Thursday, 4 April 2024

முகம் பார்க்கும் கண்ணாடியை எங்கே வைக்கலாம்



முகம் பார்க்கும் கண்ணாடியை நிலைவாசலில் வைக்கலாமா? எந்த திசையில் மாட்ட வேண்டும்     முகம் பார்க்கும் கண்ணாடியை எங்கே வைக்கலாம், எங்கெல்லாம் வைக்கக் கூடாது தெரியுமா? தவறான இடத்தில் வைத்திருந்தால் உடனே மாற்றிவிடுங்க!





பொதுவாக வீட்டில் முகம் பார்க்கும் கண்ணாடியை பயன்படுத்துவோம். அதில் கூட எங்கே வைத்து உபயோகப்படுத்த வேண்டும் என்பது இருக்கிறது. அது போல் எங்கே வைக்கக் கூடாது என்பதும் இருக்கிறது. கண்ணாடியில் வாஸ்துவா என நீங்கள் கேட்கலாமா? கண்ணாடி எல்லாம் லட்சுமி கடாட்சம்!

ஒரு சிலர் கண்ணாடியை படுக்கை அறையில் நாம் எழுந்திருக்கும் திசைக்கு எதிரே வைத்திருப்பார்கள். இது மிகவும் தவறு. இதை மறந்தும் கூட செய்யாதீர்கள். இப்படி வைத்தால் கண்ணாடியால் நிறைய எதிர்வினைகள் ஏற்படும். காலையில் எழுந்தவுடன் நாம் கண்ணாடியை பார்த்துக் கொண்டு எழுவதால் நாம் எந்த செயலை செய்தாலும் அது தோல்வியில்தான் முடியும்.

ஒரு வேளை படுக்கை அறையில் தவிர்க்க முடியாத காரணங்களுக்காக கண்ணாடி இருந்தால் அதை எடுத்து திருப்பி வையுங்கள். இல்லாவிட்டால் அதன் மீது ஒரு துணியை போட்டு மூடி வையுங்கள். காலையில் உங்களுக்கு தேவையானபோது திறந்து பார்த்துக் கொள்ளலாம். அது போல் குளியல் அறையிலும் வைக்கக் கூடாது என்கிறார்கள்.

அப்படியே வைத்தாலும் வடக்கு திசையிலிருக்கும் சுவற்றில் அல்லது கிழக்கு திசை சுவற்றில்தான் வைக்க வேண்டுமாம். இது தவிர்த்து தெற்கு அல்லது மேற்கு திசையில் கண்ணாடி வைத்திருந்தால் வீட்டில் உள்ளோருக்கு நோய்கள் ஏற்படக் கூடும் என்கிறார்கள்.

அது போல் நிலை வாசலில் சிலர் கண்ணாடியை வைத்திருப்பார்கள். இது அதிர்ஷ்டத்திற்காகத்தான். ஆனால் இப்படி வைக்கப்படும் கண்ணாடியாலும் சிலருக்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புண்டு. நிலை வாசலில் கண்ணாடி வைப்பதால் ஒரு சிலருக்கு பணப்பிரச்சினையும் ஒரு சில குடும்பங்களில் சண்டைகளை கூட இழுத்துவிடும்.



நிலை வாசலின் மேல் கண்ணாடி இருந்தால் அதை எடுத்து சுவற்றில் ஆணி அடித்து மாட்டி விடுங்கள். அதே நேரத்தில் வீட்டிற்கு யாராவது வந்தால் அவர்கள் நுழைந்ததும் கண்ணாடியை பார்க்கும் படியாக இருத்தல் வேண்டும். வீட்டின் நிலைவாசலில் அஷ்டலட்சுமிகள் வாசம் கொள்வார்கள். எனவே அங்கு கண்ணாடியை வைத்தால் வீட்டிற்கு வருவோரின் எண்ணங்களை அந்த கண்ணாடி உள்வாங்கும்.

வாஸ் பேசினில் கண்ணாடி வைக்க வேண்டும் என்றால் அதை மேற்கு, தெற்கு பகுதியில் வைக்கலாம். மற்ற இரு திசைகளில் வைக்கவே கூடாது. வீட்டில் மேற்கு, தெற்கு திசையில்தான் கண்ணாடிகளை வைக்க வேண்டும். உங்கள் வீட்டில் கஷ்டங்கள் இருந்தால் உடனே கண்ணாடியை எடுத்து வைத்து சரியான இடத்தில் வையுங்கள். நம்பிக்கைதான் வாழ்க்கை! பாசிட்டிவ்வுடன் செய்தால் நிச்சயம் வெற்றிதான்!


No comments:

Post a Comment