Sunday 2 June 2024

புது வீட்டிற்கு பால் காய்ச்சும்...

*புது வீட்டிற்கு பால் காய்ச்சும் போது பாலில் இந்த 1 பொருளை மட்டும் போட்டு காய்ச்சினால் போதும், தினம் தினம் உங்கள் வீட்டில் சந்தோஷம் பால் போல பொங்கி வழியும்.!*

குடும்பத்தில் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து, ஒருவருடைய விருப்பங்களுக்கு மற்றவர்கள் மரியாதை கொடுத்து, அனுசரித்து சென்றாலே போதும். குடும்பத்தில் சந்தோஷம் தினம் தினம் பால் பொங்கி வழிந்து கொண்டே இருக்கும். இதுதவிர வீட்டில் இருக்கும் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் அனைவரும் மனம் விட்டு பேசக் கூடிய பழக்கத்தை கொண்டு வர வேண்டும். வாய் விட்டு சிரிக்க கூடிய பழக்கம் வரவேண்டும். ஒருவருக்கு ஒருவர் எந்த விஷயத்தையும் பேசி கலந்தாலோசிக்காமல், ‘இவங்க என்னைப்பற்றி இப்படி நினைத்திருப்பார்களோ! அப்படி நினைத்திருப்பார்களோ! என்று தனக்குத்தானே எதையாவது எதிர்மறையாக கற்பனை செய்து கொண்டு’, அடுத்தவர்கள் மேல் பழி போடும் பழக்கத்தை விட்டுவிட்டு, நேருக்குநேர் பிரச்சனைகளை பேசி தீர்த்துக் கொள்ளக் கூடிய குடும்பத்தில் சந்தோஷத்திற்கு ஒரு துளி அளவும் குறைவிருக்காது. மேல் சொன்ன இந்த விஷயத்தை மட்டும் உங்களுடைய வீட்டில் நீங்கள் பின்பற்றித்தான் பாருங்களேன். வாழ்க்கையில் ஏற்படக்கூடிய மாற்றத்தை. இந்த ஒரு நல்ல தகவலுடன் இன்றைய பதிவிற்குள் செல்வோமா.

தினம் தினம் வீட்டில் சந்தோஷம் பொங்கி வழிய வேண்டும் என்ற காரணத்தால் தான், மகாலட்சுமியின் அம்சம் பொருந்திய பசு மாட்டின் பாலை புது வீட்டிற்கு செல்லும்போது காய்ச்சும் வழக்கத்தை நாம் பின்பற்றி வருகின்றோம். புது வீடு பால் காய்ச்ச செல்லும்போது, சில்வர் பாத்திரத்தைப் பயன்படுத்த வேண்டாம். வெண்கலப் பாத்திரத்தில் பால் காய்ச்சுவது மிக மிக சிறப்பு. இல்லையென்றால் பித்தளை பாத்திரத்தில் பால் காய்ச்சலாம். வெள்ளி பாத்திரத்திலும் பால் காய்ச்சலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

சொந்த வீட்டில் இருப்பவர்களுக்கு அடிக்கடி வீடு மாற்ற வேண்டிய சூழ்நிலை இருக்காது. வாடகை வீட்டில் இருப்பவர்கள் அடிக்கடி வீடு மாறும் போது ஒவ்வொரு முறையும் புதிதாக ஒரு பாத்திரமாக வாங்க முடியாது. ஒரு பாத்திரத்தை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். அந்த பாத்திரத்தை எச்சில் படாமல் தனியாக எடுத்து வைத்துவிடுங்கள். மீண்டும் மீண்டும் வாடகைக்கு புது வீட்டில் பால் காய்ச்சும் போது அதே பாத்திரத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.

சரி, விஷயத்திற்கு வருவோம். பால் போல நமது குடும்பத்தில் செல்வ வளம் பொங்கி வழிய சந்தோஷம் பொங்கி வழிய நாம் இதை மட்டும் செய்தால் போதும். ஒரு வெள்ளி நாணயம் நமக்கு இந்த பரிகாரத்திற்கு தேவை. புதிதாக வாங்கப்பட்ட வெள்ளி நாணயத்தை வாங்கி வைத்துக் கொண்டால் மிகவும் நல்லது. அப்படி புதியதாக நாணயம் வாங்க முடியாதவர்கள் வசதியில்லாதவர்கள் சிறிய வெள்ளி மோதிரம் இருந்தால் கூட அதை நன்றாக சுத்தம் செய்து விட்டு இந்தப் பூஜைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். (மிக சிறிய அளவில் இரண்டு கிராம் அளவில் வெள்ளி நாணயம் இருந்தால் கூட போதும்.)

புது வீட்டில், அடுப்பில் பால் பாத்திரத்தை வைத்து பால் ஊற்றி காய்ச்சி பொங்கி வழியும் போது, அதில் இந்த வெள்ளி நாணயத்தை போட்டுவிடுங்கள். பால் பொங்கி வழியும்போது பாலுக்குள்ளே வெள்ளி நாணயம் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. தங்கத்தைவிட சுபிட்சத்தை கொடுக்கக் கூடிய பொருள் வெள்ளி. இப்படிப்பட்ட வெள்ளியை புது வீட்டில் முதன் முதலில் பால் காய்ச்சும் போது அந்தப் பாலில் போடுவது நம் வீட்டிற்கு லட்சுமி கடாட்சத்தையும் சுபீட்சத்தையும் கொடுக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக சிறிய குழந்தைகளுக்கு வெள்ளிப் பாத்திரத்தில் சாதம் ஊட்டுவார்கள். ஒருவேளை வீட்டில் இருப்பவர்கள் நோய் நொடி இல்லாமல் எதிர்ப்பு சக்தியோடு இருக்க வேண்டும் என்பதற்காக கூட இந்த பரிகாரத்தை நமக்கு, நம்முடைய முன்னோர்களால் சொல்லப்பட்டிருக்கலாம். ஆரோக்கிய ரீதியாக பார்த்து இந்த பரிகாரத்தை நீங்கள் செய்தாலும் சரி, ஆன்மீக ரீதியாக பார்த்து இந்த பரிகாரத்தை செய்தாலும் சரி, நம் குடும்பத்திற்கு இது நன்மையை மட்டுமே தரக்கூடிய பரிகாரம்.

இப்படி புது வீட்டிற்கு பால் காய்ச்ச வாங்கிய வெள்ளி நாணயத்தை, தினம்தோறும் நம் வீட்டில் பால் காய்ச்சும் போது கூட அந்த பாலில் போட்டு காய்ச்சி விட்டு ஞாபகமாக பாலிலிருந்து அந்த நாணயத்தை எடுத்து விட்டு, அதன் பின்பு அந்தப் பாலை நம் வீட்டில் இருப்பவர்களுக்கு பருகக் கொடுக்க வேண்டும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். குழந்தைகளுக்கு நாணயத்தோடு போட்டு பாலை ஊற்றி, குடிக்கக் கொடுத்து விட்டால் பின்பு விளைவுகள் விபரீதமாகி விடும். அந்த கவனம் நமக்கு கட்டாயம் இருக்க வேண்டும். நம்பிக்கை உள்ளவர்கள் கவனத்தோடு இந்த பரிகாரத்தை செய்து பலனடையலாம்.


No comments:

Post a Comment