Sunday, 22 September 2024

உங்கள் வீட்டில் சிலந்தி வலை பின்னியிருக்கிறதா? ஸ்பைடர் வெப் நன்மையா தீமையா?


உங்கள் வீட்டில் சிலந்தி வலை பின்னியிருக்கிறதா? ஸ்பைடர் வெப் நன்மையா தீமையா?
உங்கள் வீட்டில் சிலந்தி வலை இருக்கிறதா? இதனால் வாஸ்து சாஸ்திரம் என்ன சொல்கிறது என்பதை பார்க்கலாம். சிலந்தி வலை இருந்தால் செல்வம் நிலைக்காது என்ற ஒரு கருத்து உண்மையா என்பதையும் தெரிந்து கொள்வோம்.

வீடு என எடுத்துக் கொண்டால் அழையா விருந்தாளிகளாக பல்லி, கரப்பான் பூச்சி, எறும்பு உள்ளிட்டவை வரத்தான் செய்யும். இவை எங்கே உணவு பொருட்களில் விழுந்துவிடுமோ என்ற அச்சம் அனைவருக்கும் ஏற்படும்.





அது போல் சிலந்தியும் வீடுகளில் இருக்கிறது. வீட்டின் சுவர்களில் கூடு கட்டி குடியிருக்கும். இதை ஒட்டடை என்றும் சொல்வோம். வீடு சுத்தமாக இருந்தால் நேர்மறையான ஆற்றல் இருக்கும் என்பது ஜோதிடர்களும் வாஸ்து நிபுணர்களும் சொல்லும் விதியாகும்.


வாஸ்துபடி வீடுகளில் சிலந்தி வலை இருந்தால் செல்வம் நிலைக்காது என தெரிவிக்கிறார்கள். இந்த சிலந்தி வலைகள் எதிர்மறை ஆற்றலை வீட்டிற்குள் ஈர்ப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனால் செல்வத்தின் அதிபதியான லட்சுமி வீட்டினுள் வருவதில்லை. இதனால் எவ்வளவு சம்பாதித்தாலும் பணம் செலவாகிக் கொண்டே இருக்கும்.

வரவு எட்டணா, செலவு பத்தனா போல் தான் இருக்கும். அவ்வப்போது நிதி சுமையும் கடன் சுமையும் ஏற்படும். வீட்டில் சிலந்தி வலை இருந்தால் வீட்டில் இருப்பவர்களுக்கு உடல்நலக் குறைவு, சுவாச கோளாறு உள்ளிட்டவை ஏற்படும் என தெரிவிக்கிறார்கள்
படுக்கை அறையில் சிலந்தி வலை இருந்தால் அதை முதலில் அகற்றிவிட வேண்டும். அந்த சிலந்தி வலை இருந்தால் மன அழுத்தத்தை ஏற்படுத்தும். கணவன்- மனைவி இடையே விரிசலை ஏற்படுத்தும். வீட்டில் அதிக குழப்பத்தை ஏற்படுத்தும். அது போல் சிலந்தி வலைகள் பூஜை அறையிலும் இருக்கவே கூடாது. அவ்வாறு இருந்தால் துரதிருஷ்டத்தை கொண்டு வரும்.


அது போல் சமையல் அறையில் இருந்தால் குடும்பத்தில் உள்ளவர்கள் நோய் வாய்ப்படுவார்கள். குறிப்பாக அடுப்புக்கு மேலே உள்ள சுவற்றில் சிலந்தி வலை பின்னாதவாறு அடிக்கடி சுத்தம் செய்து கொண்டே இருக்க வேண்டும். இந்த சிலந்தி வலைகள் வாஸ்து தோஷங்களை ஏற்படுத்துவதாக சொல்லப்படுகிறது. இதனால் குடும்பத்தில் கஷ்டத்தை மட்டுமே கொடுக்கும்.

அது போல் சிலந்தி வலைகள் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் கூட சுத்தம் செய்யக் கூடாது என்கிறார்கள். சிலந்தி வலைகளால் எதிர்மறை எண்ண் உருவாகும் என்றால் எந்த நாளிலும் சுத்தம் செய்யலாமே என்பது ஒரு சிலரது கருத்தாக உள்ளது.


No comments:

Post a Comment