Tuesday, 2 January 2024

வாஸ்துப்படி, வீட்டின் இந்த இடங்களில் பச்சை நிறத்தை யூஸ் பண்னாலம்.

வாஸ்துப்படி, வீட்டின் இந்த இடங்களில் பச்சை நிறத்தை யூஸ் பண்ணாதீங்க.. இல்லன்னா முன்னேற்றமே ஏற்படாது... ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வண்ணங்கள் பிடிக்கும். நிறைய பேர் தங்கள் வீடுகளுக்கு தங்களுக்கு பிடித்த நிறத்தை பயன்படுத்துவார்கள். நிறங்களில் மஞ்சள் மங்களகரமாகவும், பச்சை பசுமையையும் குறிக்கிறது. அதுவும் பச்சை நிறம் கண்களுக்கு குளிர்ச்சியை மற்றும் மனதிற்கு ஒருவித அமைதியைத் தருவதாக நம்புகின்றனர். அதன் விளைவாக நிறைய பேர் தங்கள் வீடுகளுக்கு பச்சை நிற பெயிண்ட்டை பயன்படுத்துகிறார்கள். மேலும் பச்சை நிறம் வீட்டிற்கு செழிப்பை கொண்டு வருவதாகவும் நினைத்து அந்த நிற பெயிண்ட்டை தங்கள் வீடுகளில் பயன்படுத்துகிறார்கள். ஆனால் ஜோதிடத்தின் படி, வீட்டின் குறிப்பிட்ட பகுதியில் பச்சை நிறத்தைப் பயன்படுத்தக்கூடாது. அப்படி பயன்படுத்தினால், அது வீட்டிற்கு மோசமான விளைவை ஏற்படுத்தும் மற்றும் அந்த வீட்டில் உள்ளோரின் முன்னேற்றத்தில் தடையை ஏற்படுத்தும். இப்போது வீட்டின் எந்த பகுதியில் பச்சை நிறத்தைப் பயன்படுத்தக்கூடாது, ஏன் பயன்படுத்தக்கூடாது என்பதைக் காண்போம். தெற்கு திசையில் பயன்படுத்தக்கூடாது வீட்டின் தெற்கு திசையில் மட்டும் பச்சை நிறத்தை பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் தெற்கு திசையானது செவ்வாய் பகவானுக்கு உரிய திசையாக கருதப்படுகிறது மற்றும் செவ்வாய் பகவானுக்கு உரிய நிறம் சிவப்பு. பச்சை நிறமானது குளிர்ச்சியான ஆற்றலை உற்பத்தி செய்யும், சிவப்பு அதற்கு எதிர்மாறாக வெதுவெதுப்பான ஆற்றலைக் கொண்டது. எனவே சிவப்பு நிறத்தை பயன்படுத்த வேண்டிய இடத்தில் பச்சை நிறத்தைப் பயன்படுத்தினால், அது முன்னேற்ற பாதையில் தடையை ஏற்படுத்தும். மேற்கு திசையில் கூடாது வாஸ்துப்படி, மேற்கு திசையான சனி பகவானுக்கு உரிய திசையாக கருதப்படுகிறது. எனவே இந்த மேற்கு திசையில் பச்சை நிறத்தை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். வீட்டு செல்வ செழிப்போது இருக்க வேண்டுமானால், இந்த திசையில் பச்சை நிறத்திற்கு பதிலாக மெட்டாலிக் நிறங்களைப் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. பிரம்ம பகுதியில் கூடாது வீட்டின் பிரம்ம பகுதி ஆகாயத்தைக் குறிக்கிறது. எனவே வீட்டின் மைய பகுதியான பிரம்ம ஸ்தானத்தில் பச்சை நிறத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். வேண்டுமானால் இந்த பகுதியில், வெள்ளை, வெளிரிய மஞ்சள் அல்லது நீல நிறங்களைப் பயன்படுத்தலாம். ஒருவேளை இந்த பகுதியில் பச்சை நிறத்தைப் பயன்படுத்தினால், அது வீட்டில் உள்ளோரின் ஆரோக்கியத்தைப் பாதிப்பதோடு, வீட்டில் உள்ளோரிடையே நல்லுறவை பேண முடியாமல் நிறைய சண்டைகளை வரவழைக்கும். சீலிங்கில் கூடாது வீட்டின் சீலிங்கில் எப்போதும் பச்சை நிற பெயிண்ட்டை பயன்படுத்தக்கூடாது. அப்படி பயன்படுத்தினால், அது வீட்டில் உள்ளோரின் வளர்ச்சி பாதையில் தடைகளை ஏற்படுத்தும். எனவே இந்த தவறை செய்துவிடாதீர்கள். தெற்கு பார்த்த வீடுகள் உங்கள் வீடு தெற்கு பார்த்த வீடு என்றால், வீட்டிற்கு முன் பச்சை நிறத்தைப் பயன்படுத்தாதீர்கள். இல்லாவிட்டால் அது எதிர்மறை ஆற்றலை வீட்டில் அதிகரிக்கும். வேண்டுமானால் பச்சை நிற செடிகளை அந்த பகுதியில் வைத்து பசுமையாக வைத்துக் கொள்ளலாம்.

1 comment:

  1. அய்யா ! வெ.சாமி அவர்களுக்கு நமஸ்காரம். 2024−ஆம் வருடத்திய பொங்கல் வாழ்த்துகள். தங்களின் ஆசி வேண்டுகிறேன்.

    ReplyDelete