லீப் ஆண்டு என்றால் என்ன?: பூமி தன்னைத்தானே சுற்றுக்கொண்டு சூரியனையும் சுற்றி வருவது நமக்குத் தெரியும். பூமி, 365 நாட்கள், 5 மணி நேரம், 48 நிமிடங்கள் மற்றும் 46 வினாடிகளில், ஒரு சுற்றுப்பாதையை நிறைவு செய்கிறது. அதாவது பூமி சூரியனை சுற்றி வர எடுத்துக் கொள்ளும் நாட்கள் 365 நாட்கள் மற்றும் 6 மணி நேரம். இதில் 365 நாட்களை நாம் ஓரு ஆண்டாக கணக்கில் எடுத்துக் கொள்கிறோம்.
Today is a very rare day: What is leap year: Detail in tamil
பூமி சூரியனை சுற்றி முடிக்க முந்நூற்றி அறுபத்தி ஐந்தே கால் நாட்கள் எடுத்துக் கொண்டாலும் நாம் ஒரு வருடத்திற்கு 365 நாட்கள் என்றே கணக்கிடுகிறோம். ஒவ்வொரு ஆண்டிலும் மீதம் இருக்கும் அந்த 6 மணிநேரம், நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை மொத்தமாக ஒரு நாளாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. நான்கு வருடங்களுக்கு ஒருமுறை, அந்த ஒரு நாள் கணக்கிடப்படும் ஆண்டு லீப் வருடம் என அழைக்கப்படுகிறது.
பிப்ரவரி 29: பிப்ரவரி மாதத்தில் வழக்கமாக 28 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், கூடுதலாக ஒரு நாள் கணக்கிடப்படும் லீப் ஆண்டில், பிப்ரவரி மாதத்தில் ஒரு நாள் கூடுதலாக சேர்க்கப்படும். இதுதான் லீப் ஆண்டு என்று அழைக்கப்படுகிறது. இந்த கணக்குப்படி ஒவ்வொரு 4 வருடங்களுக்கும் ஒரு லீப் வருடம் வரும். அந்த ஆண்டில், பிப்ரவரி மாதத்தில் 29ஆம் தேதி வரும்.
கடைசியாக, கடந்த 2020ஆம் ஆண்டு லீப் வருடமாக இருந்தது. அதன் பிறகு இந்த ஆண்டு அதாவது 2024 ஆம் ஆண்டு லீப் வருடமாக இருக்கிறது. இன்றைய நாள் பிப்ரவரி 29 2024 (வியாழக்கிழமை) இந்த ஆண்டின் கூடுதல் நாளாக உள்ளது.
லீப் ஆண்டு தோன்றியது எப்படி?: முதன் முதலில் இந்த கால் நாளை ஒரு நாளாக்கி நான்கு வருடங்களுக்கு ஒரு முறை காலண்டரில் சேர்த்தது ரோமானிய அரசர் ஜூலியஸ் சீசர். நாம் இப்போது பயன்படுத்தும் க்ரிகோரியன் காலண்டர், ஜூலியஸ் சீசர் வடிவமைத்த ஜூலியன் காலண்டரின் லீப் வருடத்தை உள்ளடக்கிய காலண்டர்தான்.
Today is a very rare day: What is leap year: Detail in tamil
ஒவ்வொரு நான்கு வருடங்களுக்கும் ஒரு லீப் ஆண்டாக கருதப்படுகிறது. இந்த ஆண்டு லீப் ஆண்டா, இந்த ஆண்டில் பிப்ரவரி மாதத்தில் 29 தேதி வருமா என்பதை கண்டறிய எளிமையான முறை உள்ளது. சரியாக நான்கால் வகுபடும் ஆண்டு லீப் வருடம் எனப்படும். உதாரணமாக 2000ஆம் ஆண்டு ஒரு லீப் ஆண்டாக இருக்கும். ஆனால், 2040ஆம் ஆண்டு லீப் ஆண்டாக இருக்கும். 2030 ஒரு லீப் ஆண்டு அல்ல.
4 வருடங்களுக்கு ஒருமுறைதான் உண்மையான பிறந்தநாளை கொண்டாட முடியும்: உலகில் சராசரியாக தினமும் சுமார் 3.5 லட்சம் குழந்தைகள் பிறக்கிறார்கள். பிப்ரவரி 29ஆம் தேதியும் இதேபோல, லட்சக்கணக்கான குழந்தைகள் பிறக்கிறார்கள். ஆனால் இந்த நாளில் பிறக்கும் அனைவரும் தங்கள் பிறந்தநாளை நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் சரியான நாளில் கொண்டாட முடியும். மற்ற ஆண்டுகளில், மார்ச் 1 அல்லது, பிப்ரவரி 28 அன்றே பிறந்தநாள் கொண்டாடுவது வழக்கமாக உள்ளது.
இந்தியாவில் மறைந்த முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் (1896), அர்ஜூனா விருது வென்ற பிரகாஷ் நஞ்சப்பா, கலாஷேத்ரா நிறுவனரும், பரதநாட்டிய கலைஞருமான ருக்மிணி தேவி (1904), ஹாக்கி வீரர் ஆடம் சிங்ளேர் (1984) ஆகியோர் பிப்ரவரி 29ஆம் தேதி லீப் வருடத்தில் பிறந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது