Wednesday, 28 February 2024

லீப் ஆண்டு என்றால் என்ன?:

 


லீப் ஆண்டு என்றால் என்ன?: பூமி தன்னைத்தானே சுற்றுக்கொண்டு சூரியனையும் சுற்றி வருவது நமக்குத் தெரியும். பூமி, 365 நாட்கள், 5 மணி நேரம், 48 நிமிடங்கள் மற்றும் 46 வினாடிகளில், ஒரு சுற்றுப்பாதையை நிறைவு செய்கிறது. அதாவது பூமி சூரியனை சுற்றி வர எடுத்துக் கொள்ளும் நாட்கள் 365 நாட்கள் மற்றும் 6 மணி நேரம். இதில் 365 நாட்களை நாம் ஓரு ஆண்டாக கணக்கில் எடுத்துக் கொள்கிறோம்.


Today is a very rare day: What is leap year: Detail in tamil
பூமி சூரியனை சுற்றி முடிக்க முந்நூற்றி அறுபத்தி ஐந்தே கால் நாட்கள் எடுத்துக் கொண்டாலும் நாம் ஒரு வருடத்திற்கு 365 நாட்கள் என்றே கணக்கிடுகிறோம். ஒவ்வொரு ஆண்டிலும் மீதம் இருக்கும் அந்த 6 மணிநேரம், நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை மொத்தமாக ஒரு நாளாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. நான்கு வருடங்களுக்கு ஒருமுறை, அந்த ஒரு நாள் கணக்கிடப்படும் ஆண்டு லீப் வருடம் என அழைக்கப்படுகிறது.






பிப்ரவரி 29: பிப்ரவரி மாதத்தில் வழக்கமாக 28 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், கூடுதலாக ஒரு நாள் கணக்கிடப்படும் லீப் ஆண்டில், பிப்ரவரி மாதத்தில் ஒரு நாள் கூடுதலாக சேர்க்கப்படும். இதுதான் லீப் ஆண்டு என்று அழைக்கப்படுகிறது. இந்த கணக்குப்படி ஒவ்வொரு 4 வருடங்களுக்கும் ஒரு லீப் வருடம் வரும். அந்த ஆண்டில், பிப்ரவரி மாதத்தில் 29ஆம் தேதி வரும்.

கடைசியாக, கடந்த 2020ஆம் ஆண்டு லீப் வருடமாக இருந்தது. அதன் பிறகு இந்த ஆண்டு அதாவது 2024 ஆம் ஆண்டு லீப் வருடமாக இருக்கிறது. இன்றைய நாள் பிப்ரவரி 29 2024 (வியாழக்கிழமை) இந்த ஆண்டின் கூடுதல் நாளாக உள்ளது.


லீப் ஆண்டு தோன்றியது எப்படி?: முதன் முதலில் இந்த கால் நாளை ஒரு நாளாக்கி நான்கு வருடங்களுக்கு ஒரு முறை காலண்டரில் சேர்த்தது ரோமானிய அரசர் ஜூலியஸ் சீசர். நாம் இப்போது பயன்படுத்தும் க்ரிகோரியன் காலண்டர், ஜூலியஸ் சீசர் வடிவமைத்த ஜூலியன் காலண்டரின் லீப் வருடத்தை உள்ளடக்கிய காலண்டர்தான்.

Today is a very rare day: What is leap year: Detail in tamil
ஒவ்வொரு நான்கு வருடங்களுக்கும் ஒரு லீப் ஆண்டாக கருதப்படுகிறது. இந்த ஆண்டு லீப் ஆண்டா, இந்த ஆண்டில் பிப்ரவரி மாதத்தில் 29 தேதி வருமா என்பதை கண்டறிய எளிமையான முறை உள்ளது. சரியாக நான்கால் வகுபடும் ஆண்டு லீப் வருடம் எனப்படும். உதாரணமாக 2000ஆம் ஆண்டு ஒரு லீப் ஆண்டாக இருக்கும். ஆனால், 2040ஆம் ஆண்டு லீப் ஆண்டாக இருக்கும். 2030 ஒரு லீப் ஆண்டு அல்ல.

4 வருடங்களுக்கு ஒருமுறைதான் உண்மையான பிறந்தநாளை கொண்டாட முடியும்: உலகில் சராசரியாக தினமும் சுமார் 3.5 லட்சம் குழந்தைகள் பிறக்கிறார்கள். பிப்ரவரி 29ஆம் தேதியும் இதேபோல, லட்சக்கணக்கான குழந்தைகள் பிறக்கிறார்கள். ஆனால் இந்த நாளில் பிறக்கும் அனைவரும் தங்கள் பிறந்தநாளை நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் சரியான நாளில் கொண்டாட முடியும். மற்ற ஆண்டுகளில், மார்ச் 1 அல்லது, பிப்ரவரி 28 அன்றே பிறந்தநாள் கொண்டாடுவது வழக்கமாக உள்ளது.

இந்தியாவில் மறைந்த முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் (1896), அர்ஜூனா விருது வென்ற பிரகாஷ் நஞ்சப்பா, கலாஷேத்ரா நிறுவனரும், பரதநாட்டிய கலைஞருமான ருக்மிணி தேவி (1904), ஹாக்கி வீரர் ஆடம் சிங்ளேர் (1984) ஆகியோர் பிப்ரவரி 29ஆம் தேதி லீப் வருடத்தில் பிறந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

Monday, 26 February 2024

சரியான பக்குவத்தில் சிக்கனை சாப்பிட வேண்டும்



கோழிக்கறி எடுக்குறீங்களா?கிச்சனில் சிக்கனை கழுவுறீங்களா? உடனே இதை படிங்க..இந்த 10தவறுகளை செய்யாதீங்க
குறைந்த விலையில், அதிக புரோட்டீன் நிறைந்த உணவு சிக்கன்தான்.. அத்துடன், பல்வேறு ஊட்டச்சத்துக்களும் இருக்கின்றன.. குறிப்பாக, வைட்டமின் B12 நிரம்பி உள்ளது.. இத்தனை சத்துக்களும் வீணாகாமல் நமக்கு கிடைக்க வேண்டுமானால், சிக்கனை சரியானதாக பார்த்து வாங்கி, சரியான முறையில் சுத்தம் செய்து, சரியான பக்குவத்தில் சமைத்து சாப்பிட வேண்டி உள்ளது.




கோழிக்கறி, சாம்பல் நிறத்தில் இருந்தால் அதை வாங்க கூடாது.. எப்போதுமே சிக்கனின் சதைப்பகுதி பிங் நிறத்தில் இருக்க வேண்டும்.. அதுதான், ஃபிரெஷான சிக்கன் என்று அர்த்தம். சிக்கன் வெட்டப்பட்டு, கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் வரைக்குள் ரத்த உறைவு இருந்தால் துர்நாற்றம் இர
கோழிக்கறி சமையல்: கோழிக்கறியை கழுவும்போதும், நல்ல சிக்கனா? பழைய சிக்கனா? என்று தெரிந்துவிடும்.. கழுவும்போது துர்நாற்றம் வந்தாலே, அது பழைய கோழிக்கறிதான்.. கோழிக்கறியின் மேல்புறம் பச்சை கலரிலோ அல்லது கருப்பு கலரிலோ இருந்தால், அதுவும் பழைய சிக்கன்தான். அல்லது நோய்வாய்ப்பட்ட கோழியாகவும் இருக்கலாம்.

எப்போதுமே சிக்கனை ஏற்கனவே கட் செய்து, ஃப்ரிஜ்ஜில் வைக்கப்பட்டிருந்தால் அதை வாங்க வேண்டாம்.. அந்த கோழியை எப்போது அறுத்தார்கள் என்று கண்டுபிடிக்க முடியாது..

எப்படி வாங்க வேண்டும்: சூப்பர் மார்க்கெட்டுகளில் பேக் செய்யப்பட்ட சிக்கனையும் தவிர்க்கலாம்.. அப்படியே வாங்குவதாக இருந்தாலும், அந்த பாக்கெட்டில் உள்ள தேதியை கவனிக்க வேண்டும். அந்த பேக்கிங்கை பிரிக்கும்போது, அந்த கவரின் அடியில் தண்ணீர் வடிந்திருக்கிறதா? என்று பார்க்கவேண்டும்.. தண்ணீர் வடிந்து, கவரின் அடியில் தேங்கி கிடந்தால் அது பழைய சிக்கன்..


கோழிக்கறியைவிட, அதன் எலும்புகளிலும் சத்து உள்ளது என்பதால், போன்லெஸ் சிக்கன் என்பதை தவிர்த்து, எலும்புடன், தோலுடன் கேட்டு வாங்க வேண்டும். கோழிக்கறியின் ஈரப்பதத்தை தக்கவைத்து, கோழியை வெளியில் மிருதுவாகவும் உள்ளே மென்மையாகவும் மாற்றுவதற்கு தோல்கள் உதவுகின்றன.

பாக்டீரியாக்கள்: அதேபோல, கோழிக்கறியில் காம்பிலோபாக்டர் campylobacter, மற்றும் சால்மொனெல்லா (salmonella) போன்ற பாக்டீரியாக்கள் இருக்கும். எனவே, கோழிக்கறியை வாங்கி வந்துமே தண்ணீரில் ஊறவைக்ககூடாது. காரணம், தண்ணீர் பட்டதுமே, சிக்கனுக்குள்ளிருக்கும் இந்த கிருமிகள் மேலே அதிகமாக வர துவங்கிவிடுமாம்.


அதேபோல, சமையலறையில் வைத்து சிக்கனை கழுவக்கூடாது. இதனால், இந்த கிருமிகள் சிங்க் தொட்டிகளிலும், கிச்சன் வைத்திருக்கும் பொருட்களிலும், நம்முடைய டிரஸ்களிலும் பரவுமாம். மற்ற உணவு பொருட்களில் படிந்து, அதை நாம் சாப்பிட நேரிடும்போது உபாதைகள் அதிகரித்துவிடும்.


அதனால், வீட்டு பால்கனியிலோ அல்லது வீட்டுக்கு வெளியே வைத்துதான் கோழிக்கறியை கழுவ வேண்டும். சிக்கனை வாங்கி வந்ததுமே அதைக் கழுவக் கூடாது என்றும், தண்ணீரில் ஊற வைக்கக்கூடாது என்றும் சுகாதார அமைப்பே எச்சரிக்கிறது.

சிக்கன் : அதேபோல, சமைக்கும்போது, மஞ்சள் தூளை சேர்க்காமல், கோழிக்கறியை கழுவும்போதே மஞ்சள் தூளை தேய்த்து கழுவ வேண்டுமாம். குர்குமீன் என்ற பொருள் மஞ்சளில் உள்ளதால், சிக்கனில் உள்ள கிருமிகளை இது முழுவதுமாக அழித்துவிடும். அந்தவகையில் கிருமிநாசினி போல மஞ்சளை பயன்படுத்த வேண்டும்.

கோழிக்கறியை கழுவியதுமே சமைத்துவிடக்கூடாது. இஞ்சி பூண்டு பேஸ்ட், தயிர், எலுமிச்சம் சாறு, கல் உப்பு சிறிது சேர்த்து அரை மணி நேரமாவது ஊறவைக்க வேண்டும். சிக்கன் 65 செய்வதற்கு இந்த முறையைதான் நாம் பயன்படுத்துகிறோம் என்றாலும், கோழிவறுவல், கோழி குழம்பு, கிரேவி செய்வதற்கும் இதே முறையை தான் கடைப்பிடிக்க வேண்டும். இதனால் குழம்பின் ருசியும் அதிகரிக்கும்.


கோழிக்கறி: அதேசமயம், எலுமிச்சை சாறு அல்லது வினிகர் மட்டுமே பயன்படுத்தி கழுவுவதால், பேக்டீரியாக்கள் கொல்லப்படுவதில்லையாம்.. சிலசமயம், மாமிசம் கெட்டு போகும் வாய்ப்புகளும் அதிகமாம்.

எனவே, மஞ்சள் தூள் சேர்த்து கழுவி முடித்ததும், குறைந்த வெப்ப அளவிலான கொதி நீரில் சிக்கனை போட்டு சிக்கனை அலசி சுத்தம் செய்தால், வெப்ப நீரிலும் கிருமிகள் அழிந்து விடும்.. தேவைப்பட்டால், இந்த சுடுநீரில் எலுமிச்சம் சாறு அல்லது வினிகர் கலந்து கொள்ளலாம்.

சத்துக்கள்: அதேபோல, ஃபிரஷ் கோழிக்கறி வேக வெறும் 20 நிமிடங்களே போதுமாம். அதற்கு மேல் கொதிக்கவிடக்கூடாது என்கிறார்கள்.


கோழிக்கறியை வேகவிடும்போது, மூடிபோட்டு வேகவிட வேண்டும்.. இதனால், கோழித்தோல் இறைச்சியின் ஈரப்பதத்தை தக்கவைத்து, கோழியை வெளியில் மிருதுவாகவும் உள்ளே மென்மையாகவும் மாற்றும்.குறைந்த விலையில், அதிக புரோட்டீன் நிறைந்த உணவு சிக்கன்தான் என்பதால், இந்த சத்துக்களை எளிதில் வீணாக்க வேண்டாம்.


Saturday, 24 February 2024

புதுத்துணி வாங்க...

இந்த கிழமையில் புதுத்துணி வாங்குனா பணமும், அதிர்ஷ்டமும் கொட்டுமாம்... எந்த நாளில் வாங்கக்கூடாது தெரியுமா? ஒருவர் அணியும் ஆடை அவர்களின் அடையாளத்தின் முக்கியப் பகுதியாக இருக்கிறது. இந்த சூழ்நிலையில், மக்கள் சமூகத்தில் தங்கள் அடையாளத்தை உருவாக்க அழகிய மற்றும் நேர்த்தியான ஆடைகளை அணிய முயற்சி செய்கிறார்கள். ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒவ்வொரு நபரும் ஆடைகளை வாங்கும் போது அல்லது அணியும் போது சில முக்கியமான விதிகளை மனதில் கொள்ள வேண்டும். உதாரணமாக, எந்த நாளில் புதிய துணி வாங்க வேண்டும், எந்த நிறத்தில் வாங்க வேண்டும் .புதிய துணியை வாங்கிய பின் அதை அணிவதற்கும் ஜோதிடத்தில் சில விதிகள் கூறப்பட்டுள்ளன . உங்கள் அதிர்ஷ்டத்தை அதிகரிக்க ஆடைகள் தொடர்பான ஜோதிடம் கூறும் முக்கிய விதிகளை இந்த பதிவில் பார்க்கலாம். எந்த நாளில் புதிய ஆடை வாங்க வேண்டும்? ஜோதிட சாஸ்திரத்தின் படி, வெள்ளிக்கிழமை புதிய ஆடைகள் வாங்க மிகவும் உகந்த நாளாக கருதப்படுகிறது. வெள்ளிக் கிழமைகளில் வாங்கும் ஆடைகள் அதிகப் பணத்தையும், அதிர்ஷ்டத்தையும் கொண்டுவருவதாகவும் நம்பப்படுகிறது. அதேபோல், சனிக்கிழமை புதிய ஆடைகள் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும், ஏனெனில் இது துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும். எந்த நாளில் புதிய ஆடைகளை அணிய வேண்டும்? ஜோதிட சாஸ்திரத்தில், புது ஆடைகள் வாங்கும் நாள் பற்றி எப்படி விவரிக்கப்பட்டுள்ளதோ, அதே போல் அதை அணியக் கூடிய நாள் பற்றியும் அணியக் கூடாத நாள் பற்றியும் விளக்கப்பட்டுள்ளது. அதன்படி திங்கள், புதன் மற்றும் வியாழன் ஆகிய நாட்கள் புதிய ஆடைகள் அணிவதற்கு மிகவும் உகந்த நாட்களாகக் கருதப்படுகிறது. தோல் இன்று இந்த ராசிக்காரர்களின் கோபமே அவர்களின் வேலையைக் கெடுக்கலாம். எந்த நாளில் புதிய ஆடைகளை அணியக்கூடாது? செவ்வாய் கிழமை மறந்தும் புதிய ஆடைகளை அணியக்கூடாது. செவ்வாய்கிழமையன்று புதிய ஆடைகளை அணிவதன் மூலம் கோபம் மற்றும் பதற்றம் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. செவ்வாய்கிழமைப் போலவே சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் புதிய ஆடைகளை அணிவதைத் தவிர்க்க வேண்டும். எப்போது மீண்டும் அணியலாம்? ஞாயிறு, செவ்வாய், சனி ஆகிய நாட்களில் புது ஆடைகளை அணிந்து கொண்டு எங்காவது செல்ல வேண்டும் என்றால், இதற்காக திங்கள், புதன் அல்லது வியாழன் ஆகிய நாட்களில் புது ஆடையை ஒருமுறை அணிந்து, பிறகு நீங்கள் விரும்பும் நாளில் அணியுங்கள். உங்க ராசி என்ன? எப்படிப்பட்ட ஆடையை அணியக்கூடாது? ஜோதிட சாஸ்திரப்படி கிழிந்த அல்லது எரிந்த ஆடைகளை அணியக்கூடாது. ஜோதிடத்தின் படி, கிழிந்த ஆடைகளில் ராகுவின் அசுப பலன்கள் உள்ளன. அத்தகைய சூழ்நிலையில், கிழிந்த அல்லது எரிந்த ஆடைகளை வீட்டில் வைக்கக்கூடாது. துவைக்காமல் அணியக்கூடாது ஜோதிட சாஸ்திரத்தின்படி, செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவியின் ஆசீர்வாதத்தைப் பெற விரும்பினால், அழுக்கு அல்லது ஒரு முறை பயன்படுத்திய ஆடைகளை மீண்டும் துவைக்காமல் அணிய மறக்காதீர்கள். எந்த ஆடைகளை ஒன்றாக அணியக்கூடாது? ஜோதிட சாஸ்திரத்தின்படி, எப்போதும் சுத்தமான ஆடைகளை அணிய வேண்டும். காலையில் எழுந்து குளித்து, தியானம் செய்த பின் இரவில் உடுத்திய ஆடைகளை மறந்த பிறகும் அணியக்கூடாது. அதேபோல, ஒருபோதும் பயன்படுத்திய ஆடைகளை புதிய ஆடைகளுடன் சேர்த்து அணியக்கூடாது.

Wednesday, 21 February 2024

வெற்றிலைகள்


வெற்றிலைகள். அதென்ன வெற்றிலை ரசம்??


மிகக்குறைந்த கொழுப்பு மற்றும் மிதமான புரோட்டீனை கொண்டதுதான், இந்த வெற்றிலை.. தயாமின், நியாசின், ரிபோஃப்ளேவின், கரோட்டின், கால்சியம், அயோடின், பொட்டாசியம், வைட்டமின் A, B1, B2, நிகோடினிக் அமிலம் போன்ற ஏகப்பட்ட ஊட்டச்சத்துக்களும் வெற்றிலையில் நிரம்பியிருக்கின்றன.


Do you know the Excellent Health Uses of Betel Leaves and Betel Leaf Rasam is the Best for Severe Cold, cough
உடலுக்கு வெப்பத்தையும், எதிர்ப்பு சக்தியையும் தரக்கூடியது மூளை, இதயம், கல்லீரல், மண்ணீரல் ஆகியவற்றை பலப்படுத்தி ஆரோக்கியத்தை தரக்கூடியது.... நரம்பு மண்டலத்துக்கு பலம் கொடுக்கக்கூடியது என்பதால், வளரும் குழந்தைகளுக்கு வெற்றிலை சாறு தரலாம். இதனால், அவர்களின் ஞாபக சக்தியை அதிகரிக்கும்...

தாய்ப்பால்: மிகச்சிறந்த தாய்ப்பால் சுரப்பியாக திகழ்கின்றன.. ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதால் நீரிழிவு பிரச்னைக்கு தீர்வாகிறது. .





வெற்றிலை ஒரு சிறந்த வலி நிவாரணியும்கூட.. நமது உடலில் வெட்டுக்கள், சிராய்ப்புகள், தடிப்புகள் ஏற்பட்டால், அந்த வலிகளை போக்க இந்த வெற்றிலையை பயன்படுத்தலாம்... இதை அளவோடு சாப்பிட்டுவந்தால் ஆண்மை குறைபாட்டையும் நீக்கிவிடலாம். இந்த வெற்றிலையை வெறுமனே மென்று சாப்பிட்டாலே, வயாகராவுக்கு இணையான சக்தி கிடைக்கிறதாம்.

உடல் எடை: நார்ச்சத்து அதிகமுள்ள வெற்றிலையில், மிளகு சேர்த்து சாப்பிட்டால், உடல் எடை குறைய துவங்குமாம்.. காரணம், மிளகிலுள்ள ஃபைட்டோ நியூட்ரியண்ட்டுகள், பெப்பரின் போன்றவை சேர்வதால், உடலிலுள்ள கொழுப்பை உடைக்க எளிதாக உதவுகின்றன..

Do you know the Excellent Health Uses of Betel Leaves and Betel Leaf Rasam is the Best for Severe Cold, cough
மேலும், மிளகில் உள்ள பெப்பரைன் செரிமானத்திற்கும் சிறப்பாக உதவுகிறது.. வெற்றிலை + மிளகு சேர்ந்து, வாயு தொந்தரவு, செரிமானமின்மை, வாய்நாற்றம், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், அசிடிட்டிகள், நச்சுக்கள், கழிவுகளை நீக்கி, குடல் ஆரோக்கியத்தை சீராக்குகிறது. பெண்களுக்கு வயிறு மற்றும் இடுப்புப் பகுதியில் சேரும் மிகுதியான கொழுப்புகளும் கரைய துவங்கும்..


சுவாச கோளாறு: இத்தனை பலன்களை தந்தாலும், நுரையீரலின் நண்பனாக வெற்றிலை திகழ்கிறது.. வெற்றிலையில் உள்ள ஆன்டிபயாடிக் பண்புகள் இருமல் மற்றும் சளி ஆகியவற்றைப் போக்க உதவுகிறது. ஒரு வெற்றிலையினுள் ஐந்தாறு துளசி இலைகளை வைத்து சிறிது கசக்கிப்பிழிந்து, அந்த சாற்றினை குழந்தைகளுக்கு கொடுத்தால் சளி, இருமல் குணமாகும். செரிமான ஆரோக்கியத்தை அதிகப்படுத்துகிறது..

அளவுக்கு சளி, இருமல் பாதிப்பு இருந்தால், வெற்றிலையில் ரசம் வைத்து குடிக்கலாம்.. இதற்கு, மிளகு, சீரகம் இரண்டையும் கொரகொரப்பாக இடித்து கொள்ள வேண்டும். பூண்டு, இஞ்சி இடித்துக் கொள்ள வேண்டும். சிறிது புளியை கரைத்து, அதில், தக்காளி, உப்பு சேர்த்து கரைத்து கொள்ள வேண்டும்,.


ரசம் ரெடி: ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், அரைத்த மிளகு சீரகம், இஞ்சி பூண்டு, பெருங்காயத்தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்க வேண்டும். இப்போது, புளிக்கரைசலுடன், சிறு சிறு துண்டுகளாக்கிய வெற்றிலைகளையும், அதனுடன் கொத்தமல்லி இலையையும் சேர்க்க வேண்டும்.

நுரை வரும்நேரத்தில், அடுப்பை அணைத்துவிட்டால், வெற்றிலை ரசம் ரெடி. சளி, இருமல், காய்ச்சல், தலைசுற்றல், தொண்டை வலி, தலையில் நீர்க்கோர்த்தல் போன்ற பிரச்சனைகளுக்கு இந்த வெற்றிலை ரசம் நிவாரணத்தை தரும்.


சூலம்

 பஞ்சாங்கத்திலும் காலண்டரிலும் சூலம் என்று குறிப்பிட்டிருப்பார்கள். எந்த நாளில் என்ன திசையில் பயணிக்கலாம் என்றும் பஞ்சாங்கத்தில் சொல்லப்பட்டுள்ளது. சூலம் என்று குறிப்பிடப்பட்ட திசையில் திசையில் பயணம் செய்தே ஆகவேண்டும் என்றால் அதற்கான பரிகாரத்தையும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
சூலம் என்றால் என்ன
2/6
சூலம் என்றால் என்ன: சூடு அதிகமாக இருக்கும் திசை சூலம் என்று குறிப்பிட்டிருக்கும். அந்த திசையில் பயணிக்க வேண்டாம் என்று நமது முன்னோர்கள் கூறியுள்ளனர். சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய உண்மைக் கோள்கள் ஏழினையும் வார நாட்களாக ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன்,வியாழன், வெள்ளி, சனி என நாம் பெயர் வைத்திருக்கிறோம்.
எந்த திசை சூலம்
3/6
எந்த திசை சூலம்: ஒவ்வொரு கோளிற்கும் உரிய திசைக்கு எதிர்திசையை அந்த நாளுக்குரிய சூலம் காட்டும் திசையாக இருக்கும். சூரியன், சுக்கிரனின் திசை கிழக்கு என்பதால் ஞாயிறு, வெள்ளிக்கிழமைகளில் அன்று மேற்கே சூலம் என்றும், சந்திரன், சனி ஆகியோரின் திசை மேற்கு என்பதால் திங்கள் மற்றும் சனிக்கிழமைகளில் கிழக்கே சூலம் என்றும் பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
யாருக்கு சூலம் அவசியம்
4/6
யாருக்கு சூலம் அவசியம்: கர்ப்பிணி பெண்கள் பிரயாணம் செய்யும்போது அவசியம் சூலத்தைக் கணக்கில் கொள்ள வேண்டும். சூடு அதிகமாக இருக்கும் திசையில் பயணிக்கும்போது வயிற்றில் உள்ள குழந்தைக்கும், அந்தக் குழந்தையை சுமக்கும் தாய்க்கும் உடல்நலம் பாதிக்கப்படக் கூடாது என்பதனால் சூலம் பார்த்து பயணம் செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கின்றனர்.
பரிகாரம்
5/6
பரிகாரம்: தாய், சேய் நலம் பாதிக்கக் கூடாது என்ற எண்ணத்தில் சூலம் என்று குறிப்பிட்டிருக்கும் திசையில் பயணம் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தினார்கள். இதற்குப் பரிகாரமாக அன்றைய தினம் பகல்12 மணிக்கு மேல் பால் அல்லது தயிர் சாப்பிட்டுவிட்டு பயணிக்கலாம் சொல்லப்பட்டுள்ளது.
சூலம் யார் பார்க்க தேவையில்லை
6/6
சூலம் யார் பார்க்க தேவையில்லை: வேலை விசயமாக தினசரி பயணம் செல்பவர்கள் சூலம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. சூலம் குறிப்பிட்டுள்ள திசையில் பயணம் செய்ய வேண்டும் என்றால், கிழக்கு திசைக்கு தயிர், மேற்கிற்கு வெல்லம், வடக்கிற்கு பசும்பால், தெற்கிற்கு நல்லெண்ணெய் சேர்த்த ஏதேனும் ஒரு உணவு சாப்பிட்டு விட்டு கிளம்பலாம் என்ற விதி விலக்கும் இருக்கிறது.

Tuesday, 13 February 2024

பிரதோஷம் சோமசூத்ர பிரதட்சணம் சிறப்புகள்

-பிரதோஷம் சோமசூத்ர பிரதட்சணம் சிறப்புகள்
Sani Pradosham: சிவ வழிபாட்டில் மிக முக்கியமானதாக பார்க்கப்படுவது சிவராத்திரி, பிரதோஷம். அர்த்தநாரி பிரதோஷம், சனி மஹா பிரதோஷம் என்பது என்ன -பிரதோஷத்தின் போது சோமசூத்ர பிரதட்சணம் செய்வது எப்படி பார்ப்போம்...

சோமசூத்ர பிரதட்சணம்
நந்தி பகவானையும், சிவ பெருமானையும் வழிபட மிக விசேஷமான நாளாக பார்க்கப்படுகிறது பிரதோஷம். ஒவ்வொரு மாதத்திலும் வரும் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் வரக்கூடிய திரியோதசி திதியில் பிரதோஷம் கடைபிடிக்கப்படுகிறது. அந்த நாளில் மாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் நந்தி பகவானுக்கும், சிவனுக்கும் அபிஷேக ஆராதனை நடக்கும். இந்த நேரத்தை பிரதோஷ காலமாக கடைப்பிடிக்கப்படுகிறது.


பிரதோஷ நேரத்தைல் நாம் சோமசூத்ர பிரதட்சணம் செய்தால் அநேக அசுவமேத யாகம் செய்த பலன் கிட்டும் என்பது முன்னோர் வாக்கு.



செல்வத்தை ஈர்க்கும் சூச்சம புதன்கிழமை பிரதோஷம்



பிரதோஷ சோமசூத்ர பிரதட்சணம் செய்வது எப்படி?
முதலில் சிவன் கோயிலில் வெளியில் உள்ள நந்தி பகவானை வணங்கி நேராக உள்ளே சென்று சிவ பெருமானுக்கு இடப்புறமாக (Anti Clockwise) இருக்கும் சண்டிகேஸ்வரரை வணங்க வேண்டும். பின்னர் அதே வழியாக திரும்ப வந்து (Clockwise), இறைவனுக்கு அபிஷேகம் செய்யும் போது அபிஷேக தீர்த்தம் வெளியேறக்கூடிய சோமசூத்ரம் எனும் கோமுகி வரை வந்து வணங்கி மீண்டும், வந்த வழியே சண்டிகேஸ்வரர் சன்னதி வரை வந்து வணங்க வேண்டும். மீண்டும் சோமசூத்ரம் வரை சென்று வணங்கி விட்டு, மீண்டும் சண்டிகேஸ்வரரை தரிசித்துவிட்டு, சிவபெருமானை நந்தியின் கொம்புகளுக்கு இடையே பார்த்து தரிசனம் செய்ய வேண்டும்.

இப்படி மூன்று, ஐந்து, 11 என ப்ரதட்ஷிணம் செய்து சிவபெருமானையும், நந்தியையும் வழிபட்டு வந்தால் நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும். உங்களுக்கு இறைவனின் அரு. ஆயிரம் மடங்கு அதிகமாக கிடைக்கும்.

பிரதோஷத்தின் போது சிவன் கோயிலில் எப்படி வலம் வந்து வணங்க வேண்டும்... முழுவிபரம் இதோ



பிரதோஷ காலம் தீங்கு விளைவிக்கும் நேரமா?
பிரதோஷம் என்பது வட மொழியில் தீங்கு விளைவிக்கக்கூடிய நேரம் என்று பொருள்.
இந்த தீங்கு விளைவிக்கக்கூடிய நேரத்தில் தான் சிவபெருமான், பிரபஞ்ச உயிர்களை காக்கும் பொருட்டு விஷம் அருந்தி நீலகண்டன் ஆனார். இதனால் இந்த நேரத்தில் நாம் சிவனை வழிபடுவதால் நம் பிரச்னைகள் தீர்ந்து நல் வழி பிறக்கும்.

பிரதோஷ தினத்தில் பாட வேண்டிய, உச்சரிக்க வேண்டிய மந்திரங்கள்... பாடி பரவசமடையுங்கள்

சனி மஹா பிரதோஷம்
சனிக்கிழமைகளில் பிரதோஷம் அமைவது மிக விசேஷமாக பார்க்கப்படுகிறது. அன்றைய தினம் சனி மகா பிரதோஷம் என அழைக்கப்படுகிறது. சனி பிரதோஷ தினத்தில் ஐந்து வருடம் சிவாலயத்திற்கு சென்று வழிபட்டு வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

அர்த்தநாரி பிரதோஷம் :
மிகவும் சிறப்பு வாய்ந்த சனி பிரதோஷங்கள் அடுத்தடுத்து இரண்டு முறை அனுசரித்தால் அர்த்தநாரி பிரதோஷம் என்று பெயர்.

அதாவது சிவனும், சக்தியும் இரண்டறக்கலந்து அர்த்தநாரீஸ்வரராக இருப்பதால், இந்த இரண்டு பிரதோஷங்களில் வழிபட பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவர். மேலும் திருமண கூடுவருவதில்ல் இருந்த தடைகள் விலகி, விரைவாக திருமணம் கை கூடும். முன்பு கை விட்டுப் போன, இழந்த செல்வங்கள் வந்து சேரும்.
 

Tuesday, 6 February 2024

ராசி Vs ரோஜாப்பூ

ஜோதிடத்தின் படி, காதலன் காதலிக்கு ராசிப்படி ரோஜாப்பூக்களைக் கொடுத்தால், அது அந்த காதலர்களுக்கு இடையே அன்பையும், பிணைப்பையும் அதிகரித்து, காதலில் வெற்றி காணச் செய்யும். உங்களுக்கு ஜோதிடத்தில் நம்பிக்கை இருந்தால் மற்றும் உங்கள் காதல் வெற்றி அடைய விரும்பினால், உங்கள் காதலியின் ராசிக்கேற்ற நிற ரோஜாப்பூக்களைக் கொடுங்கள். இப்போது எந்த ராசிக்காரர்களுக்கு எந்த நிற ரோஜாவை கொடுக்க வேண்டும் என்பதைக் காண்போம்

மேஷம் மற்றும் விருச்சிகம்
மேஷம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்களின் அதிபதி செவ்வாய். இந்த ராசியை சேர்ந்தவர்களுக்கு சிவப்பு நிற ரோஜாப்பூக்கள் என்றால் ரொம்ப பிடிக்கும். ஏனெனில் செவ்வாய்க்கு உரிய நிறம் சிவப்பு. எனவே இந்த ராசிக்காரர்களுக்கு சிவப்பு நிற ரோஜாப்பூக்களைக் கொடுத்தால், அது வாழ்வில் அன்பை பராமரிக்கும். ஒருவேளை நீங்கள் இந்த ராசிக்காரர்களிடம் காதலை முன்மொழிய நினைத்தால், சிவப்பு நிற ரோஜாப்பூக்களைக் கொடுத்தால், நேர்மறையான பதிலைப் பெறலாம்.
ரிஷபம் மற்றும் துலாம்
துலாம் மற்றும் ரிஷப ராசிக்காரர்களின் அதிபதி சுக்கிரன். இந்த சுக்கிரன் காதல் மற்றும் ஈர்ப்பு ஆகியவற்றின் காரணியாவார். எனவே இந்த ராசியைச் சேர்ந்தவர்கள் இயற்கையாகவே அதிக காதலுணர்வைக் கொண்டிருப்பார்கள். இந்த ராசிக்காரர்களிடம் காதலை முன்மொழிய நினைத்தால், அவர்களுக்கு பிங்க் நிற ரோஜாப்பூக்களைக் கொடுக்கலாம்.
மிதுனம் மற்றும் கன்னி

கன்னி மற்றும் மிதுன ராசிக்காரர்களின் அதிபதி புதன். இந்த ராசியை சேர்ந்தவர்களிடம் காதலை தெரிவிக்க நினைத்தால், பச்சை நிற ரோஜாப்பூக்களைக் கொடுத்து தெரிவியுங்கள். இதனால் அவர்களின் அன்பு வாழ்நாள் முழுவதும் கிடைப்பதோடு, வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் இருக்கும். கடகம் கடக ராசியின் அதிபதி சந்திரன். இந்த சந்திரனுக்கு உரிய நிறம் வெள்ளை. எனவே இந்த கடக ராசியைச் சேர்ந்தவர்களுக்கு வெள்ளை நிற ரோஜாவை கொடுத்து, காதலை முன்மொழிந்தால், நேர்மறையான பதிலைப் பெறலாம். வெள்ளை ரோஜாக்கள் நித்திய அன்பையும் இதயத்தின் உண்மையையும் குறிக்கின்றன.
சிம்மம்
சிம்ம ராசியின் அதிபதி சூரியன். ஆகவே சிம்ம ராசியைச் சேர்ந்தவர்களிடம் காதலை முன்மொழிய நினைத்தால், அவர்களுக்கு லாவெண்டர் நிற ரோஜாப் பூக்களைக் கொடுத்து காதலை வெளிப்படுத்துங்கள். இதனால் சிம்ம ராசிக்காரர்களை மகிழ்வித்து, அவர்களின் அன்பைப் பெறலாம். ஒவ்வொரு நிற
தனுசு மற்றும் மீனம்

தனுசு மற்றும் மீன ராசிக்காரர்களின் அதிபதி குரு பகவான். இந்த குரு பகவானுக்கு உரிய நிறம் மஞ்சள். ஆகவே இவ்விரு ராசிக்காரர்களிடம் காதலை வெளிப்படுத்த நினைத்தால், மஞ்சள் நிற ரோஜாப் பூக்களைக் கொடுத்து வெளிப்படுத்துங்கள். மஞ்சள் நிறமானது மகிழ்ச்சி மற்றும் நட்பின் சின்னம். எனவே இந்த நிற ரோஜாப்பூக்களைக் கொடுப்பதால் அன்பு அதிகரிக்கும் மற்றும் நேர்மறையான பதிலையும் பெற வாய்ப்புள்ளது.

மகரம் மற்றும் கும்பம்

மகரம் மற்றும் கும்ப ராசிக்காரர்களின் அதிபதி சனி பகவான். இந்த ராசிக்காரர்களுக்கு சிவப்பு நிற ரோஜாப்பூக்களைக் கொடுத்தால், அது அன்பில் ஆழத்தைக் கொண்டு வரும். மேலும் சிவப்பு நிற ரோஜாவை இந்த ராசிக்காரர்களுக்கு கொடுப்பது மிகவும் நல்லது.

Monday, 5 February 2024

கிருஷ்ணருக்கும் ருக்மணிக்கும் பிறந்த பிரத்யும்னன் கதை

 கிருஷ்ணருக்கும் ருக்மணிக்கும் பிறந்த பிரத்யும்னன் கதை

கதா காலட்சேபம் செய்பவர்கள் கிருஷ்ணர் ருக்மணி கல்யாணத்துடன் நிறைவு செய்வார்கள் .திருமணம் எவ்வாறு நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு அவர்களுக்கு வம்சவிருத்தி எவ்வாறு உண்டானது என்பதைப் பற்றி சற்று விரிவாக விளக்கமாக பார்ப்போம!??

விதர்ப்ப தேசத்தை பீஷ்மகன் என்பவன் ஆட்சி செய்து வந்தான் .அவனுக்கு ருக்மி என்ற மகனும் ருக்மணி என்ற மகளும் இருந்தனர்.ருக்மணியும் கிருஷ்ணரும் காதல் கொண்டனர் .ஆனால் இது ருக்மணியின் சகோதரன் ருக்மிக்கு பிடிக்காத காரணத்தால் தன் தங்கையை சிசுபாலனுக்கு திருமணம் செய்ய முடிவெடுத்து தந்தையிடமும் சம்மதம் வாங்கி விட்டார். மேலும் எல்லா நாட்டிற்கும் திருமண ஓலை அனுப்பினான் .ஜராசந்தன் பவுண்டரகன் முதலியோரையும் அழைத்தான். ஆனால் திருமணத்தன்று கிருஷ்ணர் ருக்மணியை கவர்ந்து சென்றார்.வழியில் ருக்மி அவருடன் போரிட ருக்மியை வீழ்த்தி கிருஷ்ணன் துவாரகை சென்று ருக்மணியை திருமணம் செய்து கொண்டார் .இது வரை அனைவரும் அறிந்ததே இனி.

சிறிது காலத்தில் மன்மதனை ஒத்த அழகுடன் ஒரு மகனைப் பெற்றெடுத்தாள் ருக்மணி. அவனுக்கு பிரத்யும்னன் என்று பெயரிட்டனர். அக்காலத்தில் சம்பாசுரன் என்னும் ஒரு அசுரன் இருந்தான். அவனுக்கு கிருஷ்ணருக்கும் ருக்மணிக்கும் பிறக்கும் மகனால் தான் சாவு என்று ஒரு வரம் உள்ளதை அறிந்து ருக்மணிக்கு பிறந்த பிரத்யும்னனை மாய வடிவில் துவாரகைக்குச் சென்று யாரும் அறியாமல் ஆறே நாளான பிறந்த சிசுவை தூக்கி வந்து கடலில் எறிந்து விட்டு ஓடிவிட்டான். கடலில் எறிந்த பிரத்யும்னனை மீனொன்று விழுங்கியது.

அவர்கள் வலையில் சிக்கியது. அவர்கள் அந்த மீனை சம்பராசுரன் அரண்மனைக்கு சாப்பாட்டுக்காக கொண்டுவந்தனர். அப்போது அங்கு சமையல் வேலையில் ஈடுபட்ட மாயாவதி என்ற பெண் ஒவ்வொரு மீனாக நறுக்கும் பொழுது ஒரு மீனின் வயிற்றில் அங்கும் இங்கும் அசையவே அதை பக்குவமாக அறுத்து அதற்குள் உயிரோடு இருக்கும் பிரத்யும்னனை கண்டு ஆச்சரியப் பட்டாள்.

குழந்தை எவ்வாறு மீனின் வயிற்றுக்குள் வந்தது என்று அவள் ஆச்சரியப் பட்டுக் கொண்டிருக்கும் பொழுது நாரத மகரிஷி அவள் முன் தோன்றி இந்த குழந்தை கிருஷ்ணரின் குழந்தை .இவனுக்கு பிரத்யும்னன் என்று பெயர். சம்பாசுரனுக்கு எமனாக இவன் வந்திருக்கிறான். ஆகவே இவனை பத்திரமாக வளர்த்து வா என்று கூறி விட்டு மறைந்தார்.

மாயாவதியும் நாரதர் கூறியதைக் கேட்ட திலிருந்து பிரத்யும்னனை கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்தாள் .ஒரு நாள்  பிரத்யும்னன் பருவ வயதை அடைந்தவுடன் அவனிடம் பிரத்யும்னா நீ கிருஷ்ணரின் பிள்ளை. உன் தாயார் ருக்மணி. இருவரும் துவாரகையில் இருக்கிறார்கள் என்ற உண்மையை எடுத்துச் சொன்னாள்.உடனே தன்னை பெற்றோரிடமிருந்து பிரித்த சம்பாசுரன் மேல் ஆத்திரம் கொண்டு அவனுடன் போர் புரிந்து அவனைக் கொன்றான்.

வெற்றியுடன் திரும்பிய பிரதயும்னன் தன்னை வளர்த்த மாயாவதியை அழைத்துக் கொண்டு ஆகாயமார்க்கமாக துவாரகையை அடைந்தார். துவாரகையில் கிருஷ்ணரின் சாயலில் இருந்த பிரத்யும்னனைக் கண்டதும் யாதவர்கள் கிருஷ்ணர் என்றே எண்ணி மகிழ்ந்தனர்.

ருக்மணிக்கு அவனைக் கண்டதும் தாய்மை உணர்வு பொங்கியது .நாரதரும் கிருஷ்ணரை அழைத்துக் கொண்டு துவாரகை வந்து சேர்ந்தார் .நீண்ட நாட்களாக காணாமல் போன தன் பிள்ளை திரும்ப கிடைத்ததை எண்ணி ருக்மணி எல்லையில்லா மகிழ்ச்சி கொண்டாள்.

இதுவே திருமணத்திற்குப் பிறகு அவர்கள் வம்சவிருத்தி ஆகி பிரத்தியும்னன் பிறந்து வளர்ந்த வரை உள்ள கதை .