Friday, 19 April 2024

அரைஞாண்கயிறு அணிந்து கொள்வது ஏன் தெரியுமா?


அரைஞாண்கயிறு அணிந்து கொள்வது ஏன் தெரியுமா? எந்த கலர் கயிறை அணியலாம்?
 குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அரைஞாண்கயிறு கட்டுவது ஏன் என்பது தெரியுமா? இதில் அடிவயிற்று பகுதிக்கான அனைத்து நலன்களும் இருக்கிறது.



குழந்தை பிறந்ததும் தீட்டு கழித்தவுடன் வெள்ளியிலோ அல்லது கருப்பு, சிகப்பு கயிறிலோ தாயத்தை கோர்த்து அரைஞாண்கயிறு கட்டும் வழக்கம் இருக்கிறது.



What is the use of Araignankayiru which is tied around hip
இது குழந்தைகள் மட்டும் இல்லாமல் பெரியவர்களும் கடைசி வரை கட்டிக் கொள்கிறார்கள். இதற்கு பல்வேறு மருத்துவக் காரணங்கள் உள்ளன. ஆண்களுக்கு சிறுநீரகத்திலிருந்து வரும் ரத்தக் குழாய்களும் விதைப்பையிலிருந்து வரக் கூடிய ரத்தக் குழாய்களும் ஒன்று சேரும் இடமே அடிவயிறுதான்.


அதனால்தான் அரைஞாண்கயிறு கட்டுகிறார்கள். இப்படி கட்டுவதால் குடல் இறங்காமல் இருக்கும். முக்கியமாக விதைப்பையை பாதுகாக்கத்தான் இது கட்டப்படுகிறது. அரைஞாண்கயிறு கட்டுவதால் அடிவயிற்றுப்பகுதிகளுக்கு கீழ் இருக்கும் உறுப்புகளுக்கு ரத்தம் செல்கிறது. வெள்ளியில் கூட அரைஞாண்கயிறு கட்டலாம்.

அது கட்டுவதால் உடல் சூட்டை தணிக்கும். பெண்களுக்கு அரைஞாண்கயிறு தேவையில்லாத ஒன்று என்கிறார்கள். அதாவது வயிறு பகுதி பெரிதாக ஆகாமல் இருக்க கட்டிக் கொள்ளலாம். சில பெண்கள் கைகளில் கூட தாயத்தை கட்டிக் கொள்கிறார்கள். குழந்தையின் தொப்புள் கொடியை காய்ந்தவுடன் அதை தாயத்தில் சொருகி, அரைஞாண்கயிறாக கட்டிக் கொள்கிறார்கள்.

ADVERTISEMENT
இதனால் குழந்தையை கெட்ட சக்தி அண்டாது. மருத்துவக் காரணங்கள் இருந்தாலும் அந்த காலத்தில் ஆண்கள் கோவணம் கட்டிக் கொள்ள இந்த கயிறு உதவியாக இருந்தது. அது போல் கிராமப்புறங்களில் நீச்சல் கற்றுத் தர அரைஞாண் கயிற்றில் சேலை கட்டி இறக்கிவிடுவார்கள். பெல்ட் கண்டுபிடிக்கப்படாமல் இருந்த காலத்தில் அரை டிரவுசரை கீழே விழாமல் பிடித்துக் கொள்ள இந்த கயிறு உதவியாக இருந்தது.

அது போல் வயல்வெளிகளில் வேலை செய்யும் போது பாம்பு கடித்துவிட்டால் உடல் முழுவதும் விஷம் பரவாமல் இருப்பதை தடுக்க இந்த அரைஞாண் கயிறு தேவைப்படுகிறது. மேலும் குழந்தைகளுக்கு கட்டும் போது குழந்தையின் எடை குறைந்தால் அது இந்த அரைஞாண் கயிறு இளகுவதில் இருந்து தெரியும். கயிறு டைட்டானால் குழந்தையின் உடல் எடை அதிகரித்துள்ளது என தெரியும். இந்த அரைஞாண்கயிறு கண் திருஷ்டியை போக்கவும் பயன்படுகிறது. இது கருப்பு, சிவப்பு நிறங்களில் கிடைக்கிறது. அவரவர் தேவைக்கேற்ப இதை கட்டிக் கொள்ளலாம்.


No comments:

Post a Comment