Monday 14 October 2024

வெஸ்டர்ன் டாய்லெட்டுகளில் இரண்டு பட்டன்கள் இருப்பது ஏன்?... எவ்வாறு பயன்படுத்த வேண்டும்?



வெஸ்டர்ன் டாய்லெட்டுகளில் இரண்டு பட்டன்கள் இருப்பது ஏன்?... எவ்வாறு பயன்படுத்த வேண்டும்?

பொது கழிவறைகளை அதிகமான மக்கள் பயன்படுத்துவார்கள் என்ற சூழலில், அவர்களது பிறப்புறுப்பானது டாய்லெட் சீட் மீது உரசுவதை தவிர்க்கும் வகையிலும், சிறுநீர் அதிகம் தெறித்து விடாமல் இருக்கவும் இவ்வாறு இடைவெளி விடப்படுகிறது.


 .

வீடுகளில் உள்ள வெஸ்டர்ன் டாய்லெட் அமைப்பிற்கும், பொது கழிவறைகளில் உள்ள வெஸ்டர்ன் டாய்லெட் அமைப்பிற்கும் வித்தியாசம் இருப்பதை நீங்கள் எப்போதாவது பார்த்தது உண்டா? அதாவது, பொது கழிவறைகளில் உள்ள டாய்லெட் சீட்களில் சிறிய இடைவெளி ஒன்று இருக்கும். அதுவே வீடுகளில் உள்ள டாய்லெட் சீட்டுகளில் எந்த இடைவெளியும் இருக்காது.



 

இதற்கான காரணம் சுகாதாரம் தான். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், பொதுமக்கள் சிலரிடம் இந்த வித்தியாசம் குறித்து கேட்டபோது அவர்களிடம் சரியான பதில் கிடைக்கவில்லை. சிலர் இதுகுறித்து பேசும்போது, “முன்பக்கமாக டாய்லெட் சீட்டை திறப்பதற்கு ஏதுவாக இதுபோன்று இருக்கலாம் அல்லது டாய்லெட் சீட் கவர் வருவதற்கு ஏதுவாக இதுபோன்று இடைவெளி விடப்பட்டிருக்கலாம்’’ என்று கூறினர்.



 .

ஆனால், பொது கழிவறைகளை அதிகமான மக்கள் பயன்படுத்துவார்கள் என்ற சூழலில், அவர்களது பிறப்புறுப்பானது டாய்லெட் சீட் மீது உரசுவதை தவிர்க்கும் வகையிலும், சிறுநீர் அதிகம் தெறித்து விடாமல் இருக்கவும் இவ்வாறு இடைவெளி விடப்படுகிறது.



 பாதுகாப்பாக 
 அதேபோல, இந்த இடைவெளி இருப்பதால் பெண்கள் எளிமையாக சுத்தம் செய்து கொள்ள உதவியாக அமையும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்து சர்வதேச பிளம்பிங் மற்றும் மெக்கானிக்கல்   கூறுகையில், “பெண்கள் கழிவறையை பயன்படுத்தி முடித்ததும், டாய்லெட் சீட்டில் கை படாமல் தங்களுடைய அந்தரங்க பகுதி மற்றும் அதையொட்டிய பகுதிகளை சுத்தம் செய்து கொள்ள இந்த இடைவெளி அமைப்பு உதவியாக இருக்கும்’’ என்று தெரிவித்தார்.


அதே சமயம், இதுபோன்ற இடைவெளி கொண்ட டாய்லெட் சீட்களை தயாரிப்பதற்கான உற்பத்தி செலவுகள் குறைவாக இருக்கும் என்றும், அதனால் பொது கழிவறைகள் என்று வருகிறபோது விலை குறைவான டாய்லெட் சீட் வாங்கி பொருத்தப்படலாம் என்றும் பொதுமக்களில் சிலர் கருதுகின்றனர்.


 

வெஸ்டர்ன் டாய்லெட்டில் இரண்டு பட்டன்கள் இருப்பது ஏன்: டாய்லெட் சீட் அமைப்பில் உள்ள வித்தியாசம் எப்படி பலருக்கு புரியாத ஒன்றாக இருக்கிறதோ, அது போலவே டாய்லெட்டில் உள்ள டூயல் பட்டன் அமைப்பு எதற்கு என்று புரியாத நிலை நிலவுகிறது. பொதுவாக டாய்லெட் பயன்படுத்தி முடித்த பிறகு, தண்ணீர் விட்டு சுத்தம் செய்வதற்காக, தண்ணீர் டேங்க் மீதுள்ள இரட்டை பட்டன்களில் ஏதோ ஒன்றை அழுத்தும் பழக்கம் மக்களிடையே உள்ளது.

 எந்த பட்டனை அழுத்தினாலும் தண்ணீர் வரும் என்ற நிலையில், பெரும்பாலான மக்கள் அதை பிரித்துப் பார்ப்பதில்லை. சிலர் பெரிய பட்டன் அழுத்துவதே சிறப்பானது என்ற நோக்கத்தில் எப்போதுமே அதை உபயோகம் செய்கின்றனர். ஆனால், உண்மையில் இந்த இரண்டுக்கும் வேறுபாடு உண்டு.





 தண்ணீர் டேங்கின் சிறிய பட்டனை அழுத்தும்போது குறைவான தண்ணீர் வரும். பெரிய பட்டனை அழுத்தும்போது நிறைய தண்ணீர் வரும். பொதுவாக சிறுநீர் கழிக்கும் சமயத்தில் ஃப்ளஷ் அவுட் செய்ய குறைவான தண்ணீர் போதுமானது. அந்த சமயத்தில் சிறிய பட்டனை உபயோகிக்க வேண்டும். அதுவே மலம் கழிக்கும் சமயத்தில் அதிக தண்ணீர் விட்டு ஃப்ளஷ் அவுட் செய்ய வேண்டும். அந்த தருணத்தில் பெரிய பட்டனை பயன்படுத்த வேண்டும்.




No comments:

Post a Comment