Sunday, 14 January 2024

பிரண்டை சூப்பர்: எலும்பு முறிவை விரட்டும் "பவர்புல்" பிரண்டை.. வச்சிரவல்லின்னா சும்மாவா? பலே பிரண்டை


பிரண்டை சூப்பர்: எலும்பு முறிவை விரட்டும் "பவர்புல்" பிரண்டை.. வச்சிரவல்லின்னா சும்மாவா? பலே பிரண்டை
ஆயுளை நீட்டிக்கும் மூலிகையான பிரண்டையை, எப்படி மருந்தாக பயன்படுத்துவது? எப்படி சமையலுக்கு பயன்படுத்துவது தெரியுமா?


வைட்டமின் C, E, கால்சியம், கெட்டோஸ்டீராய்டு (ketosteroids), ஃப்ரீடீலின், ரெஸ்வெராட்ரோல் (Resveratrol) என்ற ஏகப்பட்ட வேதிப்பொருட்கள் நிறைந்துள்ளன..


Do you know the Excellent Health Uses of Pirandai and Pirandai is the Super uses of Bone Strength
பிரண்டை: செரிமான சக்தியை தூண்டிவிடும் சக்தி இந்த பிரண்டைக்கு உள்ளது... ஜீரண சக்தியை பெருக்கும் இந்த பிரண்டையை, பாலில் உப்பு கலந்து குடித்துவந்தால் ஆண்மை குறைபாடு நீங்கும்.. பலமில்லாதவர்களுக்கு தெம்பை தரக்கூடியது.. மூளை நரம்புகளை பலப்படுத்தி, நினைவுத்திறனையும் பெருக்குவதால்தான், வளரும் குழந்தைகளுக்கு பிரண்டையை சமைத்துதர சொல்கிறார்கள்.




வயிறு உபாதை உள்ளவர்கள், வாயு தொந்தரவு இருப்பவர்கள், பிரண்டையை வாரம் 2 முறையாவது துவையல் செய்து சாப்பிடலம்.. மலத்துவாரத்தில் எரிச்சல், அரிப்பு பிரச்சனை இருந்தாலும் பிரண்டையை நெய்விட்டு வதக்கி சாப்பிட்டாலே போதும். பிரண்டையை நெய்யில் வதக்கி, கல்உப்பு சேர்த்து சாப்பிட்டு வந்தால், மூலநோய்களும் ஓடிவிடும்.

ஆஸ்துமா : ஆஸ்துமா பிரச்சனை இருந்தாலும், அதற்கும் பிரண்டை தீர்வு தருகிறது.. பிரண்டையை சுத்தம் செய்து, நன்றாக அலசி கொள்ள வேண்டும். பிறகு, அதனுடன் மிளகு சேர்த்து அரைத்து, தினமும் சுண்டைக்காய் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் நிவாரணம் கிடைக்கும்.. பிரண்டை தண்டை சுத்தம் செய்து, அதனுடன் மாங்காய் சேர்த்து அரைத்து சாப்பிட்டு வந்தால், உடலிலுள்ள ஊளைச்சதை குறையும்.. கெட்ட கொழுப்புகளும் கரைந்துவிடும்.


ரத்த மூலம் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள், இளம்பிரண்டையை நெய்விட்டு வதக்கி, அரைத்து தினமும் காலை மாலை 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் போதும்.மெல்ல மூல அபாயத்திலிருந்து விடுபடலாம.

வச்சிரவல்லி: பிரண்டையை, சிலர் வச்சிரவல்லி என்பார்கள்.. ஆயுர்வேத மூலிகையான இந்த பிரண்டையின் பெரும்பயன் எலும்பு முறிவை குணமாக்குவதுதான்.. முக்கியமாக, விபத்துகளில் எலும்பு முடிவு ஏற்பட்டுவிட்டால், அந்த முறிவை வெகுசீக்கிரத்திலேயே இணைக்கக்கூடிய ஆற்றல் இந்த பிரண்டைகளுக்கு உண்டு..

காரணம், உடைந்த எலும்புகளில் புதிய திசுக்களை உருவாக்கி, அதை சீரமைக்க உதவுகிறது.. பிரண்டையின் வேர்களை காயவைத்து, பவுடராக்கி வைத்து கொள்ள வேண்டும். இதனை வெந்நீரில் குழைத்து, பற்று போல போட்டுவந்தால், முறிந்த எலும்புகள் விரைவில் கூடிவிடும்..


வீக்கங்கள்: அதேபோல, மூட்டுவீக்கங்கள் இருந்தாலும்கூட, இந்த பிரண்டையின் சாற்றை தடவி வந்தால், நிவாரணம் கிடைக்கும். அதாவது, நாம் வேகமாக நடக்கும்போது, கால் சுளுக்கு அல்லது சதை பிரண்டுவிடுவது அல்லது வீக்கம் எதுவானாலும், இந்த பிரண்டை சாறுடன் புளி, உப்பு சேர்த்து காய்ச்சி, வீக்கமுள்ள இடத்தில் பற்று போட்டு வரலாம். பிரண்டை சாற்றை, பசும்பாலுடன் சேர்த்து குடித்துவந்தால், உடைந்த எலும்புகள் குணமடையும்.

Do you know the Excellent Health Uses of Pirandai and Pirandai is the Super uses of Bone Strength
உணவிலும் துவையல், அல்லது சட்னி போல சேர்த்துகொள்வதால், எலும்புகளுக்கு வலிமையையும், அடர்த்தியும் கிடைப்பதுடன், எலும்பு சம்பந்தமான பிரச்சனைகள் அடியோடு நீங்கும்.

துவையல்: அதாவது பிரண்டை தண்டுகளின் மேல் தோலை சீவி, அதிலிருக்கும் நாரையும் எடுத்துவிட்டு, சிறு துண்டுகளாக நறுக்கி பசுநெய்யில் வதக்கி எடுத்து கொள்ள வேண்டும். அதனுடன் காய்ந்த மிளகாய், புளி, உப்பு சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும். இறுதியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தப்பரும்பு தாளித்து கொட்டினால் துவையல் ரெடி. தேவைப்பட்டால் தேங்காய் சேர்த்து கொள்ளலாம்.
அல்லது பிரண்டை தண்டுகளை பொடியாக நறுக்கி சேர்த்தில் சேர்த்து கொதிக்க வைத்து ஒரு டம்ளர் குடித்து வந்தால், எலும்புகள் பலம் பெறும்.. முறிந்த எலும்பும் கூடும்.. ஆனால், இந்த பிரண்டை ரசத்தை ஒரு மாதம் குடிக்க வேண்டுமாம். புற்றுநோய்க்கு தரப்படும் மருந்துகளில் பிரண்டையும் கட்டாயம் இடம்பெறும்.


1 comment:

  1. அய்யா வெ.சாமி அவர்களுக்கு திருச்சிற்றம்பலம். அய்யா தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள். தங்கள் பொற்பாதங்களில் வீழ்கிறேன்..தாங்கள் ஆசீர்வாதம் பண்ணுங்கள் அய்யா.

    ReplyDelete