Friday 29 December 2023

இறால் மீன்...


மீனில் சூப்பர் இதுதான்.. இறால் மீன் செய்றீங்களா? இறால் சாப்பிட்டா என்னாகும் தெரியுமா? எத்தனையோ மீன்வகைகள் இருந்தாலும், குழந்தைகளுக்கு அதிகம் தரக்கூடிய மீன் என்றால் அது இறால் மீன்கள்தான்.. ருசி மட்டுமல்லாமல், அதிக சத்துக்களை உடைய மீன்களில் ஒன்றாக இந்த இறால் திகழ்கிறது.


இறால் மீன்களில் நிறைய புரோட்டீனும், வைட்டமின் D-யும் உள்ளன.. முக்கியமாக இதில் கார்போஹைட்ரேட் அவ்வளவாக கிடையாது. அதனால்தான், உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், இந்த மீனை தாராளமாக சாப்பிடலாம்.

Do you know the Health Benefits of Prawn and Prawn Fish is the Best Food for Weight Loss
சத்துக்கள்: இறாலில் அஸ்டக்ஸாந்தின் என்ற கரோடெனாய்ட் அதிக அளவில் உள்ளது.. மிகச்சிறந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டாக இது விளங்குகிறது. அதனால்தான், சருமத்துக்கு பாதுகாப்பை இறால் மீன்கள் தருகின்றன.. வயதான தோற்றத்தையும் தள்ளிப்போட உதவியாக இருக்கிறது, இறாலிலுள்ள வைட்டமின் D சத்துக்கள்.





இறால்களில் ஒளிந்திருக்கும், ஹெபாரின் என்ற பொருள், கண் கோளாறுகளை நீக்குகிறது.. விழித்திரைக்கு பாதுகாப்பை தருவதுடன், கண் பார்வையை கூர்மையடைய செய்கிறது. தலைமுடி அதிகமாக கொட்டினால், உணவில் தாராளமாக இறாலை சேர்த்து கொள்ளலாம்.. எலும்புகள் சிதைவு ஏற்படாலும், பற்களின் உறுதிக்கும், இறாலிலுள்ள கால்சியம் துணை நிற்கிறது.
பிளஸ் பாயிண்ட்: இறால் மீனில், மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட்டாக இருப்பது, அதிலிருக்கும் அயோடின் சத்துக்களும், அளவுக்கதிகமான கனிமச்சத்துக்களும்தான்.. ஹீமோகுளோபினில் ஆக்ஸிஜன் கலக்கும் செயலில் முக்கிய பங்கு வகிக்கிறது இந்த கனிமம்...

அதிகமான இரும்புச்சத்து உடம்பில் கலக்கும்போது, தசைகளுக்கு கூடுதல் அளவிலான ஆக்ஸிஜன் செல்லக்கூடும்.. இப்படிப்பட்ட இறால் மீனை குழந்தைகளுக்கு சாப்பிட தருவதால், மூளைக்கு செல்லும் ஆக்ஸிஜனின் அளவும் அதிகரித்து ஞாபக சக்தியும் அதிகரிக்கிறதாம்.

கால்சியம்: அதுமட்டுமல்ல, அயோடின் சத்துக்கள் இந்த மீனில் நிறைய உள்ளது.. உடலில் தைராய்டு ஹார்மோன்கள் சுரக்கவும் அடித்தளமாக உள்ளது.. இந்த ஹார்மோன்கள் குழந்தை பருவத்திலும், கர்ப்பமாக இருக்கும் நேரத்திலும், மூளையின் வளர்ச்சிக்காக தேவைப்படுகிறது.

இதைத்தவிர, புரோட்டீன், கால்சியம், பொட்டாசியம் உட்பட ஏகப்பட்ட வைட்டமின்கள் நிறைந்திருப்பதால், புற்றுநோய்களிலிருந்து மனிதர்களை காக்கிறது.. முக்கியமாக, நுரையீரல் புற்றுநோய்க்கு எதிராக போராடுவதில், இறால் மீன்களுக்கு நிறைய பங்குள்ளது. அந்தவகையில், தவிர்க்க கூடாத உணவாக, இறால் மீன்கள் விளங்கி வருகின்றன.

மாதவிடாய்: இறாலில் அயோடின் அபரிமிதமாக உள்ளதால், உடலில் தைராய்டு ஹார்மோன்கள் சுரக்க பேருதவி செய்கிறது.. இந்த ஹார்மோன்கள் குழந்தை பருவத்திலும், கர்ப்பமாக இருக்கும் நேரத்திலும், மூளையின் வளர்ச்சிக்காக தேவைப்படுகிறது. இறாலில் ஒமேகா-3 கொழுப்பமிலங்கள் நிரம்பி உள்ளன.. பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் வலியை குறைக்கவும், பிறப்புறுப்புகளுக்கு சீரான முறையில் இரத்த ஓட்டம் இருக்கவும், இந்த இறால்கள் மிகவும் பயன்படுகின்றன.


1 comment:

  1. அய்யா வெ.சாமி அவர்களுக்கு விநாயஹர் சதுர்த்தி நல்வாழ்த்துகள். தங்களின் ஆசீர்வாதம் அடியேனுக்கு வேண்டுமாறு பதம் பணிகிறேன் அய்யா.

    ReplyDelete