Sunday, 22 September 2024

தூங்கி எழுந்ததும் குதிகால் வலி இருக்கா?


தூங்கி எழுந்ததும் குதிகால் வலி இருக்கா? சூப்பரான மருந்து இந்தப் பழம்!
பலருக்கும் தூங்கி எழுந்ததும் குதிகாலில் வலி இருக்கும். அந்த வலி போக சூப்பரான மருந்து என ஒரு பழத்தை மருத்துவர் கு. சிவராமன் பரிந்துரைத்துள்
சிலருக்கு தூங்கி எழுந்ததும் குதிகால் வலிக்கும் இதற்கு சிறந்த மருந்து செவ்வாழைப் பழம் என்று மருத்துவர் கு. சிவராமன் கூறுகிறார்.


பலருக்கும் தூங்கி எழுந்ததும் குதிகாலில் வலி இருக்கும். அந்த வலி போக சூப்பரான மருந்து என ஒரு பழத்தை மருத்துவர் கு. சிவராமன் பரிந்துரைத்துள்ளார். 

இயற்கை உணவுகளையும் சித்த மருத்துவத்தையும் பல நிகழ்ச்சிகளில் பேசி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் மருத்துவர் கு. சிவராமன். பல பயனுள்ள மருத்துவக் குறிப்புகளை தனது பேச்சின் ஊடே தெரிவித்துக்கொண்டே செல்வார். பல உணவுப் பொருட்களின் மருத்துவக் குணங்களை அறிமுகப்படுத்துவார்.

அந்த வகையில், சிலருக்கு தூங்கி எழுந்ததும் குதிகால் வலிக்கும் இதற்கு சிறந்த மருந்து செவ்வாழைப் பழம் என்று மருத்துவர் கு. சிவராமன் கூறுகிறார்.

செவ்வாழைப் பழத்தின் சிறப்பு குறித்து மருத்துவர் கு. சிவராமன் கூறுகையில், “சில பேருக்கு குதிகால் வலி இருக்கும். கால்கேனியஸ்பர் என்று சொல்வார்கள். தூங்கி எழுந்த உடனே காலை ஊன்றினால்,  குதிகாலில் வலி இருக்கும். தூங்கி எழுந்து கொஞ்ச தூரம் நடக்கும்போது, வலி ரொம்ப இருக்கிறது என்று சொல்வார்கள். அப்புறம், கொஞ்ச நேரம் ஆன பிறகு வலி குறையும். அப்புறம் பழையபடி மாலையில் வலிக்கத் தொடங்கிவிடும். ஒரு சின்ன முள்ளு மாதிரி உருவாகி அது போய் கீழ் இருக்கிற சதைப் பகுதியைக் குத்திக்கொண்டே இருக்கும். இந்த குதிகால் வாதத்திற்கு செவ்வாழைப் பழம் ஒரு அருமருந்து.

குதிகால் எலும்பினுடைய முள் குத்தி குதிகாலினுடைய சதைகள் புண்ணாகி போயிருக்கும். அதை மாற்றக்கூடிய உணவுப் பொருளாக செவ்வாழைப் பழம் இருக்கிறது. செவ்வாழைப் பழத்தால் இப்படி ஒரு முக்கியமான பயன் இருக்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.

உங்களுக்கு குதிகால் வலி இருக்கிறதா, அப்படியென்றால் மறக்காமல் செவ்வாழைப் பழம் சாப்பிடுங்கள், குதிகால் வலியில் இருந்து விடுதலை பெறுங்கள்.


No comments:

Post a Comment