ஆதார் கார்டில் எத்தனை முறை பெயர் மாற்றம் செய்யலாம்? லிமிட் முடிந்து பிழை இருந்தால் என்ன செய்வது?ஆதார் கார்டு இந்தியாவில் இன்றியமையாத ஆவணமாக மாறிவிட்டது. சிம் கார்டு வாங்குவது, வங்கி கணக்கு தொடங்குவது, பாஸ்போர்ட் அல்லது அடையாளச் சான்றாக பயன்படுவது என உங்களுடைய தேவை எதுவாக இருந்தாலும் அவற்றுக்கு ஆதார் கார்டு முக்கியமானது. அதன் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு உங்கள் தகவல்களை புதுப்பித்த நிலையில் வைத்திருப்பது அவசியம். ஆனால் உங்கள் பெயர் அல்லது தனிப்பட்ட விவரங்களை மாற்ற வேண்டி இருந்தால் அதற்கு UIDAI சில வரம்புகளை நிர்ணயித்துள்ளது. இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஆதார் கார்டில் உள்ள பெயர், பிறந்த தேதி, மொபைல் நம்பர், முகவரி உள்ளிட்ட முக்கிய விவரங்களை புதுப்பிக்க பரிந்துரைக்கிறது. அதுவும் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த விவரங்களில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் அவற்றை சரி செய்து கொள்ள அனுமதிக்கிறது. இந்த புதுப்பிப்புகளை ஆன்லைனில் அல்லது ஆதார் பதிவு மையங்கள் மூலமாக எளிதாக செய்யலாம். உங்கள் ஆதார் தகவல்களை நீங்கள் புதுப்பிக்க வேண்டும் என்றால் தற்போது ஒரு சிறந்த நேரம். ஏனெனில் அக்டோபர் 2024 வரை myAadhaar போர்டல் மூலமாக இலவசமாக ஆன்லைன் புதுப்பிப்புகளை செய்து கொள்ளலாம். இதன் மூலம் பயனர்கள் எந்தக் கட்டணமும் இல்லாமல் தங்கள் பிழைகளை திருத்தவோ அல்லது விவரங்களை புதுப்பிக்கவும் முடியும். பெயர் மாற்றத்திற்கான கட்டுப்பாடுகள்: உங்கள் ஆதார் கார்டில் பெயரை மாற்றும் போது எத்தனை முறை மாற்றம் செய்யலாம் என்பதற்கு வரம்புகள் உள்ளன. வாழ்நாளில் 2 முறை மட்டுமே உங்கள் பெயரை புதுப்பிக்க முடியும். நீங்கள் 3-வது முறையாக மாற்ற வேண்டும் என்றால் அதற்கு உங்கள் பிராந்திய UIDAI அலுவலகத்தின் சிறப்பு அனுமதி தேவைப்படும். மேலும் குறிப்பிட்ட சில சூழ்நிலையில் மட்டுமே மாற்றம் செய்ய முடியும். Advertisement வரம்பற்ற முகவரி மாற்றங்கள்: பெயர் மாற்றங்களைப் போலன்றி, உங்கள் முகவரியை எத்தனை முறை வேண்டுமானாலும் புதுப்பிக்கலாம். நீங்கள் UIDAI இன் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தைப் பயன்படுத்தி தேவைக்கேற்ப பல முகவரி மாற்றங்களைச் செய்யலாம். இதெல்லாம் உங்களுக்கே ஓவரா இல்ல? இந்த வீட்டுக்கு ரூ.45,000 வாடகையா? டிரெண்டிங் வீடியோ..! செயலாக்க நேரம்: ஆதார் கார்டு விவரங்களுக்கான பெரும்பாலான புதுப்பிப்புகள் விரைவாக செயலாக்கப்படுகின்றன. சுமார் 90% கோரிக்கைகள் 30 நாட்களுக்குள் முடிக்கப்படும். 90 நாட்களுக்குப் பிறகும் உங்கள் கோரிக்கை செயல்படுத்தப்படவில்லை என்றால், 1947 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம். உங்கள் ஆதார் கார்டு தகவலைப் புதுப்பித்த நிலையில் வைத்திருப்பது சுமூகமான பரிவர்த்தனைகளுக்கும் உங்கள் அடையாளத்தை சரிபார்க்கவும் இன்றியமையாதது. துல்லியமான விவரங்களை உறுதிசெய்வது எதிர்காலத்தில் நேரத்தையும் சிக்கலையும் மிச்சப்படுத்த உதவும்.
No comments:
Post a Comment