Saturday, 15 June 2024

15 திதிகளின் பெயர்கள்




15 திதிகளின் பெயர்கள்

ஸூர்யன் இருக்குமிடம் முதல் 12 பாகைகள் சந்திரன் நடப்பினில் ஒரு திதியாகும்.

1. ப்ரதமை

2. த்விதியை

3. த்ருதியை

4. சதுர்த்தி

5. பஞ்சமி,

6. ஷஷ்டி

7. ஸப்தமி

8. அஷ்டமி

9. நவமி

10. தசமி

11. ஏகாதசி

12. துவாதசி

13. த்ரயோதசி

14. சதுர்த்தசி

15. பௌர்ணமி (அல்லது) அமாவாஸ்யை

மாதம் என்பது இரண்டு பக்ஷங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

அமாவாஸ்யை அடுத்த பிரதமை முதல் பௌர்ணமி வரை சுக்லபக்ஷம் என்றும்

பௌர்ணமியை அடுத்து வரும் பிரமை முதல் அமாவாஸ்யை வரை கிருஷ்ணபக்ஷம் என்றும் வழங்கப்படுகிறது.

தமிழில் இதனை வளர்பிறை என்றும் தேய்பிறை என்றும் கூறுகிறோம்.


2 comments:

  1. மேஷம் = தலை, மூளை, கண், முகம்.
    ரிஷபம் = கழுத்து, தொண்டை, உள்நாக்கு
    மிதுனம் = நுரையீரல், மார்பு, கைவிரல், மூக்கு.
    கடகம் = வயிறு, மார்பகம், வாய், நாக்கு.
    சிம்மம் "= இருதயம், முதுகு, முதுகுத் தண்டு, கண்.
    கன்னி = சிறுகுடல், பெருங்குடல், இடை.
    துலாம் = மூத்திரக்காய்(கிட்னி), தோல்.
    விருட்சிகம் = ஆண், பெண் ஜனன உறுப்புக்கள், காது.
    தனுசு = இடுப்பு , துடை, கல்லீரல்.
    மகரம் = பல், எலும்பு, முழங்கால்
    கும்பம் = கணுக்கால், இரத்த ஓட்டம்.
    மீனம் : பாதம், மலப்பகுதி, ஆசனவாய்.

    ******** ^ ******** ^ *********

    ReplyDelete
  2. Sat. 29, Jun, 2024 at 10.11 pm.

    ஜோதிடம் :

    ஜோதிடத்தில் இன்று அஷ்டவர்க்கம் பற்றி பார்க்கலாம்.

    அஷ்டவர்ங்கமானது, சூரியன் முதல் சனி வரையுள்ள 7−ம், லக்னம்-1ம் ஆக இவ்வெட்டும் அஷ்ட வர்க்கங்களாம்.

    ஒவ்வொரு ராசியிலும் சஞ்சரிக்கின்ற ஒவ்வொரு கிரகத்திற்கும் உள்ள சுபாசுப பலன்களை இந்த அஷ்டவர்க்கத்தால் திருபிக்கப்படுகின்றன.

    உதாரணமாக, இன்று செவ்வாய் அஷ்டவர்க்கத்தைப் பார்க்கலாம் !

    செவ்வாய்அஷ்டவர்க்
    கம் :
    ___________________________
    ல.சுக்| சூ |புதன்| ௦௦௦ |௦௦௦|ச.௦௦௦|௦௦௦
    . . . . . |..... |. . . . . |.....
    ___________________________
    ௦௦௦ | |குரு
    | |௦௦௦௦
    . . . . |ராசி வீடு| . . . .
    _______| |______
    செவ் | |
    ௦௦௦௦௦| |௦௦௦௦௦
    . . . | | . . .
    _______|_________|________
    ௦௦ | ௦ |௦௦௦௦௦|௦௦
    . . . . ..|....... | . . . |......
    ___________________________


    **விளக்கம் :*

    *மேஷம் :*

    மேஷத்தில் 5 ரேகை கோடுகளும், 3-பிந்துக்களும் உள்ளன. அவற்றுள் 3- பிந்துக்களையும், 3 ரேகைகளையும் எடுத்துவிட்டால், 2− ரேகைகள் மட்டுமே மிஞ்சும்.

    இவ்வித ஜாதகனுக்குச் செவ்வாய் கோசர ரீதியாக மேஷத்தில் வரும்பொழுது 1/4 பங்கு அசுபத்தையே தருவான்... என அறிந்து கொள்ள வேண்டும்.

    *விருஷபம் :*

    விருஷபத்தில் 5- ரேகைகளும், 3 பிந்துக்களும் உள்ளன. அவற்றுள் 3− ரேகைகளையும், 3−பிந்துக்களையும் நீக்கினால், 2− ரேகைகளே உள்ளன.

    எனவே, அங்காரகன் கோசர ரீதியாய் விருஷபத்தில் சஞ்சரிக்கும் பொழுது 1/4பங்கு அசுபத்தைத் தருவான்.

    *மிதுனம் :*

    மிதுனத்தில் 3 − பிந்துக்களும், 5− ரேகைகளும் இருக்கின்றன. இவற்றுள் 3− பிந்துக்களையும், 3− ரேகைகளையும் நீக்கினால், மீதம் 2− ரேகைகள் உள்ளன.

    எனவே, அங்காரகன், மிதுனத்தில் கோசர ரீதியாகச் சஞ்சரிக்கும் பொழுது 1/4 பங்கு அசுபத்தைத் தருவான்.

    *கடகம் :*

    கடகத்தில் 4− ரேகைகளும், 4− பிந்துக்களும் உள்ளன. இவற்றை நீக்கி விட்டால் மீதம் ஏதுமில்லை.

    எனவே, அங்காரஹன் கடகத்தில் கோச ரீதியாகச் சஞ்சரிக்கும்பொழுது, சுபம், அசுபம் இரண்டையுமே கொடுப்பதில்லை.

    *சிங்கம் :*

    சிங்கத்தில் , 3− ரேகை, 3− பிந்துவை நீக்கினால், 2− பிந்துக்கள் மீதம் இருக்கும்.

    எனவே, அங்காரஹன், சிங்கத்தில் கோச ரீதியாக சஞ்சரிக்கும் பொழுது, 1/4 பங்கு சுப பலனைத் தருவான்.

    *கன்னி :*

    கன்னியில் 2- பிந்துக்களும், 6− ரேகைகளும் உள்ளன. 2− பிந்து, 2− ரேகையை நீக்கினால் மீதி 4 ரேகைகள் உள்ளன.

    எனவே, அங்காரஹன் கோசர ரீதியாக சஞ்சரிக்கும் பொழுது, 1/2 பங்கு அசுபன் ஆவான்.

    ரேகை என்பது கோடு. சுழிகள் (வட்டம்) என்பது பிந்துக்கள். கோட்டிற்கு பதிலாக புள்ளிகள் வைத்து காட்டப்பட்டுள்ளது.

    *தொடர்ச்சி அடுத்த பதிவில். !*

    மீண்டும் சந்திக்கலாம் !

    Sivajansikannan@gmail.com

    ReplyDelete