Wednesday, 27 March 2024

எந்தெந்த நாளில்.. எந்தெந்த கடவுளை வணங்கினால்.. அதிர்ஷ்டம் வீடு தேடி வரும்?


எந்தெந்த நாளில்.. எந்தெந்த கடவுளை வணங்கினால்.. அதிர்ஷ்டம் வீடு தேடி வரும்? தெரிஞ்சுக்கோங்க!
இந்தியவர்கள் ஏராளமான கடவுள்களை தினந்தோறும் வழிபட்டு வருகின்றனர். ஒவ்வொரு கடவுளுக்கும் வெவ்வேறு வழிகளில் பூஜை சடங்குகள் செய்து வருகின்றனர். அதன்படி எந்தெந்த நாளில் எந்தெந்த கடவுள்களை பூஜை செய்து வணங்கினால் நமக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

astrology
1/9
இந்தியர்களுக்கும் கடவுள் வழிபாட்டுக்கும் இடையே உள்ள பந்தத்தை வார்த்தைகளால் சொல்லிவிடமுடியாது. அதனை உணர்வு ரீதியாக மட்டுமே அணுகமுடியும். இந்தியா முழுவதும் பல்வேறு விதமான பெரிய கடவுள்கள், சிறிய தெய்வங்கள் என ஒவ்வொருவரும் அவர்களுக்கென விருப்பமான தெய்வங்களை வழிபட்டு வருகின்றனர். தங்களுக்கு பிடித்தமான தெய்வங்களை சந்தோஷப்படுத்த விதிவிதமான பூஜைகள், சடங்குகள், படையல்கள் உள்ளிட்டவைகளை செய்து வருகின்றனர்.

astrology
2/9
அதேபோல் ஒவ்வொரு தெய்வத்துக்கும் வெவ்வேறு நாட்கள் உகந்த நாளாக இருக்கின்றது என நம்பப்படுகிறது. அதன்படி எந்தெந்த கடவுள்களை எந்தெந்த நாட்களில் பூஜை செய்து வழிபட்டு வந்தால் அதிர்ஷ்டம் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
astrology
3/9
திங்கள்: சிவனுக்கு உகந்த நாள் திங்கட்கிழமை. இந்நாளில் சிவனை நினைத்தி வழிபட்டால் அதிர்ஷ்டங்கள் கைகூடும். அதேபோல் இந்நாளில் சிவனை நினைத்து விரதம் இருந்து பூஜை, சடங்குகள் செய்வதன் மூலம் நீங்கள் சிவனை மகிழ்ச்சியடைய செய்வீர்கள். வாழ்க்கையில் நிம்மதி, நீண்ட ஆயுள், ஆரோக்கியம் தரும் என நம்பப்படுகிறது. இந்நாளில் சிவனுக்கு பால் அபிஷேகம் செய்வது நல்லது. சிவனுக்கு வெள்ளை நிறம் பிடிக்கும் என்பது ஐதீகம். அதன்படி நீங்கள் வெள்ளை நிற உடை அணிந்து சிவன் கடவுளை வழிபட்டு வந்தால் அதிர்ஷ்டம் கிடைக்கும்.
astrology
4/9
செவ்வாய்: அனுமனுக்கு உகந்த நாள் செவ்வாய்க்கிழமை. இந்நாளில் அனுமன் கடவுளை வழிபட்டு வந்தால் வாழ்க்கையில் உள்ள எல்லா தடங்கல்களை நீக்கி மன அமைதியை தருவார் என நம்பப்படுகிறது. அதேபோல் சிறப்பு மற்றும் ஆரஞ்சு நிற பூக்களுடன், விளக்கேற்றி அனுமன் பகவானை வணங்குவதன் மூலம் உங்கள் வாழ்வில் நிம்மதி, ஆரோக்கியம் பெருகி அதிர்ஷ்டம் வீடு தேடி வரும் என நம்பப்படுகிறது.
astrology
5/9
புதன்: கணேஷன், பிள்ளையார், யானை முகத்தான், விநாயகர் இப்படி பல பேர்களில் நாம் வணங்கி வருகிறோம். கற்றல் திறன் மேம்பட, வாழ்க்கையில் உள்ள அணைத்து தடைகளும் விலக விநாயகர் கடவுளை புதன்கிழமை நாட்களில் வணங்குவது நல்லது. இந்தத்துகள் பெரும்பாலானோர் முதல் கடவுளாக விநாயகரை வழிபட்டே மற்ற தெய்வங்களை வணங்குகின்றனர். மஞ்சள், வாழைப்பழம், பச்சை புல், இனிப்புகள் வழங்கி விநாயகரை வழிபட்டால் அதிர்ஷ்டம் கிடைக்கும். பச்சை மற்றும் மஞ்சள் விநாயகருக்கு உகந்த நிறம் ஆகும் ஆகவே இந்நாளில் நீங்களும் பச்சை, மஞ்சள் நிற உடையில் வி
astrology
6/9
வியாழன்: விஷ்ணுவுக்கு உகந்த நாள் வியாழக்கிழமை. இந்நாளில் விஷ்ணு பகவானை வழிபடுவதன் மூலம் திருமண யோகம் கிடைக்கும், வீட்டில் ஏற்பட்டுள்ள சண்டை சச்சரவுகள் நீங்கும், வாழ்வில் முன்னேற்றத்தை கொடுக்கும் என நம்பப்படுகிறது. நெய், பால், மஞ்சள் நிற பூக்கள், வெல்லம் இவற்றை வைத்து விஷ்ணு பகவானை வணங்கினால் அதிர்ஷ்டம் கைகூடும். விஷ்ணு பகவானுக்கு உகந்த நிறம் மஞ்சள். ஆகவே இந்நாளில் மஞ்சள் நிற உடையில் விஷ்ணு பகவானை வழிபட்டு வருவது நல்லது.
astrology
7/9
வெள்ளி: மகாலட்சுமி, அம்மன் உள்ளிட்ட பல பெண் தெய்வங்களுக்கு வெள்ளிக்கிழமை உகந்த நாளாக நம்பப்படுகிறது. இந்நாளில் விரதம் இருந்து வழிபட்டால் வாழ்வில் முன்னேற்றம், செல்வம், மன நிம்மதி, ஆரோக்கியம் தரும் என நம்பப்படுகிறது. வெல்லம், பூக்கள், பால், பழங்கள் இவரை வைத்து வழிபட்டு வந்தால் அதிர்ஷ்டம் கிடைக்கும். இந்நாளில் வெள்ளை மற்றும் கலர்புல் ஆடைகள் அனைத்து நல்லது.
astrology
8/9
சனி: பெருமாள் மற்றும் சனி பகவானுக்கு உகந்த நாள் சனிக்கிழமை. இந்நாளில் பெருமாளுக்கு விரதம் இருந்து வழிபட்டு வந்தால் அதிர்ஷ்டம் கைக்கூடும். அதேபோல் சனி பகவானை வணங்குவதன் மூலம் செல்வம், ஆரோக்கியம், வாழ்க்கையில் அமைதி உள்ளிட்ட அதிர்ஷ்டங்கள் கிடைக்கும். இந்நாளில் கருப்பு நிறம் நல்ல அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.
astrology
9/9
ஞாயிறு: சூரிய பகவானுக்கு உகந்த நாள் ஞாயிற்றுக்கிழமை. மனிதனின் காலசக்கரத்தை இயக்குவதே சூரியன் தான். இந்நாளில் சூரிய பகவானை வழிபடுவதன் மூலம் வாழ்வில் ஆரோக்கியம் பெருகும், உறவுக்குள் மகிழ்ச்சி அதிகரிக்கும். சூரியனுக்கு உகந்த நிறம் சிவப்பு. ஆகையால் சிவப்பு நிற பூக்கள், சிவப்பு நிற உடை அணிந்து சூரியனை வழிபட்டு வந்தால் அதிர்ஷ்டம் கிடைக்கும் என நம்பப்படுகிறது.

No comments:

Post a Comment