Monday, 1 April 2024

தோப்புக்கரணத்தில் இத்தனை நலன்?



தினந்தோறும் போடுங்கள் தோப்புக்கரணம்.. தப்பாமல் போடும் தோப்புக்கரணத்தில் இத்தனை நலன்? ஆயுளும் கூடும்
மாணவர்களுக்கு தண்டனை வழங்குவதற்காக தோப்புக்கரணம் போட சொல்கிறார்கள்.. யோகாசனத்தில் முக்கிய பயிற்சியே இந்த தோப்புக்கரணம்தான்.. அப்படியானால் தோப்புக்கரணம் என்பது தண்டனையா? பயிற்சியா? தோப்புக்கரணம் செய்வதற்கும் அறிவியல் மற்றும் ஆன்மீக காரணங்கள் உள்ளன.

தோப்புக்கரணம் போடுவதற்கென்றே ஒரு முறை இருக்கிறதாம்.. நம்முடைய தோள்பட்டை அகலத்துக்கு கால்களை பிரித்து வைத்து நிற்க வேண்டும்.. பிறகு, இடது கையை மடக்கி இடது கையின் பெருவிரலால் வலது காது மடலின் நுனியை பிடித்து கொள்ள வேண்டும். அப்போது, கட்டை விரல் காதின் முன்புறமும், ஆள்காட்டி விரல் காதின் பின்புறமும் இருக்க வேண்டும்.



Amazing Health Benefits of Thoppukaranam and Can Pregnant Women do this Super thoppukaranam Exercise daily
இதுதான் முறை: வலது கையானது இடது கையின் மேல் இருக்க வேண்டும். 2 கால்களையும் மடக்கி முதுகை வளைக்காமல் நேராக உட்காரும் நிலையில் தோப்பு கரணம் போட வேண்டும். உட்காரும் நிலையில், நம்மால் எவ்வளவு முடிகிறதோ அந்த அளவுக்கு செய்யலாம். எழும்போது மூச்சை வெளியே விட்டபடியே எழ வேண்டும்.

அதாவது, தோப்புக்கரணம் போடும்போது காது மடல்களை பிடிக்கும்போது, உடலின் எல்லா உறுப்புகளும் செயல்படுவதற்கான தூண்டுதல் கிடைக்கிறது.. அதேபோல, உட்கார்ந்து எழும்போது, காலில் இருக்கக்கூடிய சோலியஸ் என்ற தசை இயங்க துவங்குகிறது. இதனால் உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராகிறது..

உறுப்புகள்: அதுமட்டுமல்ல, காதுகளில் தான் இதயம், சிறுநீரகம், மூளை, வயிறு கண்கள் கீழ், மேல்தாடை, ஈரல், காது நரம்பு என அத்தனை உறுப்புகளின் தொடர்பு புள்ளிகளும் உள்ளதால்தான், மொத்த உடல் உறுப்புகளும் பலன் பெறுகின்றன. இடுப்பிலுள்ள ஜவ்வு, எலும்பு தசைகளும் பலம்பெறுகின்றன. இதன்காரணமாகவே, கர்ப்பிணிகளை தோப்புக்கரணம் போடச் சொல்கிறார்கள். இதனால், கருப்பை சுருங்கிவிரிந்து, சுகப்பிரசவம் எளிதாக நடக்குமாம்.


தோப்புக்கரணம் போடுவதால் உடலும், மனமும் பலம் பெறுகிறது.. ரத்த ஓட்டம் உடலில் அதிகரிக்கிறது.. இதனால், அனைத்து உறுப்புகளுக்கும் தேவையான ஆக்ஸிஜன் கிடைக்கிறது.. முறையான நடைமுறைகளுடன் தோப்புக்கரணம் போடுவதால் கால்கள், இடுப்பு, முதுகு மற்றும் கைகளில் உள்ள தசைகளை வலுப்பெறுகிறது. செரிமானம் அதிகமாகிறது.. தூக்கமின்மை பிரச்சனை தீர்கிறது..



Amazing Health Benefits of Thoppukaranam and Can Pregnant Women do this Super thoppukaranam Exercise daily
ஆன்மீக காரணம்: தோப்புக்கரணம் பின்னணியில் உள்ள ஆன்மீக காரணம் என்ன தெரியுமா? கஜமுகாசுரன் என்ற ஒரு அசுரன் இருந்தானாம்.. அவன் தான் பெற்ற வரத்தின் வலிமையால், தேவர்களை அடிமைப்படுத்தி வைத்திருந்தான்.. அத்துடன் நிறைய கொடுமைகளையும் தேவர்களுக்கு தந்து வந்தானாம்.. முக்கிய தன்னை பார்க்கும்போதெல்லாம், தோப்புக்கரணம் போட வேண்டும் என்று உத்தரவு போட்டானாம்.


தேவர்களும், அந்த அசுரனுக்கு பயந்து, அதன்படியே தோப்புக்கரணம் போட்டு வந்தனர்.. ஆனாலும், இந்த தொல்லை தாங்காமல், விநாயகரிடம் சென்று முறையிட்டுள்ளார்கள்.. உடனே விநாயகரும், கஜமுகாசுரனை சம்ஹாரம் செய்ய புறப்பட்டார்.

ஆனால், அந்த கஜமுகாசுரன் விநாயகரையும், தோப்புக்கரணம் போடுமாறு உத்தரவிட்டானாம். இதனால் கோபம் அடைந்த விநாயகர் தன்னுடைய தந்தத்தாலேயே, அந்த அசுரனை குத்திக்கொன்றுவிட்டாராம்..

விநாயகர்: இதனால் தேவர்கள், நன்றி சொல்லும்விதமாக, விநாயகருக்கு தோப்புக்கரணம் போட்டு மரியாதை செலுத்த துவங்கினார்களாம்.. அதனால்ன் இப்போதுவரை பக்தர்களும் விநாயகருக்கு தோப்புக்கரணம் செலுத்துகிறார்கள்.

தோப்புக்கரணம் செய்தாலே, மூளையிலுள்ள நரம்புகள் வலிமை பெறுமாம். அதனால்தான், குறைந்த மதிப்பெண்கள் பெறும் மாணவர்களை தோப்புக்கரணம் செய்ய சொல்கிறார்களாம்.. எப்படியோ, தோப்புக்கரணம் ஒரு எளிமையான பயிற்சி என்றாலும், இது சக்தி வாய்ந்த பயிற்சி என்பதை மறந்துவிடக்கூடாது..!!


No comments:

Post a Comment