முரல் மீன்.. மூட்டு வலியை அசால்ட்டா விரட்டி.. எழுந்து ஓடசெய்யும் ஆச்சரியம்.. சாலமன் + மத்தி மீன்கள்
மீன்கள் என்றாலே உடலுக்கு நன்மை தரக்கூடியது என்றாலும், மூட்டுவலியை குணப்படுத்தும் தன்மை ஒருசில மீன்களுக்கு மட்டுமே உண்டு.. அதில் சிலவற்றை காண்போம்.
மூட்டு வலி, மூட்டு வீக்கத்திற்கு மருத்துவரை சந்தித்து சிகிச்சை பெற்றேயாக வேண்டும்.. அதேசமயம், உணவிலும் கவனம் செலுத்த வேண்டும்.. ஒமேகா3 கொழுப்பு அமிலம் மிகுந்த மீன்கள், வாதாம்பருப்பு,சோயாபீன்ஸ், காளிபிளவர், அடர்பச்சை நிற காய்கறிகள், போன்றவை தவறாமல் சாப்பிட வேண்டும்.
Do you know Excellent Health Benefits of Mural Meen and Mural Fish is the Best for Joint Pain
மூட்டு வலி பாதிப்புள்ளவர்களுக்கு, உடலுக்கு ஆன்டி ஆக்சிடென்ட் சத்துக்கள் அவசிய தேவையாக உள்ளன.. பழங்கள், காய்கறி, கீரை வகைகளில் இந்த சத்துக்கள் நிறைய உள்ளன.. முரல் மீன்களை எடுத்து கொண்டால், மற்ற மீன்களிலிருந்து பல வகைகளில் வித்தியாசப்பட்டது. இந்த மீன்களை பார்ப்பதற்கு பாம்பு போலவே இருக்கும். சில சமயம், கடல் குதிரை போலவும் இருக்கும்..
ADVERTISEMENT
முரல் மீன்கள்: மற்ற மீன்களுக்கு இருப்பதுபோல, தாடையும், பற்களும் இதற்கு இருக்காது. குறுகிய நீண்ட தாடை, கூரான பற்கள், கத்தி போன்ற மூக்கு இருக்கும்.. மனித உடலையே துளைத்துவிடும் அளவுக்கு கூர்மையானது.. அதனால்தான் ஊசி மீன்கள் (Needle fish) என்பார்கள்.
தோற்றத்தை போலவே, பலன்களிலும் மற்ற மீன்களிலிருந்து வித்தியாசப்படுகிறது இந்த முரல் மீன்கள்.. உயர் ரத்த அழுத்தம், மனச்சோர்வு, பதட்டம், ரத்த சோகை உள்ளவர்களுக்கு இந்த மீன் நன்மை பயக்கும் என்றாலும், மூட்டு வலிகளுக்கு நிவாரணம் தருவது கூடுதல் ஸ்பெஷல்.. முரல் மீன் சாப்பிடுபவர்களுக்கு கீல்வாதம் பிரச்சனைகளை ஏற்படுவதில்லை.. டிமென்ஷியாவை அதாவது நினைவாற்றல் இழப்புகளை தடுக்க உதவும் தன்மை, இந்த முரல் மீன்களுக்கு உள்ளது.
கர்ப்பிணிகள்: கர்ப்பிணிகளுக்கு பரிந்துரைக்கப்படும் மீன்களில் இந்த முரல் மீன்களும் ஒன்று.. இறந்த குழந்தை அல்லது குறைப்பிரசவத்தின் அபாயத்தை இந்த மீன்களின் தன்மை குறைக்கிறது.
அதேபோல, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் D நிறைந்த சாலமன், கானாங்கெளுத்தி உள்ளிட்ட கொழுப்பு மீன்களை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மூட்டு வலி, முழங்கால் வலிக்கு நிவாரணம் கிடைக்கும். ஜிலேபி மீன்களை பொறுத்தவரை ஏகப்பட்ட கால்சியம் உள்ளது.. அதனால், பற்களுக்கும், எலும்புகளின் உறுதித்தன்மைக்கும் உதவுகிறது..
மத்தி மீன்கள்: மத்தி மீன்களை பொறுத்தவரை வைட்டமின் D அதிகம் நிறைந்தவையாகும். இந்த மீன்கள், எலும்புகளுக்கு தேவையான கால்சியம் மற்றும் பிற தாதுக்கள் உறிஞ்சப்படும் அளவை அதிகப்படுத்தக்கூடியது.
இதில் மீன் எண்ணெய் மாத்திரைகளையும் சேர்த்து கொள்ளலாம்.. உடலில் போதுமான அளவு வைட்டமின் D சக்தியை, சூரியஒளி மூலம் பெறுகிறோம் என்றாலும், குளிர்காலத்தில் இது கடினம்.. வெயில் இல்லாத நாட்களில், அல்லது குளிர்ச்சியான காலகட்டத்தில் வைட்டமின் D கிடைக்காமல் போய்விடும். இதற்கு வைட்டமின் D நிறைந்த மீன் எண்ணெய்கள் உதவிபுரிகின்றன.
உவ்வே அய்யா.
ReplyDelete