Monday, 23 September 2024

சமையலறையில் இதை மட்டும் பெண்கள் செய்யாதீங்க.. வறுமை வந்துடும்.. பாத்திரம் கழுவறீங்களா?


சமையலறையில் இதை மட்டும் பெண்கள் செய்யாதீங்க.. வறுமை வந்துடும்.. பாத்திரம் கழுவறீங்களா? இதை கவனியுங்க
 சமையலறையில் சில விஷயங்களை தெரிந்தோ, தெரியாமலோ நாம் செய்வதால் வறுமையில் சிக்கிவிடுகிறோம்.. எனவே, சில பொருட்களின் மீதும், சில விஷயங்கள் மீதும் கூடுதல் கவனம் செலுத்தினாலேபோதும்.. குடும்பத்தில் மகிழ்ச்சி தழைக்கும் என்பார்கள்.

கிழக்கு பகுதியில் சமையலறை வரக்கூடாது வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும் என்பார்கள்.. அதனால் தென்கிழக்குதான் சமையலறைக்கு சரியான இடம். தென்மேற்கிலும், வடகிழக்கிலும் சமையலறை இருந்தால், குடும்பத்தில் வறுமை பிடித்துவிடும்.

spirituality vastu tips kitchen
இந்த 3 பறவைகளின் படங்களை வீட்டில் மாட்டி வையுங்க.. இதுதான் சரியான திசை.. நடக்கும் அதிசயத்தை பாருங்க
"இந்த 3 பறவைகளின் படங்களை வீட்டில் மாட்டி வையுங்க.. இதுதான் சரியான திசை.. நடக்கும் அதிசயத்தை பாருங்க"
வடகிழக்கு: பாத்திரம் கழுவும் குழாய் வடகிழக்கில் அமைப்பது நல்லது. இல்லாவிட்டால் பெண்களுக்கு ஆரோக்கிய குறைபாடு ஏற்படும். வடகிழக்கில் சமையலறை வைத்தால் குடும்பத்தின் பொருளாதார நிலை பாதிக்கும். ஒருவேளை தவறான சமையல் அறை அமைப்பில் குடியிருக்க நேர்ந்தால், ஏழைகளுக்கு அன்னதானம் கொடுக்கலாம். இதனால் குடும்பத்தில் வறுமை ஏற்படாது.


சூரிய வெளிச்சம் சமையலறைக்குள் விழும்படியாக இருக்க வேண்டும். அதாவது, சமையலறை ஜன்னல் கிழக்கு திசையில் இருக்க வேண்டும். உடைந்த பொருட்கள், நசுங்கிய பாத்திரங்கள், உடைந்த கண்ணாடி, மருந்துகள், குப்பைகள், தண்ணீர் சிந்தும் குழாய்கள், போன்றவை கிச்சனில் வைத்திருந்தால், பணக்கஷ்டம் வரும்.

உப்பு, அரிசி: உப்பு, அரிசி, பருப்பு, புளி போன்ற பொருட்கள் கொஞ்சமாவது வைத்திருக்க வேண்டும். முக்கியமாக வெள்ளிக்கிழமைகளில் இந்த பாத்திரங்கள் காலியாக இருக்கக்கூடாது. அடுப்பு, உப்பு ஜாடி, அஞ்சறைப் பெட்டி, அரிசி கொட்டி வைத்திருக்கும் பாத்திரம், அரிவாள்மனை, கத்தி போன்றவை எப்போதும் கழுவி சுத்தமாகவே இருக்க வேண்டும்.



இரவு சமையல் முடிந்ததும், அடுப்பு மேடையையும் கழுவி விட வேண்டும். அதேபோல, சமையலறையில் கருப்பு நிறத்தைப் பயன்படுத்துவது அசுபமானது என்று வாஸ்து விதிகள் சொல்கின்றன.. அதற்கு பதிலாக, பச்சை, ஆரஞ்சு மற்றும் சிவப்பு போன்ற பிரகாசமான வண்ணங்களை பயன்படுத்தலாம்.

மார்பிள் ஓடுகள்: அதேபோல, சமையலறையில் ஸ்கை ப்ளூ அல்லது நீல நிற மார்பிள் ஓடுகளை தவறுதலாக பயன்படுத்த வேண்டாம்... சமையலறையில் அதிக தண்ணீர் வரவும் கூடாது.. கிச்சனில் பாத்திரங்களை கழுவாமல் இருந்தால் நல்லது.. பாத்திரங்களை கழுவுவதற்கென்றே ஒரு தனி இடத்தை ஒதுக்க வேண்டுமாம்.



பெண்கள் கிச்சனில் சமைக்கும்போது, அடிக்கடி டேஸ்ட் பார்க்கக்கூடாதாம்.. இது அன்னபூர்ணாதேவிக்கு கோபத்தை உண்டுபண்ணுமாம்.. எப்போதுமே பெண்கள் குளித்துவிட்டு சுத்தம் செய்தபிறகே சமையலறைக்குள் நுழைய வேண்டும்.. குறிப்பாக, அழுக்கு ஆடைகளுடன் அல்லது குளிக்காமல் சமையலறைக்குள் நுழையவே கூடாது. அதேபோல, கிச்சனில் சமைக்காமல் இருக்கக்கூடாது.. தினமும் ஏதாவது சமைத்து சாப்பிட வேண்டும்.


அடுக்குகள்: தண்ணீர் குடம், வாட்டர் ப்யூரிஃபையர் போன்ற கருவிகளை வடகிழக்கு திசையில் அமைக்கலாம்.. எப்போதும் சமைத்த உணவுகளை அடுப்பிற்கு வலது புறத்திலேயே வைக்க வேண்டும். காரணம், அன்னபூரணி வாசம் செய்யும் திசை இதுவாகும்.. சமையல் பொருட்கள் சேமித்து வைக்கும் அடுக்குகள், சமையல் அறையின் மேற்கு அல்லது தெற்கு பக்கம் உள்ள சுவற்றில் அமைப்பது சிறப்பானதாகும்.


No comments:

Post a Comment