Sunday, 16 June 2024

7 குதிரைகள் ஓடும் போஸ்டரை எந்த திசையில் வைக்க வேண்டும்?



7 குதிரைகள் ஓடும் போஸ்டரை எந்த திசையில் வைக்க வேண்டும்? "இந்த" இடத்தில் மட்டும் மாட்டிடாதீங்க?
வீட்டில் செல்வம் பெருக 7 குதிரைகள் ஓடுவது போன்ற ஓவியத்தை எந்த திசையில் வைக்க வேண்டும் என்பது குறித்து தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள். இந்த குதிரை படத்தை எங்கே மாட்ட வேண்டும், எங்கே மாட்டக் கூடாது என்பது குறித்த தகவல்களும் கிடைத்துள்ளது.


: ஏழு குதிரைகள் ஓடும் படத்தை வீட்டின் எந்த திசையில் மாட்டி வைக்க வேண்டும். நம்முடைய வீட்டிலும் நம்மை சுற்றியும் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கக் கூடிய சில விசயங்களை நாம் கடைபிடிக்க வேண்டும்



அதில் முக்கியமானது ஏழு குதிரைகள் கொண்ட புகைப்படங்களை வீட்டில் வைப்பதன் மூலம் நமக்கு நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. சூரிய பகவான் ஏழு குதிரை ரதத்தில் சவாரி செய்யும் படத்தை வீட்டில் வைத்தால் வீடு சுபிட்சமாக இருக்கும்.

வீட்டில் நல்ல காரியங்கள் நடப்பதற்கு, நாம் கிழக்கு திசையை நோக்கி அந்த படத்தை மாட்டிவைக்க வேண்டும். நீங்கள் வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வுக்காகக் காத்திருந்தால் வடக்குத் திசையில் ஓடும் குதிரைகளின் படத்தை மாட்ட வேண்டும்.
வாழ்க்கையில் பெயர், புகழ், மரியாதை பெற வேண்டுமானால் வீட்டின் தெற்கு திசையில் ஓடும் குதிரைகளின் படத்தை மாட்டி வைக்கலாம்.

இது உங்களுக்கு வாழ்க்கையில் விரைவான முன்னேற்றத்தைத் தரும் உங்களின் புகழும் செல்வமும் பாராட்டப்படும். கடன் தொல்லையால் கஷ்டப்படுபவர்கள் ஒரு ஜோடி குதிரை பொம்மைகளை மேற்கு திசையில் வைக்கலாம். இதனால் மகாலட்சுமியின் அருள் வீட்டில் தங்கும் மன நிம்மதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.



ஏழு குதிரை ஓவியங்களின் பின்னணியில் சூரியன் உதிக்கும் வகையில் இருப்பது மங்களகரமாக கருதப்படுகிறது. இது ஒருவருடைய வாழ்க்கையில் வெற்றியையும் செல்வ வளத்தையும் அதிர்ஷ்டத்தையும் அதிகரிக்கச் செய்யும்.
சிவப்பு நிற பின்னணியோடு இருக்கக்கூடிய ஏழு குதிரைகளின் ஓவியம் செவ்வாய் கிரகத்தின் தாக்கத்தை ஏற்படுத்தும்.

சமூகத்தில் ஒருவருக்கு மரியாதையை அதிகம் ஏற்படுத்திக் கொடுக்கும். நீல நிறப் பின்னணியில் இருக்கக்கூடிய ஏழு குதிரைகள் ஓவியம் சனி கிரகத்தை குறிக்கிறது. இது நல்லிணக்கத்தையும் அமைதியையும் அதிகரித்துக் கொடுக்கும். படுக்கையறையில் இந்த ஏழு குதிரைகள் அடங்கிய ஓவியத்தை வைக்கக் கூடாது.

பூஜை அறை, படிக்கும் அறை, கழிப்பறையை எதிர்கொள்ளும் சுவர்கள், பிரதான கதவு ஆகியவற்றில் ஏழு குதிரை ஓவியத்தை வைப்பது வாஸ்து சாஸ்திரத்தின்படி சரியானதல்ல. ஏழு குதிரைகள் அடங்கிய இந்த ஓவியத்தை உங்களுடைய வரவேற்பறையில் வைக்கலாம். இந்த குதிரைகள் தண்ணீரில் ஓடாமல் திறந்த நிலத்தில் ஓடுவதுபோல இருக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment