Sunday, 20 October 2024

சாஃப்ட் இட்லி....

சாஃப்ட் இட்லி வேணும்னா உளுந்த மாவு புளிக்கக் கூடாது!
அரிசி, உளுந்தை இப்படி அரைத்தால் சாஃப்ட்டான இட்லி கிடைக்கும்; இட்லி இனியவன் தரும் சூப்பர் டிப்ஸ் இங்கே

Soft Idli Recipe Soft Idli Batter Master Chef Mani tips in Tamil

மல்லிகைப் பூ போல் இட்லி சாஃப்ட்டாக வர மாவு அரைக்கும்போது இதை எல்லாம் கவனிக்க வேண்டும் என இட்லி இனியவன் கூறுகிறார்.

இட்லி சுவையாக சாஃப்ட்டாக செய்வதற்கான டிப்ஸ்களை வழங்கியுள்ளார். வீடியோவின்படி,  

நாம் வீடுகளில் மாவு அரைத்து இட்லி செய்யும் போது சில நேரங்களில், இட்லி பூ போல் சாஃப்ட்டாக இருக்கம், சில நேரம் கல்லு போல் இருக்கும். அதே அரிசி, அதே உளுந்து என்று இருந்தாலும் சில நேரங்களில் மாவின் தன்மை மாறிவிடுகிறது. 

இட்லிக்கு முக்கியமானது காலச்சூழல், அதாவது காலநிலை. புளிப்பு சரியான அளவில் இல்லாவிட்டால் இட்லி சுவையாக இருக்காது. இட்லி மாவு வெயில் காலங்களில் சீக்கிரம் புளித்துவிடும். மழை காலங்களில் சிறிது நேரம் எடுக்கும். பனி காலங்களில் கூடுதல் நேரம் தேவைப்படும். எனவே இட்லி மாவு அரைக்கும்போது இந்த விஷயங்களை எல்லாம் கவனிக்க வேண்டும்.


சாஃப்ட் இட்லி கிடைக்க, அரிசியையும் உளுந்தையும் ஒன்றாக அரைக்கக் கூடாது. அரிசியை தனியாக அரைத்து வைத்த பின்னர், இட்லி செய்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக, உளுந்தை ஊற வைத்து முக்கால் மணி நேரத்திற்கு பிறகு அரைத்து, அரிசி மாவுடன் கலந்து இட்லி செய்தாலே, இட்லி சுவையாக வரும். உளுந்த மாவு புளிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அரிசி மாவு மட்டும் புளித்தால் போதுமானது. 

கோடைக் காலத்தில் மாவு சீக்கிரம் புளிக்காமல் இருக்க, அரை மாவை பாத்திரத்துடன் தண்ணீர் உள்ள மற்றொரு பாத்திரத்தில் வைக்க வேண்டும். மாவு புளிக்கவில்லை என்றால், இளநீர் கலந்தால் சீக்கிரம் புளித்துவிடும்.

அடுப்பில் இட்லி வேகவைக்கும் போது, தண்ணீர் கொதிக்காமல் இட்லி வைக்கக் கூடாது, தண்ணீர் கொதித்த பின்னரே இட்லியை தட்டில் ஊற்றி வைக்க வேண்டும். 


இட்லி அரிசி முக்கால் பங்கு, சாப்பாட்டு அரிசி கால் பங்கு சேர்த்து ஊற வைக்க வேண்டும். 2 மணி நேரத்திற்குப் பிறகு நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். அரிசி அரைக்கும்போது தோல் நீக்கிய ஆமணக்கு விதைகளை சேர்த்துக் கொள்ளலாம். இதனை 8 முதல் 10 நேரத்திற்கு ஊற வைக்க வேண்டும்.

இட்லி செய்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக உளுந்து ஊற வைக்க வேண்டும். இதனுடன் சிறிது வெந்தயம் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஊறிய பின்னர் உளுந்து அரைத்து இட்லி மாவுடன் கலந்துக் கொள்ள வேண்டும். இதனை இட்லியாக ஊற்றினால் சாஃப்ட்டாக வரும். 




No comments:

Post a Comment