Thursday, 31 October 2024

காற்றுத் தர குறியீட்டு எண்ணை(AQI)

இந்தியா17 செப்டம்பர் 2014ல், சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் பருவநிலை அமைச்சர், பிரகாஷ் ஜாவேத்கர் புதுதில்லியில் காற்றுத் தர குறியீட்டு எண்ணை(AQI) அறிமுகம் செய்துவைத்தார். அனைத்து குடிமகன்களும் தங்கள் சுற்றுப்புற காற்றின் தரத்தினை எளிதில் அறியும் வண்ணம் 'ஒரே எண் - ஒரே நிறம் - ஒரே விளக்கம்' என வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த குறியீட்டு எண் திட்டமானது அரசாங்கத்தின் தூய்மை கலாச்சார எண்ணத்தினை பிரதிபலிக்கிறது.

(National Air Monitoring Program (NAMP)) நாடு முழுவதும் 240 நகரங்களில் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியமானது மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்துடன் இணைந்து மேற்கொள்கிறது. சில நகரங்களில் நிகழ்நேர தகவுகளை தரும் வண்ணம் தொடர்ச்சியாக கண்காணிக்கும் அமைப்புகளை ஏற்படுத்தியுள்ளது.


தேசிய சுற்றுப்புற காற்றுக் தர நிர்ணயமானது எட்டு காற்று மாசுபடுத்திகளான (PM10, PM2.5, NO2, SO2, CO, O3, NH3, மற்றும் Pb) போன்றவற்றின் 24 மணிநேர சராசரி கால அளவினை வைத்து பின்வரும் ஆறு பகுப்புகளாக பிரிக்கப்படுகிறது. அவை, நல்ல, திருப்திகரமான, மிதமான மாசுபாடு, மோசமான, மிகமோசமான, கடுமையான போன்றவை ஆகும்.

கா.த.சு பகுப்பு, மாசுபாடுகள் மற்றும் சுகாதாரப் புள்ளிகள்
AQI பகுப்பு (விகிதாச்சாரம்)
AQI உடல்நல பாதிப்புகள்
நல்ல (0-50) குறைந்த பாதிப்பு
திருப்திகரமான (51-100) எளிதில் நோய்வாய்ப்படக்கூடிய நபர்களுக்கு மூச்சுக் கோளாறு ஏற்பட வாய்ப்புண்டு
மிதமான மாசு (101–200) நுரையீரல் நோய் (ஆஸ்துமா), இருதய நோய் கொண்டவர்களுக்கும், மேலும் சிறார் மற்றும் முதியோர்களுக்கும் மூச்சு விடுவதில் கோளாறு ஏற்படுத்தும்
மோசம் (201-300) மாசுக்காற்றினை தொடர்ச்சியாக நுகர்வோருக்கு மூச்சு கோளாறும், ஏற்கனவே இருதய நோய் உடையோருக்கு அதிக கோளாறுகளையும் ஏற்படுத்தும்
மிக மோசம் (301-400) மாசுக்காற்றினை தொடர்ச்சியாக நுகர்வோருக்கு மூச்சு சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படும், மேலும் இருதய, நுரையீரல் நோய் உடையவர்களுக்கு மிகமோசமான விளைவுகளை ஏற்படுத்தும்
கடுமையான (401-500) நல்ல உடல்நலத்துடன் இருக்கும் நபர்களுக்கு மூச்சு சம்பந்தமான நோய்கள் ஏற்பட வாய்புண்டு, மேலும் நுரையீரல்/இருதய நோய் உடையோர்களுக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்

No comments:

Post a Comment