Thursday, 31 October 2024

கேதார கெளரி விரதம் எப்போது ? யாரெல்லாம் இந்த விரதம் கடைபிடிக்கலாம்?



கேதார கெளரி விரதம்  எப்போது ? யாரெல்லாம் இந்த விரதம் கடைபிடிக்கலாம்?
மிக உன்னதமான சிவ பெருமானுக்குரிய விரதங்களில் ஒன்றாக போற்றப்படுவது கேதார கெளரி விரதம். பக்தர்கள் மட்டுமின்றி கடவுள்கள் பலரும் இந்த விரதத்தை கடைபிடித்து வேண்டிய வரங்களை பெற்றதாக புராணங்கள் சொல்கின்றன. பெரும்பாலும் கேதார கெளரி விரதம் தீபாவளியுடன் சேர்ந்து வருவதால் இந்த நாளில் லட்சுமி பூஜையுடன் சேர்த்தே கேதார கெளரி விரதத்தையும் பக்தர்கள் கடைபிடிப்பதுண்டு.

Authored byமோகன பிரியா | Samayam Tamil 21 Oct 2024, 4:17 pm
Follow
இந்த ஆண்டு கேதார கெளரி விரதம் எப்போது வருகிறது, எதற்காக இந்த விரதம் கடைபிடிக்கப்படுகிறது. எத்தனை நாட்கள் கேதார கெளரி விரதம் இருக்க வேண்டும், கேதார கெளரி தோன்றி வரலாறு என்ன என்பது போன்ற விபரங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

கேதார கெளரி விரதம்  எப்போது ? யாரெல்லாம் இந்த விரதம் கடைபிடிக்கலாம்?



கேதார கெளரி விரதம் :

இந்துக்களின் மிக முக்கியமான விரதங்களில் ஒன்று கேதார கெளரி விரதமாகும். குறிப்பாக தென்னிந்தியாவில் மிகவும் விசேஷமாக இந்த விரதம் கொண்டாடப்படுவது வழக்கம். சிவ பெருமானின் அருளை வேண்டி கடைபிடிக்கப்படும் விரதங்களில் முக்கியமான விரதம் என்பதால் இதனை கேதாராஸ்வரர் விரதம் என்றும் சொல்லுவதுண்டு. இது விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்றி, வேண்டும் வரங்கள் அனைத்தையும் வழங்கும் அற்புதமான விரதமாகவும் கருதப்படுகிறது. குறிப்பாக திருமணமான பெண்கள் இந்த விரதத்தை கடைபிடிப்பது மிகவும் சிறப்பானதாகும்.

கேதார கெளரி விரதம் தோன்றிய கதை :

முப்பத்து முக்கோடி தேவர்களும், 48,000 ரிஷிகளும் சிவனையும், பார்வதியையும் வழிபட்டு வந்தனர். ஆனால் பிருங்கி மகரிஷி மட்டும் பார்வதியை விடுத்து, சிவனை மட்டும் தனியாக வழிபட்டு வந்தார். இது பற்றி சிவ பெருமானிடம் விளக்கம் கேட்டாள் பார்வதி. அதற்கு பதிலளித்த சிவ பெருமான், பிருங்கி மகரிஷி மோட்சத்தை மட்டுமே வேண்டுகிறார். அதனால் தான் என்னை மட்டுமே அவர் வழிபடுகிறார் என்றார். இதனை தனக்கு ஏற்பட்ட அவமரியாதையாக கருதிய பார்வதி, கைலாயத்தில் இருந்து புறப்பட்டு, பூமியில் கெளதம முனிவரின் ஆசிரமத்திற்கு வந்தால். அம்பாளின் மனக்குறையை கேட்டு தெரிந்து கொண்ட கெளத முனிவர், கேதார கெளரி விரதம் பற்றி கூறினார். அவரின் ஆலோசனையின் படி அம்பிகையும் கேதார கெளரி விரதத்தை கடைபிடித்தாள்.


கேதார கெளரி விரத பலன்கள் :
ஐப்பசி மாத அஷ்டமியில் துவங்கி 21 நாட்கள் கேதார கெளரி விரதத்தை கடைபிடிக்க வேண்டும். ஐப்பசி மாத அமாவாசையில், அதாவது தீபாவளி திருநாளில் இந்த விரதத்தை நிறைவு செய்பவர்களின் விருப்பங்கள் அனைத்தையும் அம்பிகையும், ஈசனும் நிறைவேற்றி வைப்பார்கள் என்பது ஐதீகம். குறிப்பாக திருமணம் வரம், கணவன்-மனைவி ஒற்றுமை, குடும்ப ஒற்றுமை, செல்வ வளம் உள்ளிட்டவற்றிற்காக இந்த விரதம் இருக்கப்படுவது வழக்கம். இந்த விரதத்தை உண்மையான பக்தியுடன், உரிய முறைகளை பின்பற்றி கடைபிடித்தால் அவர்கள் கேட்கும் வரங்கள் அனைத்தும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

No comments:

Post a Comment