வீட்டில் நீங்கள் வைக்காமலேயே! துளசி செடி திடீரென வளர்ந்துவிட்டதா? அதற்கு என்ன அர்த்தம் உங்கள் வீட்டில் துளசி செடி திடீரென முளைத்துவிட்டால் எத்தனை நன்மைகள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அதே நேரம் துளசி வாடினாலோ அல்லது சரியாக வளரவில்லை என்றாலோ உங்கள் வீட்டில் கெட்ட சக்தி இருப்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
பரந்தாமனுக்கு மிகவும் பிடித்த மூலிகைகளில் ஒன்று துளசி செடி. இது இந்துக்களுக்கு புனிதச் செடியாகும். இது மருத்துவ குணங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. இந்த துளசி சளி தொல்லை, இருமல் தொல்லை, நுரையீரல் பிரச்சினைகளுக்கு உகந்த மூலிகையாகும்.
spirtuality thulasi
வீடுதோறும் முற்றத்தில் துளசி செடி இருக்க வேண்டும். அதை அன்றாடம் விளக்கேற்றி வழிபட வேண்டும். துளசி செடி வாடினால் அல்லது சரியாக வளராவிட்டாலோ உங்கள் வீட்டில் எதிர்மறை ஆற்றல் இருப்பதாக கூறப்படுகிறது.
அதனால்தான் துளசியை மிகவும் கவனமாக வளர்க்கிறார்கள். துளசி வீட்டில் இருந்தால் எதிர்மறை சக்திகள் வருவதற்கே அஞ்சும். நாம் எந்தவித முயற்சியும் செய்யாமலேயே சில நேரங்களில் துளசி செடி திடீரென வளரும். அவ்வாறு வளர்வதற்கு சில அறிகள் உள்ளன. இதனால் லட்சுமி தேவியின் ஆசிகள் அதிகமாக கிடைக்கும்.
அதே நேரத்தில் இந்தச் செடியை சுத்தமான இடத்தில் வளர்க்க வேண்டும். அசுத்தமான இடத்தில் வளர்த்தால் அதை அங்கிருந்து அப்புறப்படுத்தி, சுத்தமான இடத்தில் நட்டுவிட வேண்டும். வீட்டில் உள்ள துளசி, திடீரென பச்சை பசேல் என மாறினால் உங்கள் பொருளாதாரத்தில் ஏற்றம் காண்பீர்கள். அது போல் துளசி செடி பூப்பதும் மங்களகரமானது.
இந்த துளசி செடி பூத்தால் வீட்டில் மகிழ்ச்சி மற்றும் வளமையை கொண்டு வரும். துளசி இலை மற்றும் மலர்கள் லட்சுமி தேவ மற்றும் விஷ்ணு வழிபாட்டில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. ஒருவர் வீட்டில் துளசி செடி இருந்தாலே அது புண்ணியம். அந்த வீட்டில் அகால மரணம், வியாதி முதலியவை ஏற்படாது. துளசிச் செடிகளைத் திருமாலின் அம்சமாக மதித்து பூஜிக்க வேண்டும். துளசியை அர்ச்சனை செய்து பூஜிப்பவர்களுக்கு மறுபிறவி கிடையாது.
துளசியை பூஜித்ததால்தான் சீதைக்கு ராமர் கணவராக கிடைத்தார் என்பது புராணம். எந்த இடத்தில் துளசிச் செடி வளர்ந்திருக்கிறதோ அங்கே மும்மூர்த்திகளுடன் சகல தேவதைகளும் வாசம் செய்கிறார்கள். சூரியனை கண்டதும் இருள் மறைவது போல் துளசியின் காற்றுப்பட்டாலே பாவங்களும் நோய்களும் விலகிவிடும். துளசி இலையை பிரசாதமாக நினைத்து உண்போருக்கு சகல பாவங்களும் தொலையும்.
No comments:
Post a Comment