Saturday, 19 October 2024

வாஸ்து ,கண்ணாடிகள்,கடிகாரம்,பூட்டு, சாவி....

வீட்டின் பூட்டு, சாவிகளை எந்த திசையில் வைக்க வேண்டும் தெரியுமா? கண்ணாடிகள், கடிகாரங்களை எந்த திசையில் மாட்டி வைத்தால் பொருளாதாரத்தில் உயர்வு பெறலாம் தெரியுமா? இது குறித்தெல்லாம் வாஸ்து சாஸ்திரத்தில் விரிவாக சொல்லப்பட்டுள்ளது. இங்கே சுருக்கமாக பார்க்கலாம்.

வீட்டிலுள்ள பொருட்களையும் உரிய திசையில் வைக்க வேண்டும் என்று வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.. சில பொருட்களை அந்தந்த திசையில் வைத்தால்தான் அதற்குரிய பலன்களை பெற முடியும்.



கண்ணாடிகள்: அந்தவகையில், முகம் பார்க்கும் கண்ணாடியையும் தவறான திசையில், தவறான இடத்தில் வைக்கக்கூடாது. இது எதிர்மறை ஆற்றல்களை வீட்டில் தந்துவிடும்.


அதேபோல, 7 குதிரைகள் ஓடும்படியான ஓவியங்கள், வீட்டில் இருந்தால் நேர்மறை எண்ணங்களை உருவாக்கிவிடும்.. வீட்டில் செல்வ வளமும் அதிகரிக்கும் என்பார்கள். ஆனால், குதிரை ஓவியத்தை வீட்டின் நுழைவு வாயிலை நோக்கி தொங்க விடக்கூடாது. கிச்சன், பாத்ரூம் நோக்கியும் வைக்கக்கூடாது. இந்த ஓவியத்தை ஜன்னலுக்கு எதிர்புறத்தில் தொங்கவிட வேண்டும்.

கடை சாவி: வீடு, கடைகளின் சாவிகளையும் உரிய இடத்தில்தான் வைக்க வேண்டும். எப்போதுமே, பூஜையறையில் சாவியையும், பூட்டையும் வைக்கக்கூடாது. அப்படி வைத்தால் நேர்மறை ஆற்றலின் தாக்கத்தை குறைப்பதாகும்.

பூஜையில் அகல் விளக்கு உடைந்தால்? விளக்கு தவறி விழுவது நல்லதா? பழைய விளக்குகளை என்ன செய்வது? ஆன்மீகம்
"பூஜையில் அகல் விளக்கு உடைந்தால்? விளக்கு தவறி விழுவது நல்லதா? பழைய விளக்குகளை என்ன செய்வது? ஆன்மீகம்"
அதேபோல, வீட்டின் சாவியை வடகிழக்கு மூலையிலும் வைக்கக்கூடாது. சாவியை நாம் சுத்தம் செய்யாததால், அது மிகவும் அழுக்காக இருக்கும்... இந்த அழுக்கு சாவிகளை வடகிழக்கு மூலையில் வைத்தால், இன்னும் நிறைய கஷ்டம் வீட்டுக்கு வந்துவிடுமாம். எனவே, எப்போதும் பூட்டுகளை வடமேற்கு திசையில் வைப்பதும், சாவியை தென்மேற்கு திசையில் வைப்பதும் மங்களகரமானதாகவும் ஆசீர்வாதமாகவும் கருதப்படுகிறது.


வடக்கு திசை: கடிகாரங்கள் குறித்தும் வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.. கடிகாரங்களுக்கு உரியது கிழக்கு திசையாகும்.. அல்லது வீட்டில் கடிகாரம் இருக்க வேண்டிய திசை வடக்கு திசையாகும்.

காரணம், வடக்கு திசை குபேரன் ஆளும் திசையாகும்.. வடக்கு சுவற்றில் மாட்டும் கடிகாரம் தெற்கு திசையில் இருக்க வேண்டும். வடக்கு திசையிலுள்ள சுவற்றில் கடிகாரம் மாட்டினால் பொருளாதார நிலை உயரும்.. அதிலும்., வடக்கு திசை சுவற்றில் மாட்டி வைக்கும் கடிகாரம் வட்ட வடிவத்தில் இருப்பது அதிக பலனை கொடுக்கும்.


உரிய திசைகள்: ஒருவேளை, கிழக்கு, வடக்கு பக்க சுவர்களில் கடிகாரத்தை மாட்ட முடியாதவர்கள் மேற்கு திசையிலுள்ள சுவற்றிலும் கடிகாரத்தை மாட்டி வைக்கலாம். ஆனால் எக்காரணம் கொண்டும் தெற்கு சுவரில் கடிகாரத்தை மாட்டி வைக்கக்கூடாது.. தெற்கு திசை எமனின் திசையாகும்.. நம்முடைய முன்னோர்கள் இந்த திசையில் வாழ்வதால், அவர்களை தொந்தரவு செய்யும் வகையில் கடிகாரத்தை தெற்கு திசையில் மாட்டி வைக்கக்கூடாது என்கிறார்கள் வாஸ்து சாஸ்திர நிபுணர்கள்.


அதேபோல, செருப்புகளைகூட முறையாக வைக்க வேண்டும்.. செருப்பு வைக்கும் ஸ்டாண்ட் எப்போதும் மேற்கு திசையில் வைக்கலாம்.. அல்லது வீட்டின் தலைவாசலுக்கு வலது பக்கம் வைக்கலாம்.. மேற்கு திசை இல்லாமல போனால், வடமேற்கு அல்லது தென்மேற்கு திசைகளை பயன்படுத்தலாம். மேற்கு திசையில் செருப்புகளை வைப்பது, குடும்பத்தில் தீய பாதிப்புகளை குறைத்துவிடும்.




No comments:

Post a Comment