Sunday, 16 June 2024

உங்கள் கனவில் பறவைகள் வருகின்றனவா?


 

புறா கனவில் வந்தால் இதுதான் அர்த்தமா? உங்க கனவில் புறாக்கள் வந்தால் "இதை" கவனியுங்க.. கனவு பலன்கள்
உங்கள் கனவில் பறவைகள் வருகின்றனவா? புறாக்கள் கனவில் வந்தால் அதற்கு என்ன பலன் தெரியுமா?

பறவைகள்: உதாரணத்துக்கு பறவைகளின் கீரீச் சத்தம் நம்முடைய கனவில் கேட்டால், மனதிற்கு மகிழ்ச்சியான சம்பவங்கள் நடக்க போவதாக அர்த்தம்.. மயில் பறப்பது போலவும், தோகையை விரித்து ஆடுவது போலவும் கனவில் வந்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படுமாம்..



அதைவிட, ஆந்தைகள் கூட்டமாக இருப்பதுபோல கனவில் கனவு கண்டால் விரைவில் நல்ல செய்தி குடும்பத்திற்கு வரப்போகிறது என்று அர்த்தம். ஆனால், ஒரே ஒரு ஆந்தையை மட்டும் கனவில் கண்டால் கெட்ட செய்தி வருமாம்.
குயில்கள்: குயில்கள் சண்டை போடுவதை போல் கனவு வரக்கூடாதாம்.. அதேபோல, கருங்குயில் கனவில் வருவதும் நல்லதில்லை என்கிறார்கள். கொக்கு கனவுகளில் வந்தால் விவசாயத்தில் விளைச்சல் அதிகரிக்கும்..

குருவியை ஜோடியாக கண்டால் நல்ல செய்தியும், குருவிக் கூட்டை கலைப்பது போன்று கனவு வந்தால் கெட்ட செய்தியும் ஏற்படுமாம்.. அந்தவகையில், கனவில் வந்துவிடவே கூடாத பறவை கழுகும், பருந்தும்தான்.. பிணம் தின்னும் கழுகை கனவில் கண்டால் அதைவிட ஆபத்து வரப்போவதாக அர்த்தமாம்.. இவைகள் அபசகுணங்களாக கருதப்படுகிறது..



புறாக்கள்: அந்தவகையில் புறாக்களை பற்றியும் கனவு பலன்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள்.. அதாவது, புறாக்கள் கூட்டமாக இருப்பதை போல கனவு வந்தால், குடும்ப உறவுகளில் ஏதோ சிக்கல் வரப்போகிறது என்று அர்த்தமாம்.. பறந்துகொண்டிருக்கும் புறாவை பிடிப்பதுபோல கனவு கண்டால், நண்பர்களின் நட்பு வட்டாரம் வலுப்படும்.. பிரிந்த நண்பர்களும் ஒன்றிணைவார்களாம்.

2 புறாக்கள் ஒன்றாக பறந்து கொண்டிருப்பது போல் கனவு கண்டால், நண்பர்களுக்குள் பிரிவு வரப்போகிறது என்று அர்த்தம். புறாவை வேடன் பிடிப்பது போல கனவு வருவது கெடுதலை உணர்த்தக்கூடியதாம்..


வெள்ளை புறா: வெள்ளைப் புறாவை கனவில் வந்தால், இடமாற்றம், தொழிலில் உயர்வு டிரான்ஸ்பர் போன்றவை நடக்கலாம்.. கருப்பு புறாவை கனவில் கண்டால் கெட்ட செய்தி, அதாவது துன்பமான செய்தி ஒன்று விரைவில் உங்களை தேடி வரப்போகிறது என்று அர்த்தமாம். புறாவை நீங்கள் பிடிப்பதற்காக முயற்சி செய்வது போல் கனவு கண்டால் புதிய நண்பர்கள் உங்களுக்கு அறிமுகம் ஆகப்போகிறார்கள் என்று அர்த்தமாம்..


No comments:

Post a Comment