Tuesday 16 January 2024

உக்ர ரத, பீம ரத, விஜய ரத சாந்திகள்.

உக்ர ரத, பீம ரத, விஜய ரத சாந்திகள்...- 61ஆவது பிறந்த தினம் – சஷ்டி அப்த பூர்த்தி 70- ஆவது பிறந்த தினம் – பீம ரத சாந்தி 81- ஆவது பிறந்த தினம...சதாபிஷேகம் 100- ஆவது பிறந்த தினம் – பூர்ணாபிஷேகம்







2 comments:


  1. Sat. 13, Apl. 2024 at 4.47 pm.

    *சைவ சித்தாந்தம் :*

    *சைவ சித்தாந்தம் மீண்டும் ஞாபகப்படுத்துதல்...!

    <> சித்தாந்தம் என்ற சொல்லின் பொருள் : *முடிந்த முடிபு.*

    <> தமிழ் மொழியில் சித்தாந்தம் எனும் சொல்லைக் கையாண்டவர் : *திருமூலர்.*

    <> சைவ சித்தாந்தத்தின் இலக்கியக் கருவூலம் என்று கூறப்படுவன : *பன்னிரு திருமுறைகள்.*

    <> சைவ சித்தாந்தக் கோட்பாடுகள் இடம் பெற்ற பழந் தமிழ் நூல் : *திருக்குறள்.*

    <> சைவ சமயக்குரவர் நால்வர்கள் : *திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்க வாசகர்.*

    <> மணிவாசகர் அருளியது : *திருவாசகம்.*

    <> சம்பந்தர் முதலிய மூவர் அருளியது : *தேவாரம்.*

    <> திருக்கயிலாய பரம்பரை என்று சொல்வது : *திருநந்தி தேவரால், கயிலையில் தொடங்கி வைக்கப் பெற்ற பரம்பரை.*

    <> திருக்கயிலாய பரம்பரையின் மரபு : *சைலாதி மரபு.*

    <> சைலாதி என்பவர் : *திருநந்தி தேவர்.*

    <> சந்தானம் என்றால் : *குரு, சிஷ்ய பரம்பரை.*

    <> இருவகை சந்தானங்கள் : *அகச் சந்தானம், புறச் சந்தானம்.*

    <> அகச் சந்தானம் என்பது : *கயிலாயத்துள்ளே வளர்ந்த மரபு.*

    <> புறச் சந்தானம் என்பது : *கயிலாயத்துக்கு வெளியே பூ உலகில் வளர்ந்த மரபு.*

    <> அகச் சந்தனாச்சாரியர்களின் எண்ணிக்கை : *நான்கு.*

    <> நான்கு அகச் சந்தனாச்சாரியர்கள் : *திருநந்தி தேவர், சனற்குமாரர், சத்திய ஞான தரிசினி, பரஞ்சோதி முனிவர்.*

    <> அகச் சந்தனாச்சாரியரை அழைப்பது : *தேவ பரம்பரை* என்று.

    <> புறச் சந்தனாச்சாரியர்களின் எண்ணிக்கை : *நான்கு.*

    <> புறச் சந்தனாச்சாரியரை அழைப்பது : *பூத பரம்பரை* என்று.

    <> புறச் சந்தனாச்சாரியர்கள் நால்வர் : *மெய்கண்டார், அருணந்தி சிவம், மறைஞான சம்பந்தர், உமாபதி சிவம்.*

    <> உமாபதி சிவத்தின் பரம்பரை : *பூத பரம்பரை.*

    <> உமாபதி சிவம் என்பவர் : *புறச் சந்தனாச்சாரியர் நால்வரில் ஒருவர்.*

    <> தேவ பரம்பரை என்பது : *அகச் சந்தானம்.*

    <> பூத பரம்பரை என்பது : புறச் சந்தானம்.

    <> மெய்கண்டார் அவதரித்த ஊர் : *திருப் பெண்ணாகடம்.*

    <> மெய்கண்டார் வாழ்ந்த ஊர் : *திருவெண்ணெய் நல்லூர்.*

    <> மறைஞான சம்பந்தர் அவதரித்த ஊர் : *திருப் பெண்ணாகடம்.*

    <> அருணந்தி சிவம் அவதரித்தது, வாழ்ந்தது : *திருத் துறையூர்.*

    <> உமாபதி சிவம் பிறந்து, வாழ்ந்த ஊர் : *சிதம்பரம்.*

    <> உமாபதி சிவம் சித்தி பெற்ற ஊர் : *கொற்றவன் குடி.* (சிதம்பரத்தின் கீழ் எல்லையில் இருக்கிறது.)

    *மீண்டும் சந்திக்கலாம் !*

    Sivajansikannan@gmail.com.

    ReplyDelete
  2. Mon. 15, Apl. 2024 at 3.05 pm.

    *சைவ சித்தாந்தம் :*

    ௦ * திருவாவடுதுறை ஆதீனத்தின் தோற்றக் காலம் : *14−ஆம் நூற்றாண்டு.*

    ௦ * சைவ சித்தாந்தம் மூன்று உள் பொருள்களாகக் கொள்வது : *பதி, பசு, பாசம்.*

    ௦ * பதி, பசு, பாசம் இவைகளின் தமிழ் பெயர் : *இறை, உயிர், தளை.*

    ௦ * அநாதி என்பது : *தொடக்கம் இல்லாதது அதாவது என்றும் உள்ளது.*

    ௦ * பதி, பசு, பாசம் மூன்றும் : *அநாதி.*

    ௦ * ஆதி என்பதன் பொருள் : *தொடக்கம் உள்ளது* என்று பொருள்.

    ௦ * அநாதிப் பொருட்கள் ஆறு எனக் கணக்கிட்டவர் : *உமாபதி சிவம்.*

    ௦ * ஆறு அநாதிப் பொருள்கள் : *இறை, உயிர், ஆணவம், மூல கன்மம், சுத்த மாயை, அசுத்த மாயை.*

    ௦ * சற்காரிய வாதம் என்பது : *இல்லது தோன்றாது, உள்ளது அழியாது* என்கிற கொள்கை.

    ௦ * சைவ சித்தாந்தக் கொள்கைகள், நிறுவப்பட்டுள்ள விதம் : *சற்காரியவாத அடிப்படையில்.*

    ௦ * அவ்வாறெனில், சற்காரியவாத அடிப்படையில் நிறுவப்படாத கொள்கை : அ +சற்காரிய வாதம்.(அசற்காரிய வாதம்).*

    *மீண்டும் சந்திக்கலாம் !*
    Sivajansikannan@gmail.com


    ReplyDelete