Thursday, 4 April 2024

மருதாணி பூ.. வழுக்கை தலையில் முடி வளரணுமா?


மருதாணி பூ.. வழுக்கை தலையில் முடி வளரணுமா? வாத நோய் தீரணுமா? மருதாணி பூக்களே போதும்.. சூப்பர் எண்ணெய்
சரும நோய்களுக்கு மருதாணி பூக்களை போன்ற சிறந்த தீர்வு கிடைக்காது.. எப்படி பயன்படுத்தலாம் தெரியுமா?


.


Super Health Uses of Henna Flowers and Maruthani Flower Oil is the Best Medicine for Skin disease
மருதாணி பூக்கள்: இதில், மருதாணியின் பூக்களை பொறுத்தவரை, சீசனில் மலரக்கூடியவை.. குறிப்பாக, ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் இந்த பூக்கள் அதிகமாக இருக்கும்.. தூக்கம் சரியாக வராமல் அவதிப்படுபவர்கள், மருதாணி பூக்களை தலையணைக்கு அடியில் வைத்து படுத்தால், நிம்மதியான தூக்கம் வரும்.


இந்த பூக்கள் தலைமுடிக்கு மிகவும் நல்லது. அதனால்தான், இந்த பூக்களில் எண்ணெய் போல தயார் செய்வார்கள்.. அதாவது, தலைக்கு தேய்க்கும் தேங்காய் எண்ணெய்யில், செம்பருத்தி, மருதாணி இலைகளை சேர்ப்பதுபோவே, மருதாணிப்பூக்களையும் சேர்த்து காய்ச்ச வேண்டும்.. சீசன் நேரங்களில் இந்த பூக்களை பயன்படுத்தி எண்ணெய் தயாரித்து வைத்து கொள்ளலாம்.

வறண்ட தலைமுடி மற்றும் நிறைய முடி உதிர்வு பிரச்சனை இருப்பவர்களுக்கு இந்த எண்ணெய் கை கொடுத்து உதவுகிறது. அத்துடன், தலைமுடிக்கு தேவையான சத்துக்களும் கிடைக்கின்றன.

அதேபோல, மருதாணி பூக்களை நிழலில் 2 நாட்கள் காயவைத்து எடுத்துக் கொண்டு, நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய்யில் காய்ச்சி 2 நாட்கள் அப்படியே விட்டுவிட வேண்டும். 3வது நாளில் இந்த எண்ணெய்யை வடிகட்டி பயன்படுத்தலாம்.


தலைமுடி: தலைமுடிக்கு மட்டுமல்லாமல், உடல் உஷ்ணத்தையும் இந்த எண்ணெய் தணிக்கிறது.. எனவே, வாரம் 2 முறை இந்த எண்ணெய்யை உடலில் தடவி மசாஜ் போல பயன்படுத்தி குளிக்கலாம். சிலர் தொப்புளில் இந்த எண்ணெய்யை வைத்து லேசாக மசாஜ் செய்வார்கள். இதனாலும், உடல் உஷ்ணம் குறையும்..

மருதாணியின் மகத்துவம்.. மூலிகையே மருந்து.. தலைக்கு மருதாணி.. தலையணைக்கு மருதாணி.. மகத்துவம் மருதாணி மருதாணியின் மகத்துவம்.. மூலிகையே மருந்து.. தலைக்கு மருதாணி.. தலையணைக்கு மருதாணி.. மகத்துவம் மருதாணி
வாய்ப்புண் இருந்தாலும் சரி, பாதங்களில் சேற்றுப்புண் இருந்தாலும் சரி, இந்த எண்ணெய்யை தடவிவந்தால் நிவாரணம் கிடைக்கும்.. தூக்கம் சரியாக வராவிட்டால், புருவங்களில் இந்த எண்ணெய்யை தேய்த்தால் போதும்.


தலைக்கு தேய்ப்பதால், நாள்பட்ட தலைவலி நீங்கும்... அத்துடன், தலைவழுக்கையும் மறையும். மருதாணிப் பூக்களில் சாறு அரைஸ்பூன் எடுத்து, அரை டம்ளர் காய்ச்சி ஆறவைத்த பசும்பாலில் கலந்து குடித்தால், கால், கை வலிகள் குணமாகும்..

வாத நோய்: அதேபோல, வாதநோய் இருந்தாலும், இந்த பூக்கள் மருந்தாகும்.. மருதாணி பூக்களை கால் கிலோ எடுத்து, அரை லிட்டர் வேப்பெண்ணெய்யில் காய்ச்சிவைத்து கொண்டால் போதும்.. வாத வலியுள்ள பகுதிகளில் தடவிவந்தால், பக்க வாத நோய் மெல்ல குணமடையும். தேமல், கரப்பான் புண்களுக்கு, இந்த பூக்களை அரைத்து பற்று போல போட்டு வந்தால் போதும்..


No comments:

Post a Comment