Tuesday, 11 June 2024

வசம்பில் கல் உப்பு போட்டு வைத்தால் நடக்கும் மேஜிக்கை பாருங்க.. வீட்டில் செல்வம் தங்க சூப்பர் டிப்ஸ்

 
வசம்பில் கல் உப்பு போட்டு வைத்தால் நடக்கும் மேஜிக்கை பாருங்க.. வீட்டில் செல்வம் தங்க சூப்பர் டிப்ஸ்
வீட்டில் சில குறிப்பிட்ட பொருட்களை வைத்திருப்பதால், வறுமை நீங்கி குடும்பத்தில் சுபிட்சம் தழைக்கும் என்று நம்பப்படுகிறது.. இதற்குரிய காரணத்தையும் நம்முடைய முன்னோர்கள் அன்றே எடுத்துரைத்திருக்கிறார்கள்.


வீடுகளில், செல்வம் தழைக்க மணிபிளான்ட் போன்ற செடிகளை வளர்ப்பது வழக்கம்.. அதுபோல, வீட்டின் பூஜை அறை, பணம் சேமிக்கும் இடம் போன்றவற்றில் பணக்கஷ்டம் தீர வேண்டுமானால், மங்கலகரமான பொருட்களை நிலையாக வைத்திருகக் வேண்டும்.


முக்கியமாக, நேர்மறை ஆற்றலை அதிகரிக்க செய்யும் பொருட்களை, தெய்வீக சக்திகளை ஈர்க்கும் பொருட்களை வீட்டிற்குள் வைத்திருந்தாலே, குடும்பம் வறுமையில் சிக்காமல், அள்ள அள்ள செல்வம் பெருகிக் கொண்டேயிருக்குமாம். அப்படி பெரிதும் நம்பப்படும் பொருள்தான் வசம்பு.


கல் உப்பு மகத்துவம்: ஒரு சிறிய மண் பாத்திரத்தில் கல் உப்பை நிரப்பி, அந்த கல் உப்பிற்கு நடுவே ஒரே ஒரு சின்ன துண்டு வசம்பு வைக்க வேண்டும்.. வசம்பு வெளியே தெரியாத அளவுக்கு அதற்கு மேலும் உப்பைக் கொட்டி மூடிவிட வேண்டும்.. பிறகு இந்த மண் பாத்திரத்தின் மீது 520 என்ற எண்ணை மேல்புறத்திலும், 741 என்று எண்ணை கீழ்புறத்திலும் எழுதி, இதனை யாரும் பார்க்காதவாறு, சுவாமி படங்களுக்கு பின்புறம் மறைத்துவிட வேண்டுமாம்.

மாதம் ஒருமுறை இந்த மண் பாத்திரத்தை வெளியே எடுத்து, அதிலிருக்கும், உப்பு, வசம்பு இரண்டையும் எடுத்துவிட்டு, வேறு வசம்பு, உப்புவை மாற்றிவிட்டு, மறுபடியும் யார் கண்ணிலும் படாமல் வைக்க வேண்டும். இப்படி செய்துவரும்போது வீட்டில் பணம் தங்குதடையின்றி வந்து கொண்டே இருக்கும் என்று நம்பப்படுகிறது.. அதுமட்டுமல்ல, நாம் செலவு செய்த பணமும் இரட்டிப்பாகிவிடுமாம்.


மகாலட்சுமி: மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படும் உப்புவிற்கு நேர்மறை சக்திகளை ஈர்க்கும் ஆற்றல் அதிகமாகவே உண்டு.. வசம்பிற்கும் செல்வத்தை ஈர்க்கும் தன்மை அதிகம் என்பதால், இவை இரண்டையும் ஒன்றாக சேர்த்து வைக்க வேண்டும் என்கிறார்கள் பெரியவர்கள்.

இந்த வசம்பு வைத்து வேறொரு பரிகாரத்தையும் செய்வார்கள்.. வீட்டிலுள்ள கஷ்டம் நீங்கி, செல்வம் பெருக இந்த பரிகாரத்தையும் கடைப்பிடிக்கலாம். அதாவது, ஒரு சிறிய துண்டு வசம்புவை கையில் எடுத்துக் கொண்டு, பூஜை அறையில் விளக்கேற்றி பண கஷ்டம் நீங்கி பண வரவு அதிகரிக்க வேண்டும் என்று வேண்டி கொள்ள வேண்டும்.


1 ரூபாய் நோட்டு: பிறகு, கையிலுள்ள வசம்பினை 1 ரூபாய் நோட்டில் வைத்து சுருட்டி, ஒரு நூலில் கட்டிவிட வேண்டும். இதனை கல் உப்பு போட்டு வைத்திருக்கும் மண் பாத்திரத்தில் போட்டு, இதன்மீதும் சிறிது கல் உப்பினை கொட்டி, இந்த பாட்டிலை யார் கண்ணிலும் படாதவாறு மறைத்து வைக்க வேண்டும்.. இந்த கல் உப்பினை மட்டும் வார வாரம் மாற்றிக் கொண்டே வரவேண்டும்..

வசம்புடன் கல் உப்பும் சேர்த்து வைத்தால், மகாலட்சுமியின் ஆதரவு முழுமையாக கிடைத்து, வீட்டிலுள்ள பணக்கஷ்டங்கள் நீங்கிவிடும்.. தொடர்ந்து இதனை செய்து வந்தால், வீட்டிலும் பண வரவு அதிகமாக இருக்கும் என்கிறது ஆன்மீகம்.



வசம்பு வாசம்: அதேபோல மருத்துவ குணம் நிறைந்த வசம்பானது, மிகச்சிறந்த கிருமிநாசினியாகும்.. எப்பேர்ப்பட்ட கொடிய விஷத்தன்மையையும் அகற்றக்கூடிய சக்தி வசம்புவுக்கு உண்டு.. அதனால் ஒவ்வொரு வீடுகளிலும் கட்டாயம் இருக்கக்கூடிய அற்புதமான மூலிகை பொருள் வசம்பு என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment