Monday, 14 October 2024

வீட்டிற்கு தினமும் காகம் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா..?



வீட்டிற்கு தினமும் காகம் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா..?  சாஸ்திரம் சொல்வது இதுதான்!
வீட்டிற்கு தினமும் காகம் வருவது நல்லதா என்று இந்த பதிவில் பார்க்கலாம்.



காகங்களில் பொதுவாக மூன்று வகையான காக்கை வகைகள் உள்ளன. அதாவது, உடல் முழுவதும் கருமை நிறம் கொண்ட அண்டங்காக்கை வகை. அதன் பின் கழுத்தில் சாம்பல் நிறம் கொண்ட மணி காக்கை. அதோடு அனைவராலும் அதிசயமாக பார்க்கப்படும் அரிதான வெள்ளை காக்கை. அந்த வகையில் வீட்டிற்கு தினமும் காகம் வருவது நல்லதா என்று இந்த பதிவில் பார்க்கலாம்.


சனி பகவானின் வாகனமாக திகழும் காகங்கள் நமது ஜாதகத்தோடு மிகவும் தொடர்புடையதாக உள்ளது. மேலும், பித்ருக்களின் வடிவமாக காக்கைகள் உள்ளன. அதாவது நம் முன்னோர்கள் அதாவது இறந்து போனவர்கள் நம்மிடையே காகங்களாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள் என்பது நாம் அனைவரும் ஆழமாக நம்பக்கூடிய ஒன்றாகும்.


அதேபோல், காகங்களும் நாம் அளிக்கும் உணவுகளை பெற்றுக் கொண்டு பித்ருக்களின் வடிவமாக நமக்கு ஆசிகளையும் வழங்குகிறது. அதாவது காக்கைகள் பற்றி யாரும் ஒரு மூடநம்பிக்கை என்று எளிதில் கடந்து விட முடியாது. காகங்களின் குறிப்புகளை உணர்ந்து அதன் பலன்களை அறியலாம்.


ஒரு கருப்பு காகம் (அண்டங்காக்கை) தனிப்பட்ட முறையில் நமது வீடுகளில் அமர்ந்து கரைகிறது என்று சொன்னால் அது மிக தீய சகுனம் ஆகும். அதேபோல் ஒரு மனிதனின் தலை மேல் ஒரு காக்கை தொட்டுவிட்டால் அதுவும் தீய சகுனம் நமக்கோ நமது குடும்பத்தாருக்கும் ஏதோ ஒரு ஆபத்து நிகழ்வதற்கான அறிகுறியாகும்.



அதேபோல வெள்ளை காகங்கள் காகங்களை பார்ப்பது ஜோதிட கணிப்பின்படி ஒரு தீய சகுனத்தை குறிப்பதே ஆகும். குறிப்பாக ஒரு வெள்ளை காகம் ஆனது தனியாக தென்பட்டால் அது நாட்டிற்கும் தீய சகுனத்தை குறிப்பதே ஆகும் என்று தெரிவித்தார் ஜோதிட கணிப்பு சாஸ்திரங்கள் கூறுகின்றன.


நாட்டுப்புறக் கலைகளின் 
அதனைத் தொடர்ந்து மணி காக்கை என்று கூறப்படும் கழுத்தில் சாம்பல் நிறம் கொண்ட காக்கைகள் வீட்டில் அமர்ந்து கரைவது நல்ல சகுனத்திற்கு உகந்ததாகும்.


மணி காகம் தினந்தோறும் வீட்டிற்கு வந்து செல்வது நன்மை பெருகி வீடு வளர்ச்சி பாதையில் செல்வதற்கான அறிகுறியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவ்வாறு தினந்தோறும் காகம் வீட்டிற்கு வந்தால் வீட்டில் ஏதோ நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும் என்றும் ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.


No comments:

Post a Comment