து சந்நிதியை மூன்றுமுறை வலம் வரவேண்டும். கொடி மரத்தின் முன்போ  அல்லது சந்நிதியின் முன்போ, குழந்தையைக் கிடத்தி, முருகப்பெருமானிடம் ஒப்படைப்பதாக எண்ணி வழிபட வேண்டும்.
பின் அர்ச்சகரை அழைத்து குழந்தையை எடுத்துத் தரச் சொல்லிப் பெற வேண்டும். தட்சனையாக, ஒருபடி தவிட்டை கொடுப்பது, முன்பு வழக்கமாக இருந்தது.  இப்போது உங்களால் எது முடியுமோ அதனை தட்சனையாகக் கொடுக்கலாம். இந்தப் பரிகாரத்தைச் செய்வதின் மூலம், பாலாரிஷ்ட தோஷம் நீங்கி விடுவதோடு  மட்டுமில்லாமல், முருகப் பெருமாள் குழந்தையைக் காத்து அருள்புரிவாள் என்பது ஐதீகம். நமது குறை தீர்த்து, ஆயுள் பலமுள்ள குழந்தைகள் பிறக்க, தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று முறைப்படி  வழிபடுவது நல்லது. குழந்தை பிறந்து, பிறந்து இறக்கும் தோஷம் உள்ளவர்கள். இத்திருத்தலத்தில் உள்ள சிவன், அம்மன், முருகனுக்கு பாலாபிஷேகம் செய்து,  புது வஸ்திரம் சாற்றி வழிபாடு செய்தால் தோஷம் நீங்கிப் பிறக்கும் குழந்தைகள் இறக்காது என்று இதனால் பலனடைந்தவர்கள் சிலாகித்துக் கூறுகின்றனர். பால கிருஷ்ண விக்ரகம் செய்து தானமாகக் கொடுப்பதன் மூலமும், பாலாரிஷ்ட தோஷம் நீங்கும், தானத்தில் சிறந்தது அன்னதானம் என்பதற்கேற்ப, பசித்த  ஏழைகளுக்கு, பசியாற உணவிடுவது சிறப்பு. ஆண்டவன் கொடுப்பதை யாராலும் தடுக்க முடியாது, ஆண்டவன் தடுப்பதை யாரும் கொடுத்து விட முடியாது  என்பதற்கேற்ப அறிவுள்ள, ஆயுள் பலமுள்ள குழந்தை பிறக்க ஆண்டவனை வழிபடுங்கள், மகிழ்வுடன் வாழுங்கள்.

No comments:

Post a Comment