Thursday 18 April 2024

தண்ணீர் எப்போது குடிக்க வேண்டும்?சாப்பிடும் முன்பு ,பின்பு


சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கலாமா? சாப்பிடும் முன் பருகலாமா? தண்ணீர் எப்போது குடிக்க வேண்டும்? அடடே
சாப்பிடும் முன்பு தண்ணீர் குடிக்கலாமா? சாப்பிட்டதுமே தண்ணீர் குடிக்கலாமா? உணவு நிபுணர்கள் சொல்வது என்ன?


தண்ணீர் என்பது எப்போதுமே நமக்கு பலத்தையும், ஆற்றலையும் தரக்கூடியது.. குடல் பகுதியின் சீரான செயல்பாட்டுக்கு தண்ணீர் மிகவும் அவசியம்.. இதனால் செரிமானம் எளிதாகிறது.. உடலிலுள்ள கழிவுகளும், நச்சுக்களும் நீங்குகின்றன.. இதில் வெந்நீரை குடிப்பது கூடுதல் நன்மைகளை தருகிறதாம்.


Can we drink water while eating and which is the Suitable time to drink water while taking food
கலோரிகள்: கலோரி இல்லாத தண்ணீரை குடிப்பது தேவையற்ற கலோரிகளை உட்கொள்வதில் இருந்து பாதுகாக்கிறது. அதேசமயம், நாம் குடிக்கும் தண்ணீரின் அளவும் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகின்றன..


இதில் சாப்பிடுவதற்கு முன்பு தண்ணீர் குடிக்க வேண்டாம் என்று அறிவுறுத்துகிறார்கள். எனவே, 30 நிமிடங்களுக்கு முன்பு ஒரு கிளாஸ் தண்ணீரை குடிக்க சொல்கிறார்கள். காரணம், சரியான நீரேற்றமானது, வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறதாம்.. செரிமானமும் சீராக நடக்கிறதாம்.. ஊட்டச்சத்து உறிஞ்சுதலும் தடையில்லாமல் நடக்கிறதாம். உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், சாப்பிடுவதற்கு முன்பு குறிப்பிட்ட அளவு தண்ணீரை குடிக்கலாம் என்கிறார்கள்.

ராமநாதபுரம் மாவட்டம் தண்ணீர் இல்லாத மாவட்டமா? உண்மை என்ன.. இதை பாருங்க ராமநாதபுரம் மாவட்டம் தண்ணீர் இல்லாத மாவட்டமா? உண்மை என்ன.. இதை பாருங்க
வறட்சி: வறட்சியை தடுக்க தண்ணீர் குடிக்க நேரிடுகிறது என்றாலும், சாப்பிடும்போது தண்ணீர் குடித்துவிட்டால், செரிமானம் பாதிக்கப்படும் என்கின்றன ஆய்வுகள்.. செரிமான சுரப்புகளின் தாக்கம் குறைந்துவிடும்.. அத்துடன் உள்ளே விழுங்கும் உணவும், முழுமையாக செரிமானம் ஆகாமல், மந்தம், உப்புசம், பசியின்மை போன்றவற்றை ஏற்படுத்திவிடக்கூடும். முக்கியமாக, குழந்தைகள் சாப்பிடுவதற்கு முன்பு தண்ணீர் குடித்தால், அவர்கள் வழக்கமாக சாப்பிடும் அளவு குறைவதற்கான வாய்ப்பு உள்ளதாம்..


சாப்பிடும்போது அதிகளவில் தண்ணீர் குடிக்காமல் இருக்க வேண்டுமானால் இருக்க வேண்டுமானால், உணவில் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளலாம். சாப்பிட்டு முடித்ததுமே தண்ணீர் குடிக்கக்கூடாதாம்.. சிறிது நேரம் கழித்து தண்ணீர் குடிப்பதே செரிமானத்துக்கு உகந்ததாக இருக்குமாம்.

காலையில் எழுந்து பல்லை துலக்கியதுமே! ஒரே கல்ப்பாக ஒரு லிட்டர் தண்ணீர் குடிக்கலாமா? காலையில் எழுந்து பல்லை துலக்கியதுமே! ஒரே கல்ப்பாக ஒரு லிட்டர் தண்ணீர் குடிக்கலாமா?
குளிர்ந்த நீர்: சாப்பிடும்போது, குளிர்ச்சியான தண்ணீர் குடிப்பதும், செரிமான மண்டலத்திலுள்ள என்சைம் செயல்திறனை குறைத்துவிடுமாம்.. இதனால், உடலில் நச்சுக்கள் உருவாக வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள். அதனால், சாப்பிடும்போது, சோடா, ஜில் ஜூஸ், காபி இவைகளை குடிக்க வேண்டாம் என்கிறார்கள்.


ஆனால் சாப்பிடுவதற்கு முன்பு தண்ணீர் குடித்தால் உடல் பலவீனம் அடையும் என்று ஆயுர்வேதம் சொல்கிறது..அதேபோல, சாப்பிடும்போது சிறிது தண்ணீரை குடிப்பது தவறில்லை, செரிமான மண்டலத்துக்கு நல்லது, உணவுகளை உடைப்பதற்கும் இந்த தண்ணீர் உதவியாக இருக்கும் என்று ஆயுர்வேதம் சொல்கிறது.

ஆயுர்வேதம்: அதேபோல, சாப்பிட்ட உடனேயே தண்ணீர் குடிப்பதால் சீரான செரிமானம் தடைப்பட்டு உடல்பருமன் அதிகரிக்கும் என்பதால், சாப்பிட்டு 30 நிமிடம் கழித்தே தண்ணீர் குடிக்க வேண்டும் என்கிறது ஆயுர்வேதம்.


No comments:

Post a Comment